‘தண்ணி..தண்ணி…’

திருப்பூரின் தலையெழுத்தை ரோலர்க்கோஸ்டர் பயணத்தைப் போல ,ஏற்ற இறக்கங்களுடன் மாற்றியமைத்த ,சாயத் தொழிற்சாலைகளைப் பற்றி,அவற்றின் வருகையைப் பற்றிய தகவல்களை திருப்பூரைச் சேர்ந்த திரு.சோமனூர் செல்லப்பன் தனது ‘தண்ணி..தண்ணி..’ சிறுகதையில் ஆவணப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் கதையும்,ஒரு புளியமரத்தின் கதையும்(சு.ரா) கிட்டத்தட்ட ஒன்று தான்.அந்த பூரம் மகாராஜாவின் ஆணையின் பேரில் புளிக்குளம் மண் மூடி சமநிலைப்பட்டவுடன்,புளியமர ஜங்சனாக பெரிய டவுணாக பரிணமித்ததே!!! அது போல குலாம் காதர் என்பர்,கொல்கத்தா சென்றிருந்த போது,ஒரு ரிப்பேரான நிட்டிங் மிஷனை திருப்பூர் கொண்டு வந்து,பின்னலாடை நூற்க […]

தமிழில் ’மொசில்லா உலாவி’, கூட்டு உழைப்பின் மகத்துவம் …

மொசில்லா உலாவி தமிழில் தன்மொழியாக்கம் செய்யப்பட்டு‍ சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் நோக்கங்கள், பயன்பாடுகள் மற்று‍ம் அதை செயல் வடிவில் கொணர்ந்த நடைமுறைகள் பற்றி தெரிந்து‍ கொள்வது‍ அவசியம். உலாவி என்பது ஒரு கணினி மென்பொருள். இது‍ நாம் அனைவரும் அறிந்ததே. இன்று‍ ஏகபோகம், உற்பத்தியின் மூலம் கிடைக்கும் அதீத லபாம், உற்பத்தியின் சந்தை இவைகளைக் கணக்கில் கொண்டு‍ தான் இன்றைய உலக சந்தை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் சொத்து‍ அது‍ அறிவுசார் சொத்தாக இருந்தாலும் சரி வேறெதுவாக […]

ஹிரோஷிமா – ஃபுக்கூஷிமா…

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாகி அமெரிக்க அணுகுண்டின் தாக்குதலுக்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட ஹிரோஷிமாவின் அணுகுண்டு ’சிறு பையன்’ (Little Boy)  என அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்பட்டது. நாகசாகியின் குண்டு அமெரிக்கர்களால் ‘கொழுத்த மனிதன்’ என அழைக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டு 64 கிலோ U235 எனப்படும் யுரேனியம் 235 எனும் யுரேனியத்தின் ஓரகத் […]

மின்சாரம் மக்களின் உரிமை! அதை அளிப்பது அரசின் கடமை!!

சுதந்திர இந்தியாவில் மின் துறையின் வளர்ச்சி மகத்தானது. மின்சார உற்பத்தி 1326 மெகாவாட்டில் துவங்கி இன்றைக்கு 2,11,766 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து நிற்கும் துறையாக இந்திய மின்துறை வளர்ந்து உள்ளது. மின் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் மின்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் தொடரமைப்பு பாதை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3708 சுற்று கிலொ மீட்டரில் துவங்கி மூன்று லட்சம் கிலொ மீட்டராக விரிவடைந்து உள்ளது. இவை அனைத் தும் மின் துறை பொதுத்துறையாகவே இருந்த காரணத்தினால் […]

பொட்டாசியமும் புளுட்டோனியமும்…

பொட்டாசியம் பரவலாக நாம் எல்லோரும் கேள்விப்பட்ட பெயர்தான். ஆனால் கூடங்குளமும் புளுட்டோனியமும் பொட்டாசியத்தை மறக்கச் செய்துகொண்டு இருக்கின்றன. பொட்டாசியம் ஒரு முக்கியமான தனிமம். தாவரங்கள் மற்றும் மனிதன் உட்பட்ட விலங்கினங்களின் நல்வாழ்வுக்கு அவசியம். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து (NPK) என அழைக்கப் படும் மூன்று முக்கியமான சத்து/உரம் வரிசையில் கடைசியாக வரும் சாம்பல்சத்து பொட்டாசியம். சாதாரணமான பொட்டாசியம் (K39) அணு நிறை 39 கொண்டது. இரண்டு பொட்டாசிய ஓரகத் தனிமங்கள் (Isotopes) (K40 மற்றும் K41) இருக்கின்றன. […]

எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 …

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிட முடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்களில் வெளிவராத பதிவுகள் கூட பலரால் எழுதி வெளி வருவதைக் காண முடிகிறது. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும் படியாக இருக்கிறதென்றால், […]

சூரிய ஆற்றலே ஒரே தீர்வா? …

கூடங்குளமும் ஃபுக்குஷிமாவும் சூரிய மின்னுற்பத்தி குறித்த கவனத்தைக் குவித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் வழக்கம்போல மேலெழுந்தவாரியான புகழ் பாடலாகவும் அணு ஆற்றலை தவிர்க்க வியலாது எனும் கருத்தை மறுப்பதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. உண்மையில் சூரிய மின்னுற்பத்தி என்பது அணு மின்னுற்பத்திக்கோ அல்லது படிம எரிபொருள்கள் கொண்டு நடக்கும் அனல் மின்னுற்பத்திக்கோ மாற்றா என்பது சற்று ஊன்றி கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும். சூரிய ஆற்றல் குறித்த சில விவரங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படவில்லை. அதற்கு சில காரணங்கள் […]

இது தான்டா காதல் ..

காதல் என்றால் என்ன என்று நாம் உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முன் நமது திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்து விடுகின்றன. “அண்ணே … எப்படிணே காதல் வருது? “ என அப்பாவி செந்திலாக கேள்வி கேட்டால் நமது திரைப்படங்கள் சொல்லும் பதில் ” ஒரு பெண்ணைப் பார்த்ததும் அந்த காதல் நம்மள போட்டு கும்மு கும்முன்னு கும்மும்”, “காதலுக்கு உருவம் எதுவும் தேவையில்லை மனசு தான் முக்கியம்” , “காதலுக்கு காரணமே சொல்ல முடியாது” என்று மக்களைக் குழப்பி […]

மெக் டொனால்டை எதிர்த்துப் போராடும் சிறுகிராம மக்கள்….

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தண்டேனங் என்கிற மலைப்பிரதேசம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் காடுகள் சூழ்ந்த சிறுசிறு மலைகள்தான் அப்பகுதியின் அழகு. அப்பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் சிறிய அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தண்டேனங் சிகரத்தின் மீது நின்றுபார்த்தால், சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் அழகுற காட்சியளிக்கும். பெல்கிரேவ், எமரால்டு மற்றும் ஜெம்புரோக் போன்ற பகுதிகளுக்கு நடுவே மலை இரயில்களில் பயணிப்பதும் சுற்றுலாவாசிகளுக்கு சுகமான அனுபவமாக இருக்கும். 2085 பேர் […]