மத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்: முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இயற்கை வளம் கொட்டிக்கிடந்த நாடாக அமெரிக்கா இருந்ததும், அதன் வளர்ச்சிக்கு உதவியது. முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பல நாடுகளுக்கு கடன்வழங்கியது அமெரிக்கா. ‘யார்வேண்டுமானாலும் சண்டைபோட்டுக்கொள்ளுங்கள், அதற்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கடன்வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றது அமெரிக்கா. போர்முடிந்து ஒட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டது. […]

மத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கினார். 1901இல் பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மன்னரான மொசாபர் அல்தின் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடைய ஆய்வுப்பணிகளைத் துவங்கினார். எண்ணைவளம் கிடைத்தால், அதில்கிடைக்கும் இலாபத்தில் 16%த்தை பெர்சியாவின் மன்னருக்கு அளித்துவிடவேண்டும் என்று 60 […]

மத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. எகிப்தை பிரிட்டன் பிடித்துக்கொண்டது. அதனால் துனிசியாவைப் பிடிக்கும் ஜெர்மனியின் திட்டத்தினை பிரிட்டனும் பிரான்சும் எதிர்த்தன. இதற்கு சரியான தீர்வு காண, ஜெர்மனியின் தலைவரான பிஸ்மார்க் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அழைத்து பெர்லினில் […]

மத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் தோற்றமும் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமும்: ஐரோப்பாவில் அதிகாரமிக்க பெரிய நாடாக இருந்த ப்ருசியா, மற்ற சிறுநாடுகளை அழைத்து தமக்குள்ள ஒரு பொதுவான வரிவிதிப்புமுறையினை ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னது. ப்ருசியா மிகப்பலம் வாய்ந்த நாடாக இருந்தமையால், பல சிறுநாடுகளை எளிதாக மிரட்டமுடிந்தது. அதன் ஒரு பகுதியாக 1870இல் ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாக்கப்பட்டது. ஜெர்மனியை ஒருங்கிணைக்கிற சாக்கில், பிரான்சின் இரு மாகாணங்களையும் (அல்சாஸ் மற்றும் லோரியா) ப்ருசியா ஆக்கிரமித்துக்கொண்டது. அல்சாசிலிருந்து 1,00,000 மக்கள் வெளியேறி அல்ஜீரியாவில் குடியேறினர். […]