தனியுரிமையின் முக்கியத்துவம் – “டெக்ஸ்ட் செக்யூர்”

முன்பொரு காலத்தில் எண்ணெய், அணு ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவைகள் மட்டுமே வளங்களாகக் கருதப்பட்டன. ஆனால், இன்றைய சூழலில் தரவு எனப்படும் Data தான் மிக முக்கியமான வளமாகக் கருதப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய மாற்றத்தில், இந்த நூற்றாண்டில் “தரவு” மக்களை கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது. இப்பொழுது தரவை (Data) வைத்திருப்பவன்தான் மேலோங்கி நிற்கிறான். அதை அடைய பலரும் முயற்சிக்கிறார்கள். அப்படியொரு முயற்சிதான் NSA – PRISM. “கட்டற்ற மென்பொருள்” எனப்படும் “Free Software” மக்களின் பக்கம் […]

உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

  உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super Computing Conference) ஜூலை மாதம் ஜெர்மெனியில் உள்ள பிரான்க்புரட் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் அதிவேக கணினியின் பட்டியலை லிப்னக் (LINPACK) […]

உங்களுடன் இருக்கும் உளவாளியை வெளியேற்றுங்கள்!

அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டும், முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், தங்கள் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் இழந்து வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வேண்டியது நம் கடமை.

மக்கள் இணையம் – மக்களால், மக்களுக்காக!

வெகுஜன ஊடகங்களான தினசரி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிற்கும், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையத்துக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு காரணமாகத்தான் இணையத்தில் நாம் அனைவரும் நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அதனைச் செலவிடுகிறோம். வேறுபாடு என்று நாம் குறிப்பிடுவது எதனை? நாளிதழில் நாள்தோறும் வெளிவரும் செய்தினை படிக்கிறோம். வானொலியில் செய்திகள், பாடல்கள், வர்ணனைகளைக் கேட்கிறோம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். இந்த மூன்றிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், மக்களாகிய நாம் வெறும் பார்வையாளராக (படிக்கவோ, கேட்கவோ அல்லது பார்க்கவோ) மட்டுமே இருக்கிறோம். நம்மால் நேரடியாக உடனுக்குடன் அதில் பங்குக் கொள்ள முடியாது. தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளலாமே […]

நூலக மேலாண்மையில் கட்டற்ற மென்பொருள்

கோகா என்னும் கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள் (Free Software) கொண்டு இலவசமாக தமிழகத்திலுள்ள பொது நூலகங்களின் அனைத்து செயல்பாடுகளையும் எளிதில் கணினிமயமாக்க முடியும்

மாற்றுவில் எழுத..

WordPress என்பது உலகெங்கும் பல மில்லியன் கணக்கான மக்களால் அழகு ததும்பும் வகையிலும், பார்த்தவுடனே ஈர்க்கத்தக்கதாக வலைத்தளங்களையும் (Websites), வலைப் பூக்களையும் (Blogs) உருவாக்க உதவும் கட்டற்ற மென்பொருள் அமைப்பாகும்.

‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் – இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.

பெடோரா-Fedora : கட்டற்ற 10-வது ஆண்டில்!

கணினிப் பயன்பாட்டில் ஏகபோகத்தை (monopoly) சமூகப் பங்களிப்பால் உடைத்து அதைவிட மேலான மாற்று ஒன்றை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது பெடோரா (Fedora). பெடோரா (Fedora) ஒரு GNU லினக்ஸ் (GNU/Linux)  வழங்கல்களாகும். இது ரெட் ஹாட்டினால் (Red Hat) ஆதரவளிக்கப்பட்டு சமூகப் பங்களிப்பினால் (Community Development) மேம்படுத்தப்பட்டதாகும். 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட பெடோரா நேற்று தனது 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. தனது 10 ஆம் ஆண்டு தொடக்கத்தை Fedora 20 (Heisenbug) என்ற  […]

find கட்டளை

கட்டற்ற மென்பொருளின் ஆரம்ப நிலை கற்றலுக்கான ஒரு‍ சிறிய முயற்சி. இது‍ ஆமாச்சு என்பவரால் கணியம் இணைய இதழில் வெளியான கட்டுரை.. GNU find ஒரு திறம் வாய்ந்த கட்டளை வரி பயனமைப்பு (Command Line Utility) ஆகும். இது கோப்புகளையும், அடவைகளையும் (Files and Folders) படிநிலை மரவமைப்பாக (Hierarchical Tree Structure) தேட பயன்படுகிறது. KDE மற்றும் GNOME-களில் உள்ள வரைகலை தேடல்களுக்கு இதுவே பின்னிலை (Back End) ஆகும். எனினும் find தொடக்கத்தில் பயன்படுத்த […]