அரசியல் பேசலாம்!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அரசியல் அதிகாரமும், செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும் ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 ஆண்டு கால சுதந்திரம் ஒரு சாராருக்குத்தான் பயனளித்திருக்கிறது. கொள்ளையடிக்க ஒரு சாராருக்கு சுதந்திரம்: மற்ற அனைவருக்கும் பட்டினியால் மடிய சுதந்திரம்: இவை சுதந்திரம் அல்ல, சாமானிய மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ற அடிமைத்தனம். பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? என்றார் பாரதி. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து  […]

எகிப்து: தொடர்கதையாகும் படுகொலைகள் …

நேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள். தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள். தலை, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்த கதை அது. எப்படிப்பார்த்தாலும், 200 புகைப்படங்களுக்கு மேல் இருக்கும். நெஞ்சை அதிர வைக்கும் அந்தப் புகைப்படங்கள் கெய்ரோவை மையமாகக் கொண்டு செயல்படும் புகைப்பட இதழியலாளர் முஸைப் எல்ஸாமியால் எடுக்கப்பட்டவை. கடந்த புதன் […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)

1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேவேளையில், அவ்விடத்திற்கு சில மைல் தூரத்தில் விஞ்ஞானிகள் குழுவின் கண்காணிப்பில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்சின் தலைமையில் அமெரிக்காவின் போர் தலைமையகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனை விட மிகப்பெரிய […]

மெக் டொனால்டை எதிர்த்துப் போராடும் சிறுகிராம மக்கள்….

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தண்டேனங் என்கிற மலைப்பிரதேசம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் காடுகள் சூழ்ந்த சிறுசிறு மலைகள்தான் அப்பகுதியின் அழகு. அப்பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் சிறிய அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தண்டேனங் சிகரத்தின் மீது நின்றுபார்த்தால், சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் அழகுற காட்சியளிக்கும். பெல்கிரேவ், எமரால்டு மற்றும் ஜெம்புரோக் போன்ற பகுதிகளுக்கு நடுவே மலை இரயில்களில் பயணிப்பதும் சுற்றுலாவாசிகளுக்கு சுகமான அனுபவமாக இருக்கும். 2085 பேர் […]