உலகத்தின் பத்து சிறிய போர்கள்

Alfred_Theodore_Joseph_Bastien_-_Canadian_Gunners_in_the_Mudபோர் எப்போதும் கொடுமையானது தான். ஒவ்வொரு முறை போர் துவங்கும் போது அன்பு அழத்துவங்குகிறது. நாம் நிறைய போர்களைப் பற்றி படித்திருப்போம்.போருக்கான காரணங்கள் பலப் பல இருந்தாலும் எல்லாவற்றையும் பேராசை என்கிற ஒற்றைக் கயிறில் கட்டிவிடலாம். பதிவு செய்யப்பட்ட வரலாறில் இது வரை நடந்த போர்களில் மிககுறுகிய காலத்தில் முடிவுற்ற போர்களைப் பார்ப்போம். இதில் கலகங்கள், சுதந்திரப் போராட்டங்கள், உள் நாட்டு யுத்தங்கள், உலகப்போரில் நடந்த யுத்தங்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

 10.  ஃபால்க்லாந்து போர்

ஆண்டு: 1982

பங்கேற்ற நாடுகள்: அர்ஜெண்டினா vs பிரிட்டிஷ்

முடிவு: பிரிட்டிஷ் வெற்றி

போர் நடைபெற்ற காலம்: 42 நாட்கள்

ஃபால்கலாந்து தீவுகள், தெற்கு ஜார்ஜியா,தெற்கு சாண்ட்வெஜ் தீவுகள் ஆகியவை தெற்கு அட்லாண்டிக் கடலில் இருக்கின்றன. இது முன்பு அர்ஜெண்டைனாவிற்கு சொந்தமாக இருந்தது.பிறகு 1833 ஆம் ஆண்டு பிரிட்டிஷின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதைத் திரும்ப பெற அர்ஜெண்டைனா 1982 ஆம் ஆண்டு  மார்ச் 19 ஆம் தேதி  தனது படைகளுடன் தெற்கு ஜார்ஜியாவிற்குள் நுழைந்தததைத் தொடர்ந்து போர் மூண்டது. இப்போரை தங்களது சுயமரியாதையை மீட்டெடுக்கும் விஷயமாக அர்ஜெண்டினா பார்த்தது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர்  மார்க்ரெட் தாட்சர் தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் வாய்ப்பாக இப்போரை எண்ணி பெரும் படைகள் அனுப்பினார். ஜூன் 14ல் அர்ஜெண்டைனா சரணடைந்தது. 1983 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்ரெட் தட்சர் வெற்றியடைந்தார்.

9போலிஷ்லித்துவானியன் போர்

ஆண்டு:1920

பங்கேற்ற நாடுகள்: இரண்டாம் போலிஷ் குடியரசு vs லித்துவானியா

முடிவு: போலிஷ் வெற்றி

போர் நடைபெற்ற காலம்: 37 நாட்கள்

போலிஷ் (போலாந்து) மற்றும் லித்துவானியா ஆகிய இரு நாடுகளும் ஆஸ்திரியா, ப்ரஸ்யா மற்றும் ரஷியா போன்ற நாடுகளிடம் அடிமையாகக் கிடந்தன.முதல் உலகப் போர் முடிவுற்றவுடன் இவ்விரு நாடுகளுக்கும் விடுதலை கிடைத்தது. அவர்களின் விடுதலைப் போரில்  விலினஸ்,சுவாக்கி,அகஸ்டவ் ஆகிய நகரங்களைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த போர் நடைபெற்றது. போரில் போலாந்து வெற்றி பெற்றது ஆனாலும் அதற்கு சர்வதேச அங்கிகாரம் கிடைக்கவில்லை.பிறகு மார்ச் 24 1922 ஆம் ஆண்டு விலினஸ் நகரத்தில் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் படி போலாந்துடன் இணைக்கப்பட்டது. அந்த தேர்தலை லித்துவானியா ஏற்கவில்லை. பிறகு இவ்விரு நாடுகளும் சோவியத் யூனியன் கீழ் சென்று மறுபடியும் பிரியும் போது விலினஸ் லித்துவானியாவிற்கு கொடுக்கப்பட்டது. இப்போது லித்துவானியாவின் தலைநகர் விலினஸ் தான்.

8.  இரண்டாம் பால்டிக் போர்

ஆண்டு: 1913

பங்கேற்ற நாடுகள்: பல்கேரியா vs க்ரீஸ், செர்பியா, மாண்டினீக்ரோ, ரொமேனியா, ஒட்டமன் (துருக்கி)

முடிவு: பல்கேரியா தோல்வி

போர் நடைபெற்ற காலம்: 32 நாட்கள்

கிரீஸ்,செர்பியா,மாண்டினீக்ரோ, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்ந்து முதலாம் பால்கன் போரில் ரொமேனியா மற்றும் ஒட்டமான் ஆகிய நாடுகளுக்கு எதிராக நின்றன. இதில் ரொமேனியா -ஒட்டமான் அணி தோல்வியுற்றது. இப்போரின் முடிவில் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற செர்பியா பிராந்திய வல்லரசாக மாறியது. மாசிடோனியாவில் காலுன்றி நின்றிருந்த பல்கேரியாவிற்கு செர்பியாவின் செயல் பாடுகள் அச்சத்தை விளைவித்தன. அதனால் படைகளை அங்கு குவித்தது. இவ்வேளையைப் பயன்படுத்திக் கொண்டு ரொமேனியா ஜூன் 27 ஆம் தேதி எந்த பாதுகாப்பு ஏற்பாடுமற்ற பல்கேரியாவின் பகுதியான தெற்கு டோப்ருஜாவைக் கைப்பற்றி வடக்கு பல்கேரிய பகுதிகளை நோக்கி முன்னேறியது. முதல் போரில் தோற்ற ஒட்டமானும் பல்கேரியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க போர் அறிவித்தது. க்ரீஸும், மாண்டினீக்ரோவும் பல்கேரியாவிற்கு எதிராக போரில் குதித்தன. பல்கேரியா வீழ்ந்தது. இப்போர் முடிந்து பத்து மாதங்களில் முதலாம் உலகப் போர் தொடங்கியது.

7.  கிரேக்க-துருக்கி போர்

ஆண்டு: 1897

பங்கேற்ற நாடுகள்: கிரேக்கம் vs ஒட்டமான் (துருக்கி)

முடிவு: ஒட்டமான் (துருக்கி) வெற்றி

போர் நடைபெற்ற காலம்: 30 நாட்கள்

கிரேக்க மக்கள் நிறைந்த க்ரீடே என்கிற பகுதி ஒட்டமான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 1896 ஆம் ஆண்டு ஆட்சியாளர்கள் தங்களை பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று அம்மக்கள் கலகம் செய்தனர்.ஆதலால் ஜனவரி 1897 ல் கிரேக்கம், க்ரீடே பகுதியைக் கைப்பற்ற போர் தடுத்தது. ஐரோப்ப நாடுகளின் உதவியுடன் ஒட்டமான் மிகவும் எளிதாக வென்றது. அதன் பின் கிரேக்கத்திடம் இருந்து  இழப்பீட்டுத் தொகையும் வாங்கிக் கொண்டது

6. சீனோ-வியட்னாம் போர்

ஆண்டு: 1979

பங்கேற்ற நாடுகள்: சீனா vs வியட்னாம்

முடிவு:இருநாடுகளுமே தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று கூறுகின்றன

போர் நடைபெற்ற காலம்: 27 நாட்கள்

1978 ஆம் ஆண்டு வியட்னாம் கம்போடியாவின் மீது படை எடுத்து சீனாவுக்கு எதிரான போல் போட் என்கிற இடதுசாரி அதிபரை நியமித்தது. அதற்கு பதிலடியாக சீனா இப்போரைத் தொடங்கியது. ஒரு மாத காலத்திற்கு பிறகு சீனா தனது படையை தானே திரும்ப அழைத்துக் கொண்டது. இப்போது இருநாடுகளுமே தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று கூறுகின்றன.

5. ஜார்ஜியன்-ஆர்மீனியன் போர்

ஆண்டு: 1918

பங்கேற்ற நாடுகள்: ஜியார்ஜியா vs ஆர்மீனியா

முடிவு: போருக்கு காரணமான இடத்தில் இரு நாடுகளின் கூட்டாட்சி நடைபெருகிறது

போர் நடைபெற்ற காலம்: 24 நாட்கள்

லோரி,ஜவகேதி,போர்சலோ ஆகிய பகுதிகளில் ஜியார்ஜியர்களும் ஆர்மீனியர்களும் வெகு காலமாக வாழ்ந்து வந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் ஆர்மீனியர்கள் அங்கு அதிகமாக குடியேறினார்கள். முதலாம் உலகப் போரில் இப்பகுதிகள் ஒட்டமானின் வசம் சென்றன. அவர்கள் விட்டுச் சென்ற பின் இரு நாடுகளும் இப்பகுதிகளுக்கான உரிமையைக் கோரின. இது டிசம்பர் 7 ,1918 ல் போராக வெடித்தது. வெற்றி தோல்வி இருபக்கமும் மாறி மாறி வந்தது. கடைசியில் பிரிட்டன் தலையிட்டு இரண்டு நாடுகளின் கூட்டாட்சி நடக்கும் என்று அறிவித்தது. 1920 ஆம் ஆண்டு அர்மீனியா தன்னை சோவியத் யூனியனில் இணைத்துக் கொள்ளும் வரை கூட்டாட்சி தொடந்தது.

4. செர்போ-பல்கேரியன் போர்

ஆண்டு:1885

பங்கேற்ற நாடுகள்: செர்பியா vs பல்கேரியா

முடிவு: பல்கேரியா வெற்றி

போர் நடைபெற்ற காலம்: 14 நாட்கள்

இப்போர் யார் பெரியவன் என்கிற ஈகோவினால் ஏற்பட்ட போர். நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய போர், நவம்பர்  28 ஆம் தேதி முடிவுற்றது. அமைதி ஒப்பந்தம் பிப்ரவரி 19 1886 ஆம் தேதி பர்காரஸ்ட் என்கிற இடத்தில் கையெழுத்தானது. இப்போர் செப்டம்பர் 6,1885 ஆம் ஆண்டு ஒன்றினைந்த பல்கேரியாவை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள உதவியது. இப்போரால் பல்கேரியா உடன் மற்ற பக்கத்து நாடுகள் போர் எண்ணங்களை விட்டு உறவாக இருக்க உதவியது.

3. இந்தோ-பாக்கிஸ்தானி போர்

ஆண்டு:1971

பங்கேற்ற நாடுகள்: இந்தியா vs பாகிஸ்தான்

முடிவு: வங்கதேசம் எனும் புது நாடு தோன்றியது

போர் நடைபெற்ற காலம்: 13 நாட்கள்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சுதந்திரம் பெறும் போது பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டு பகுதிகளாக சுதந்திரம் பெற்றது. மேற்கு பாகிஸ்தான் மக்கள் கிழக்கு பாகிஸ்தான் மக்களை ஒடுக்கியும் ஒதுக்கியும் வந்தனர். 1970 ஆம் வருடம் நடந்த தேர்தலில் கிழக்கு பாக்கிஸ்தானைச் சேர்ந்த அவாமி கட்சி மொத்தம் உள்ள 313 இடங்களில் 167 இடங்களைக்  கைப்பற்றியது.இதை மேற்கு பாகிஸ்தான் கட்சிகளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதனால் குழப்பங்கள் ஏற்பட்டன.கிழக்கு மக்கள் பாக்கிஸ்தானை விட்டு தனியாக பிரிந்து செல்லவேண்டும் என்று விரும்பினர். பாக்கிஸ்தான் எதிரி நாடு என்பதால்  அதை பலவீனப் படுத்தும் பொருட்டு தனிநாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு கொடுத்து டிசம்பர் 3 ஆம் தேதி 1971 ஆம் ஆண்டு போரைத் தொடங்கியது. டிசம்பர் 16 ல் பாக்கிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு வங்கதேசம் தனிநாடாகப் பிரிந்து போக அனுமதி அளித்தது.

2. ஆறு நாள் போர்

ஆண்டு:1967

பங்கேற்ற நாடுகள்: இஸ்ரேல் vs எகிப்து,சிரியா,ஜோர்டான்,ஈராக்

முடிவு: இஸ்ரேல் வெற்றி

போர் நடைபெற்ற காலம்: 6 நாட்கள்

தனது நட்பு நாடான சிரியாவின் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேல் கூறியதால் எகிப்து, ஆயிரம் டாங்கிகளையும் ஒரு இலட்சம் வீரர்களையும் சினாய் தீபகற்பத்தின் எல்லையில் குவித்து இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்று சேரச் சொல்லி அழைப்பு விடுத்தது.ஜூன் 5 ஆம் தேதி இஸ்ரேல் எகிப்தின் மீது தாக்குதல் தொடுத்து அதன் விமானப் படைக்கு பெரும் சேதம் விளைவித்தது. இதற்கிடையில் ஜோர்டான் மேற்கு ஜெருசலத்தையும் நேதன்யாவையும் தாக்கியது. பலமான வான் படை கொண்ட இஸ்ரேல் மிக எளிதாக அத் தாக்குதலை முறியடித்தது. போரின் முடிவில் கிழக்கு ஜெருசலம், காஷா ஸ்டிரிப்,சினாய் தீபகற்பம், கோலான் ஹைட்ஸ்.மேற்கு பேங்க் ஆகிய பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.இதன்  மூலம் இஸ்ரேல் 300 கிமீ தெற்கிலும், 60 கிமீ கிழக்கிலும், 20 கிமீ வடக்கிலும் விரிவடைந்தது.

1.  ஆங்கிலோ-ஜாஞ்சிபார் போர்

ஆண்டு:1896

பங்கேற்ற நாடுகள்: பிரிட்டிஷ் vs ஜாஞ்சிபார்

முடிவு: பிரிட்டிஷ் வெற்றி

போர் நடைபெற்ற காலம்: 45 நிமிடம்

ஆகஸ்டு 27 1896 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போர் தான் உலகத்திலேயே மிக குறுகிய காலத்தில் முடிவுற்ற போர். ஆங்கிலேயருடன் நட்புறவாடி வந்த ஜாஞ்சிபரின் மன்னரான சுல்தான் ஹமத் பின் துவானி

ஆகஸ்ட்டு 25ம் தேதி இறந்தார். உடனே அவரது மருமகனான காலிட் பின் பார்கேஷ் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் ஆங்கிலேய அரசு தனக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய ஹமுத் பின் முகமுதுவை பரிந்துரைத்தது ஆனால் பர்கேஷ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஐந்து போர் கப்பலையும் அவர் துறைமுகத்தில் நிறுத்தினார். ஆங்கிலேயர்களும் தங்களது படையை நிறுத்தினர். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய போர் 9.45க்கு முடிவுற்றது. பார்கேஷ் ஜெர்மனியிடம் தஞ்சம் புகுந்தார்.பிறகு அங்கிருந்து தப்பி தர் ஈஸ் சலீம் என்கிற இடத்தை 1916ல் பிரிட்டிஷ் கைப்பற்றும் வரை அங்கு வாழ்ந்தார். பிறகு அவர் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டு மொம்பாசா என்கிற இடத்தில் தான் இறக்கும் வரை வாழ்ந்தார். ஆங்கிலேயர்கள் தாங்கள் போருக்காக செய்த செலவை ஜாஞ்சிபார் நாட்டிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

About புதிய பரிதி

நிறுவுவதற்கு ஏதும் அற்றவன்