எகிப்து: தொடர்கதையாகும் படுகொலைகள் …

நேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள். தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள். தலை, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்த கதை அது.

எப்படிப்பார்த்தாலும், 200 புகைப்படங்களுக்கு மேல் இருக்கும். நெஞ்சை அதிர வைக்கும் அந்தப் புகைப்படங்கள் கெய்ரோவை மையமாகக் கொண்டு செயல்படும் புகைப்பட இதழியலாளர் முஸைப் எல்ஸாமியால் எடுக்கப்பட்டவை. கடந்த புதன் அன்று தான் எடுத்த புகைப்படங்களுக்கு ‘காணா துயரம்!”- என்று அவர் பெயர் சூட்டியுள்ளார்.

“இறந்தோரின் சடலங்கள் போர்வைகளால் மூடி வைக்கப்பட்ட காட்சிகள்… குற்றுயிரும் குலையுயிருமாய் சுமந்து வரப்படுபவர்கள், நான் அந்த கொடூர காட்சிகளை காண முடியாமல் தவிர்த்துக் கொண்டேன்!”- என்கிறார் அவர் டுவிட்டரில்.

ஆம்.. எகிப்தின் மக்கள் எழுச்சியின் இன்றைய நிலை அது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மூர்ஸி நீக்கப்பட்டு.  ராணுவ சர்வாதிகாரி ஆட்சியில் அமர்ந்தபின் இரும்பு கரங்களைக் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அவை. கிட்டதட்ட 700 பேர் அதுவும் ஜனநாயகம் வேண்டி அறவழியில் போராடிக் கொண்டிருந்த நிராயுதபாணியானவர்கள்.. கொடூரமான முறையில் சுட்டும், எரித்தும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிமானோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது சரியாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொல்லுவதற்கு பழக்கப்பட்டவர்களிடம் வேறு எதைதான் எதிர்பார்க்க முடியும்? மக்களை ஒடுக்குவதாக துப்பாக்கி ஏந்திக் கொண்டிருக்கும் அடிமைகள்தானே அவர்கள்!

புனித வெள்ளிக்கிழமை. முஸ்லிம்கள் பெருமளவில் தொழுகைக்காக கூடும் நாள். உயிர்ச் சேதம் இன்னும் பெருமளவில் இருக்கும் என்று அச்சம் எழுகிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு துரதிஷ்டநாளாக இந்த சம்பவ நாள் விளங்கியது. நாவளவில் கடும் கண்டனம் தெரிவித்த கையோடு அவர் எகிப்துடனான கூட்டு ராணுவ ஒத்திகையை ரத்து செய்துள்ளார்.

ஆனாலும் அவர் எகிப்தில் நடக்கும் படுகொலைகளை தடுத்து நிறுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எகிப்திய ராணுவத்துக்கு ஒரு பில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கியவர் படுகொலைகளை தடுத்து நிறுத்துவார் என்பதை எதிர்பார்க்கவும் முடியாதுதான். பெரும் முதலீடுகளில் மனித உயிர்களை பலி வாங்குவதுதான் அமெரிக்க வரலாறு என்பது நிதர்சன உண்மை. இதற்கு ஒரு பெயர் இருக்கிறது, அது நவீன தாராளமயம்.

 • எகிப்தின் இன்றைய அரசியல் நிலையை புரிந்துகொள்ள ஆழ்ந்த வாசிப்பு தேவைப்படுகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் விளக்கமான கட்டுரை இயற்ற முயற்சிக்கவும். பொதுவாக, கொலைகள் கண்டனத்துக்குறியவை என்பதை இங்கே பதிவு செய்வது சிறந்தது.

 • shariharan

  எகிப்தில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை,, முர்சியைப் பார்த்தால் மோடி மாதிரி தெரிகிறது. ஜனநாயகம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். இப்போது ராணுவப்புரட்சி செய்தவர்கள் யார்? முர்சி வந்தவுடன் ராணுவத்தலைமையில் மாற்றம் செய்தாரே! பலனலிக்கவில்லையா?

 • SIRAJ ISMAIL

  அரபு வசந்தம் என்றும் முல்லைப்பூ புரட்சி என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்ட மேர்க்காசிய, ஆப்பிரிக்க பகுதிகளில் சில நாடுகளில். நடந்த ஜனநாயகத்திற்க்கான மக்கள் திரள் போராட்ட்ங்களை மனமில்லா மனதோடு பொறுத்துக்கொண்ட அமெரிக்க இஸ்ரேலிய நாசகார சக்திகளின் எதிர்புரட்சி நடவடிக்கையின் பலனே இன்றைய எகிப்திய நிலைமை.

  முர்சியும் முஸ்லிம் பிரதர் ஹுட் கட்சியும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தங்கள் கொள்கைகளாக கொண்டவர்கள் என்றாலும் ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

  அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்க முயர்சித்தவர்கள் பிற்போக்கு ராணுவ சர்வாதிகாரிகளை கைப்பாவையாக பயன்படுத்தினர்.

 • Kevin Matthews

  அப்படியே போராட்டகாரர்கள் தாக்கி நாசப்படுத்திய சர்ச்களை பற்றியும் ஒரு வார்த்தை எழுதி இருக்கலாம்.

  • விவாதங்கள் – அடையாளங்களை நோக்கி திரும்புவது ஏற்கத் தகுந்ததல்ல … எந்த தனிப்பட்ட நியாங்களும், ஒரு உயிர்க் கொலையைக் கூட நியாயப்படுத்திட முடியாது.

   • TSri

    ஆக்கமே ஒரு அடிப்படை மதவாதியின் மத ஆட்சியை நிறுவும் கனவு கலைந்துவிட்டதே என்ற கவலையில் எழுதபட்டது.