மத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)

வகாபியிசமும் இசுலாமிய சகோதரத்துவ இயக்கமும்… வகாபியிசத்துக்கு பணமும் செல்வமும் கிடைத்துவிட்டது, உலக அரங்கில் ‘தனக்கென கொள்கையிருக்கிறது’ என்று காட்டிக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டது. உலகின் எண்ணை விற்பனையில் சவுதி அரேபியா நேரடியாக 25% அளவிற்கும், ஒட்டுமொத்த வளைகுடாவைக் கணக்கெடுக்கையில் 55% அளவிற்கும் பங்குவகித்தது. அரபுலகின் எண்ணை விற்பனையனைத்தும் டாலரிலேயே செய்யப்படுகிறது. இதனாலேயே “டாலர் ஆயில்” என்கிற பெயரும் அதற்கு உண்டு. 1972இல் மிகமோசமான நிலையில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரம், வெகுசீக்கிரத்தில் மீண்டதற்கான ஒரே காரணம் “டாலர் ஆயில்” தான். அமெரிக்காவின் […]

மத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)

இஸ்ரேலே நடுங்கிய எகிப்து நாசரின் எழுச்சியும் வளர்ச்சியும்: 1950இல் எகிப்தின் கைரோவில் பிரிட்டனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. பல இராணுவ அதிகாரிகளும் குழுவாக இருந்து அப்போராட்டத்தை வழிநடத்தினர். நாசர் என்பவர் அதில் முக்கியப் பங்காற்றினார். அக்குழுவில் இராணுவத்தைச் சேராதவராக இருந்த ஒருவர் குத்தோப் மட்டும்தான். ஏராளமான நூல்களையும் இலக்கியங்களையும் வரலாற்றையும் படித்திருந்த அறிவுஜீவியான குத்தோப் அக்குழுவிற்கு தேவைப்பட்டார். துவக்கத்தில் நாசர் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளும் குத்தோப்பின் எழுத்திற்கு இரசிகர்களாக இருந்தனர் என்பதும் அதற்கு முக்கியகாரணமாகும். […]

மத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்)

மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே தீவிரவாதம் என்கிற சொல்தான் நமக்கு நியாபகம் வருகிற அளவிற்கு தொடர்பிரச்சாரங்களும், தொடர்போர்களும் கருத்துருவாக்கத்தை நம்முடைய மனதில் ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தீவிரவாதத்திற்கான காரணம் எதுவென்று மூன்று முக்கியமான வாதங்கள் நம்முன்னே வைக்கப்படுகின்றன. முதல் வாதம்: மத்திய கிழக்கின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்கா மற்றும் இன்னபிற மேற்குலக நாடுகளால்தான் உருவாக்கப்பட்டு, அவர்களின் நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன இரண்டாவது வாதம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கென்று தனியான நோக்கம் இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் […]

மத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்: முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இயற்கை வளம் கொட்டிக்கிடந்த நாடாக அமெரிக்கா இருந்ததும், அதன் வளர்ச்சிக்கு உதவியது. முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பல நாடுகளுக்கு கடன்வழங்கியது அமெரிக்கா. ‘யார்வேண்டுமானாலும் சண்டைபோட்டுக்கொள்ளுங்கள், அதற்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கடன்வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றது அமெரிக்கா. போர்முடிந்து ஒட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டது. […]

மத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கினார். 1901இல் பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மன்னரான மொசாபர் அல்தின் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடைய ஆய்வுப்பணிகளைத் துவங்கினார். எண்ணைவளம் கிடைத்தால், அதில்கிடைக்கும் இலாபத்தில் 16%த்தை பெர்சியாவின் மன்னருக்கு அளித்துவிடவேண்டும் என்று 60 […]

மத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. எகிப்தை பிரிட்டன் பிடித்துக்கொண்டது. அதனால் துனிசியாவைப் பிடிக்கும் ஜெர்மனியின் திட்டத்தினை பிரிட்டனும் பிரான்சும் எதிர்த்தன. இதற்கு சரியான தீர்வு காண, ஜெர்மனியின் தலைவரான பிஸ்மார்க் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அழைத்து பெர்லினில் […]

மத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)

இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் மக்களேகூட 50-60 ஆண்டுகளுக்குமுன்னர் பயன்படுத்தியதில்லை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்துதான் அப்படியான பெயரை வைத்தன. பிரிட்டனிலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் சீனா இருந்தமையால் அது […]

எகிப்து: தொடர்கதையாகும் படுகொலைகள் …

நேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள். தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள். தலை, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்த கதை அது. எப்படிப்பார்த்தாலும், 200 புகைப்படங்களுக்கு மேல் இருக்கும். நெஞ்சை அதிர வைக்கும் அந்தப் புகைப்படங்கள் கெய்ரோவை மையமாகக் கொண்டு செயல்படும் புகைப்பட இதழியலாளர் முஸைப் எல்ஸாமியால் எடுக்கப்பட்டவை. கடந்த புதன் […]