செக்கு ஆட்டவும் அனுபவம் இல்லாத ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனம் !

மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களான ஷேல் எண்ணெய்/எரிவாயு, மீத்தேன் அல்லது நீர்ம எரிவாயு ஆகியவற்றுக்கான தேடல் மற்றும் உற்பத்தி என்பது இன்னும் ஏராளமான பிரச்சனைகளை கொண்டுள்ளது. அது குறித்து ஏற்கனவே போதுமான அளவு பேசப்பட்டு அரசாங்கங்களும் அந்தத் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. ஆனால் இப்போது நெடுவாசலிலோ அல்லது காரைக்கால் பகுதியிலோ மரபுசாரா ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கும் திட்டம் ஏதுமில்லை என ஹைட்ரோ கார்பன்களுக்கான இயக்கமோ, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகமோ அல்லது உரிமம் பெற்றுள்ள நிறுவனமோ தெளிவாய் அறிவிக்கத் தயாரில்லை.

ஹைட்ரோகார்பன் திட்டம்: விளக்கங்களும் விளைவுகளும் . . . . . . . . !

ஹைட்ரோகார்பன் எவ்வாறு எடுக்கப்படுகிறது ? மீத்தேன், ஈத்தேன், ஷேல் கேஷ் அனைத்தும் ஹைட்ரோகார்பன் உபபொருட்கள்தான். இவற்றை வெளியே கொண்டுவர நீரியல் விரிசல் (Hydraulic Fracking) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட  இருக்கிறது. கீழேயுள்ள படம்  இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல்பாட்டினையும் அதன் பாதிப்புகளையும் மேலோட்டமாக விவரிக்கிறது. பாதிப்புகள் 1. நிலத்தடி நீர் தட்டுப்பாடு : அமெரிக்காவையே அதிஉன்னத உதாரணமாக எடுத்துப்பழகிய நமக்கு புரிவதற்காக, அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வறிக்கையையே  பார்ப்போம் . அந்த அறிக்கையின்படி, 2011ஆம் […]

மா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்

மாதவையா கிருஷ்ணன் என்ற மா.கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியரான அ.மாதவையாவின் எட்டாவது பிள்ளையாக திருநெல்வேலியில் ஜூன் 30 ஆம் நாள் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையுடன்  நெருக்கமாக இருந்தால் என்னவோ ஊர்சுற்றும் மனப்பான்மையும் இலக்கிய ஆர்வமும் சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. ஏட்டுக்கல்வியில் பெரிதும் நாட்டமில்லாத அவருக்கு தன்னுடைய மயிலாப்பூர் வீட்டைச் சுற்றியிருந்த புதர்காடுகளில் இருந்த வெளிமான், ஓநாய் மற்றும் பறவைகள் மீதே அதிக ஆர்வமிருந்தது. பள்ளி மாணவனாக இருந்தபோதே ஒரு கீரிப்பிள்ளையை செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார். சென்னை […]

பேராசையின் உச்சகட்டம்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் பயணிக்கும் போது, இருமருங்கிலும் பச்சை பசேலன்ற வயல்வெளிகள் கண்ணுக் கினிய காட்சிகளாய் அமைந்த காலம் ஒன்றிருந்தது. வைகை அணை யிலிருந்து கால்வாய் மூலம் பாயும் நீர்வளத்தால் மேலும் வளங் கொழித்தது மேலூர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல சிறப்புக்களில் ஒன்று, அது தொடர்ச்சியின்றி இருப்பது.  மற்றொன்று அதன் தொன்மை மிக்க வலுவான பாறைகள். கிரானைட் என்றழைக்கப்படும் இப்பாறைகளின் அருமையை கட்டடக் கலை வல்லுநர்கள் நன்கறிவர். இயற்கை அளித்த இந்தக் கொடையை வெட்டி […]

தண்ணீர் + அரசின் ஒரு இலவச இணைப்பு

நிலத்தடி நீர் குறைந்த மாவட்டங்களாக நாமக்கல், கோவை, பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வேணாந்தூர் கிராமத்தில் நிலத்தடி நீர் 1500 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது.

நியூட்ரினோ திட்டம்: அச்சங்களும், அறிவியலும்!

கே: நியூட்ரினோ என்பது என்ன? ப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது […]

மலைப்பாம்பின் பல்லைப் பிடித்த சகாயம் ஐஏஎஸ்…

செய்தி: கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவுபிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுவில் வெளியான கட்டுரை: http://maattru.com/mineral-loot-scams/

அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் எனும் மூட நம்பிக்கை …

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் குறித்த அச்சமூட்டுதலும், செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இது அறிவியல் உண்மை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார். அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை எனவும், அப்படியொரு கருத்தாக்கம் தவறானது என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். அறிவியல் அல்ல: கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: […]

உங்கள் வாழ்வில் நிழல் உள்ளதா?

நெகிழிப் பைகளால் சுற்றுச் சூழலுக்கும், நமது வாழ்விற்கும் கெடு என்று தெரிந்த பிறகும், அக்கொடும் தீங்கோடு எப்படி நம்மால் சமரசமாக முடிகிறது? உணவோடு கலந்து இரசித்து உண்கிறோமே, எப்படி முடிகிறது?