உருகும் புவியின் மீது தொடரும் சூதாட்டம் !

“உலகிலுள்ள பெரும்பாலான கடல்களும் இன்னபிற இயற்கை அமைப்புகளும் பருவநிலை மாற்றத்தால் கடும் விளைவுகளைச் சந்தித்து வருவதை உலகின் அனைத்து கண்டங்களிலும் மேற்கொண்ட அறிவியல்பூர்வ ஆய்வுமுடிவுகள் ஆதரங்களுடன் உறுதி செய்கின்றன. புவியின் வெப்பநிலை உயர்வே இப்பாதிப்புகள் அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றன.”

தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் தாதுக்கள் அடங்கிய மணல் அள்ளுவதில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றிருக்கிறதா? என விசாரணை நடந்துள்ளது. தமிழக வருவாய்த்துறை ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் குழு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் அறிக்கைகள் வருவதற்கு முன்பாகவே இந்த அறிக்கை முறைகேடுகளையும் விதிமீறல்களையும் தடுப்பதற்கான வழிகளை முன்மொழியும் என்று ஒரு பிரிவினரும் வழக்கம் போலவே இதனால் எவ்வித பலனும் இருக்கப்போவதில்லை என மற்றொரு பிரிவினரும் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். […]

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 2

 வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1 புதியதாக படிப்பவர்கள் இந்த முதல் பகுதியை படித்துகொள்வது நலம். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மேன்மேலும் உற்பத்தியில் உபரியை உருவாக்கி மானுடக் கூட்டத்தில் ஒரு சிறுபகுதியாவது நீண்டகால நோக்கில் மானுட வாழ்க்கையையும் அது நடைபெறும் சூழலையும் ஊன்றிக் கவணித்து அதில் மாற்றம் கொண்டுவர சிந்திக்கவும் செயல்படவும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. இந்த சாத்தியங்கள் காலம் காலமாக தமது காலத்திற்குரிய வரம்புகளோடு மானுட வாழ்க்கையையும் அது இயங்கும் சூழலையும் […]

காலநிலை மாற்றம்- ஒரு தேடல்

இந்தியாவின் பேரழிவு என்று நாடே அல்லோலகப்பட்ட அந்த தருணங்கள்… வீடு திரும்பிய சொந்தங்களின் திரில் அனுபவங்கள்… இறந்தவர்களுக்கும் தொலைந்தவர்களுக்கும் புரியாத கணக்குகள் என இன்றும் தொடரும் அழுகுரல்கள்… இந்தியாவின் ஒரு மூலையில் இயற்கை லேசாய் ஒரு ஆட்டம் போட்டுப் பார்த்தது… மேக வெடிப்பு, பனிப்பாறைகளின் திடீர் பிரவாகம் இவற்றின் எதிரொலிதான் உத்திரகாண்ட் பேரழிவு … சில ஆண்டுகள் மட்டுமே விதைத்த விதைகளுக்கு இழப்பீடாக பல ஆண்டுகளுக்கு அறுவடை செய்யப்போகிறோம் நாம்… இது தானே நிசப்தமான உண்மை. இதுகுறித்து ஒருநாள் […]

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1

வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் மீண்டும் சிறு அளவிலான விவசாயம், வேட்டை, காய் கனிகளை சேகரித்து உண்டு வாழும் ‘இயற்கையை ஒட்டிய’ வாழ்க்கை என்பதைத் தவிர […]

இரண்டாம் உயிர்கொல்லி …

மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாக இரண்டு நோய்கள் உள்ளன. ஒன்று எய்ட்ஸ் மற்றொன்று புற்றுநோய். புற்றுநோயை உண்டாக்கும் சில காரணிகளில் புகையிலையும் ஒரு காரணியாக மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். நிக்கோட்டின் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட் என்பவர் 1559 ஆம் ஆண்டு கத்தரீன்-டி-மெடிசியின் அரண்மனைக்கு நிக்கோட்டினை மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார். அவரைக் கௌரவிப்பதற்காக இப்பெயர் இடப்பட்டது. நிக்கோட்டின் என்பது புகையிலையிலிருந்து கிடைக்கும் பொட்டென்ட் பாரா சிம்பதோமிமெடிக் […]

‘தண்ணி..தண்ணி…’

திருப்பூரின் தலையெழுத்தை ரோலர்க்கோஸ்டர் பயணத்தைப் போல ,ஏற்ற இறக்கங்களுடன் மாற்றியமைத்த ,சாயத் தொழிற்சாலைகளைப் பற்றி,அவற்றின் வருகையைப் பற்றிய தகவல்களை திருப்பூரைச் சேர்ந்த திரு.சோமனூர் செல்லப்பன் தனது ‘தண்ணி..தண்ணி..’ சிறுகதையில் ஆவணப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் கதையும்,ஒரு புளியமரத்தின் கதையும்(சு.ரா) கிட்டத்தட்ட ஒன்று தான்.அந்த பூரம் மகாராஜாவின் ஆணையின் பேரில் புளிக்குளம் மண் மூடி சமநிலைப்பட்டவுடன்,புளியமர ஜங்சனாக பெரிய டவுணாக பரிணமித்ததே!!! அது போல குலாம் காதர் என்பர்,கொல்கத்தா சென்றிருந்த போது,ஒரு ரிப்பேரான நிட்டிங் மிஷனை திருப்பூர் கொண்டு வந்து,பின்னலாடை நூற்க […]

சூரிய ஆற்றலே ஒரே தீர்வா? …

கூடங்குளமும் ஃபுக்குஷிமாவும் சூரிய மின்னுற்பத்தி குறித்த கவனத்தைக் குவித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் வழக்கம்போல மேலெழுந்தவாரியான புகழ் பாடலாகவும் அணு ஆற்றலை தவிர்க்க வியலாது எனும் கருத்தை மறுப்பதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. உண்மையில் சூரிய மின்னுற்பத்தி என்பது அணு மின்னுற்பத்திக்கோ அல்லது படிம எரிபொருள்கள் கொண்டு நடக்கும் அனல் மின்னுற்பத்திக்கோ மாற்றா என்பது சற்று ஊன்றி கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும். சூரிய ஆற்றல் குறித்த சில விவரங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படவில்லை. அதற்கு சில காரணங்கள் […]

மெக் டொனால்டை எதிர்த்துப் போராடும் சிறுகிராம மக்கள்….

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தண்டேனங் என்கிற மலைப்பிரதேசம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் காடுகள் சூழ்ந்த சிறுசிறு மலைகள்தான் அப்பகுதியின் அழகு. அப்பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் சிறிய அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தண்டேனங் சிகரத்தின் மீது நின்றுபார்த்தால், சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் அழகுற காட்சியளிக்கும். பெல்கிரேவ், எமரால்டு மற்றும் ஜெம்புரோக் போன்ற பகுதிகளுக்கு நடுவே மலை இரயில்களில் பயணிப்பதும் சுற்றுலாவாசிகளுக்கு சுகமான அனுபவமாக இருக்கும். 2085 பேர் […]