தலைவர்களின் தலைவர் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ

தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவைத் தவிர உலகின் எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த, மக்களுடனான உறவு இருந்திருக்கவே முடியாது. அமெரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் ஒரு சின்னஞ்சிறு தீவும், அந்த தீவின் துணைத்தீவுகளாக சுமார் 300 தீவுகளும் அடங்கும் மிகச்சிறிய பூமிப் பிரதேசம். அதன் ஆட்சியதிகாரப் பொறுப்பிலிருக்கும் ஒரு தலைவர் எப்படி உலகின் உன்னதமான தலைவரானார். உலக சமூகமே மனமுவந்து அவரைத் தலைவராக கொண்டாடுவதன் மர்மம் என்ன? விடை எளிது, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதநேயர், […]

போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த வார்த்தைகள் ஒரு நாளும் சாகாது. போய் வா […]

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 3

முதல் பகுதி – பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1 இரண்டாம் பகுதி – பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2 7. அகதிகளை வெறுப்பவராக… அகதிகள் குறித்து டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, ஹிலாரியும் மிகமோசமான பிற்போக்குத்தனமான கருத்துடையவர்தான். அமெரிக்காவிற்கு அகதிகளாக நுழையும் ஆதரவற்ற குழந்தைகளை, சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களின்படியும், மனிதாபிமான அடப்படையிலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் ஹிலாரியோ, “அகதிகளாக வரும் குழந்தைகளை மீண்டும் அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பிடவேண்டும். அப்போதுதான் அமெரிக்காவிற்கு குழந்தைகளை அனுப்புவதை தென்னமெரிக்கர்கள் […]

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – முதல் பகுதி முதல் பகுதியின் தொடர்ச்சி…. 5. ஹோண்டுரசையும் ஹைத்தியையும் நிர்மூலமாக்கியவர்… உலகில் மிக அதிகமாகக் கொலைகள் நடக்கும் நாடு தென்னமெரிக்காவிலிருக்கும் ஹோண்டுரஸ் தான். 2006இல் ஹோண்டுரசில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிபர் மேனுவேல் செலயா, மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். தானொரு இடதுசாரி அதிபராக மாறிக்கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். “எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி”, “குறைந்தபட்ச ஊதியத்தை 80%வரை உயர்த்தியது”, “16 இலட்சம் குழந்தைகளுக்கு இலவச உணவு”, “வறுமைக்கோட்டுகு கீழே […]

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1

(திவெரல்ட்மோர்கன் என்கிற பெல்ஜியப் பத்திரிக்கையில் டச்சு மொழியில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்) இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறப்போகிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும் களத்தில் இருக்கின்றனர். அவர்களில் இனவெறிபிடித்த பாசிச டொனால்ட் டிரம்ப் குறித்து நாம் அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவருடைய பேச்சுக்களும் விவாத உரைகளுமே நமக்கு அவரை அடையாளம் காட்டிவிடுகின்றன. அமெரிக்க வரலாற்றின் முதல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், பெண்ணியவாதியாகவும் […]

கேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . !

ஒரு வாரத்திற்கு முன்பாக உலக கபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி  இந்தியா உலக சாம்பியன் ஆனது. ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது ….பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை..ஆனால் ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு..மற்றொன்று தலைகுனிவு..நாட்டுக்கு மட்டுமல்ல.. உலகுக்கே..ஏன்? உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவ கழகம். இதில் உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். 112 நாடுகளை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள், இதில் அங்கம்.. இந்த உயரிய அமைப்பின் தலைவராக […]

சீனப் புரட்சியின் ஒரு பெரும் அத்தியாயமான மாவோவின் நீண்ட பயணம்…

சீனப் புரட்சியின் திருப்புமுனையாக அமைந்த நெடும் பயணத்தின் நெடுகிலும் விதைக்கப்பட்ட நாற்பதாயிரம் போராளிகள், 1946 அக்டோபர் முதல் தேதி விடுதலை பெற்ற சீன மக்கள் ஏந்திய கொடிகளில் நட்சத்திரங்களாக மலர்ந்தார்கள்.

இது நமக்கான போர் அல்ல…!

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன.  குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் உயிருள்ள, உணர்ச்சியுள்ள ஒரு பெருந்திரள் மக்கள் கூட்டமே வசித்து வருகிறது. பொம்மையிடம் விருப்பம் கேட்க முடியாது, ஆனால் […]

மத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)

வகாபியிசமும் இசுலாமிய சகோதரத்துவ இயக்கமும்… வகாபியிசத்துக்கு பணமும் செல்வமும் கிடைத்துவிட்டது, உலக அரங்கில் ‘தனக்கென கொள்கையிருக்கிறது’ என்று காட்டிக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டது. உலகின் எண்ணை விற்பனையில் சவுதி அரேபியா நேரடியாக 25% அளவிற்கும், ஒட்டுமொத்த வளைகுடாவைக் கணக்கெடுக்கையில் 55% அளவிற்கும் பங்குவகித்தது. அரபுலகின் எண்ணை விற்பனையனைத்தும் டாலரிலேயே செய்யப்படுகிறது. இதனாலேயே “டாலர் ஆயில்” என்கிற பெயரும் அதற்கு உண்டு. 1972இல் மிகமோசமான நிலையில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரம், வெகுசீக்கிரத்தில் மீண்டதற்கான ஒரே காரணம் “டாலர் ஆயில்” தான். அமெரிக்காவின் […]

மத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)

இஸ்ரேலே நடுங்கிய எகிப்து நாசரின் எழுச்சியும் வளர்ச்சியும்: 1950இல் எகிப்தின் கைரோவில் பிரிட்டனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. பல இராணுவ அதிகாரிகளும் குழுவாக இருந்து அப்போராட்டத்தை வழிநடத்தினர். நாசர் என்பவர் அதில் முக்கியப் பங்காற்றினார். அக்குழுவில் இராணுவத்தைச் சேராதவராக இருந்த ஒருவர் குத்தோப் மட்டும்தான். ஏராளமான நூல்களையும் இலக்கியங்களையும் வரலாற்றையும் படித்திருந்த அறிவுஜீவியான குத்தோப் அக்குழுவிற்கு தேவைப்பட்டார். துவக்கத்தில் நாசர் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளும் குத்தோப்பின் எழுத்திற்கு இரசிகர்களாக இருந்தனர் என்பதும் அதற்கு முக்கியகாரணமாகும். […]