உணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …

ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்வார். அங்குள்ள சர்வரிடம் புகழேந்திப் புலவர் நள வெண்பாவில் தமயந்தியை வர்ணிப்பதுபோல் ஒரு ஐந்து நிமிடம் உவமானம் உவமேயங்களுடன் ஒரு ஊத்தப்பத்தை வர்ணிப்பார். மழைச்சாரல்போல காரட் வெங்காயம் எல்லாம் தூவிப் பொன்னிறமாக எடுத்து வரச் சொல்வார். அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த சர்வர் ஒரு கரப்பான்பூச்சியைப் பார்க்கும்போது காட்டும் அளவு கூட சுவாரஸ்யம் காட்டாமல் சாருக்கு ஒரு ஊத்தப்பம்! என்பார். இது போலத்தான் நிஜவாழ்விலும் நாம் படுசுவாரஸ்யமாகப் பொன்னியின் […]

சற்று முன் புத்தனாய் இருந்தவன்!

பூமி முத்திரை கோலம் தரித்த புத்தன் தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்து இறங்கி படுக்கையை பகிர்ந்து கொள்ள முயல `என்னவே என்னாச்சு?

பிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…

இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உங்களுக்குள் இருக்கும் மூவர்

அது 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி இலங்கையிடம் இந்தியா படு தோல்வி அடைகிறது. அப்போது களத்தில் பேட் செய்து கொண்டிருந்த நட்சத்திர வீரரான வினோத் காம்ளியால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுகை பீறிடுகிறது.  பத்திரிகைக்காரர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று உணர்ந்து அழுகையை அடக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. அழுது கொண்டே உடை மாற்றும் அறைக்குள் ஓடிவிடுகிறார். தமிழக சட்டமன்றம், எதிர்கட்சி தலைவர் எனும் பெரும் பொறுப்பில் விஜயகாந்த் அமர்ந்திருக்கிறார். ஆளுங்கட்சி மந்திரி […]

இது தான்டா காதல் ..

காதல் என்றால் என்ன என்று நாம் உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முன் நமது திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்து விடுகின்றன. “அண்ணே … எப்படிணே காதல் வருது? “ என அப்பாவி செந்திலாக கேள்வி கேட்டால் நமது திரைப்படங்கள் சொல்லும் பதில் ” ஒரு பெண்ணைப் பார்த்ததும் அந்த காதல் நம்மள போட்டு கும்மு கும்முன்னு கும்மும்”, “காதலுக்கு உருவம் எதுவும் தேவையில்லை மனசு தான் முக்கியம்” , “காதலுக்கு காரணமே சொல்ல முடியாது” என்று மக்களைக் குழப்பி […]