அலி வஸீர் – போராட்டமும், தியாகமும்…….!

சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹிரிக்-இ-இன்சாஃப் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் தினத்தன்றே வெடிகுண்டுத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் நடக்குமளவிற்கு தீவிரவாதம் பரவிக்கிடக்கும் பாகிஸ்தானில், இந்தமுறையும் நிலப்பிரபுக்கள், ஊழல்வாத முதலாளிகள், ராணுவ மற்றும் நீதித்துறை கைக்கூலிகள்தான் நிரம்பியிருக்கிறார்கள் என்கிறது களநிலவரம். இருப்பினும், பஸ்துன் தஹாஃபஷ் இயக்கத்தின் சார்பில் இரண்டு இடதுசாரி பிரதிநிகள் நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் மக்களிடையே […]

மத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)

வகாபியிசமும் இசுலாமிய சகோதரத்துவ இயக்கமும்… வகாபியிசத்துக்கு பணமும் செல்வமும் கிடைத்துவிட்டது, உலக அரங்கில் ‘தனக்கென கொள்கையிருக்கிறது’ என்று காட்டிக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டது. உலகின் எண்ணை விற்பனையில் சவுதி அரேபியா நேரடியாக 25% அளவிற்கும், ஒட்டுமொத்த வளைகுடாவைக் கணக்கெடுக்கையில் 55% அளவிற்கும் பங்குவகித்தது. அரபுலகின் எண்ணை விற்பனையனைத்தும் டாலரிலேயே செய்யப்படுகிறது. இதனாலேயே “டாலர் ஆயில்” என்கிற பெயரும் அதற்கு உண்டு. 1972இல் மிகமோசமான நிலையில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரம், வெகுசீக்கிரத்தில் மீண்டதற்கான ஒரே காரணம் “டாலர் ஆயில்” தான். அமெரிக்காவின் […]

அடிப்படைவாதம் எதிர்ப்போம்: ஒரு முஸ்லிம் இளைஞனிடமிருந்து…

அரசியல் லாபத்திற்காக மதவெறி ஊட்டப்பட்டு வன்முறையில் ஈடுபடும் குழுக்களை இஸ்லாத்தோடு ஒப்பிடுவது தகுமா என்று சிந்திப்பதே சரியானது. எந்த ஒரு சமயமானாலும் கொள்கையானாலும் இடம், காலம், சூழக்கு ஏற்ப மாற்றம் இல்லையெனில் அது அடிப்படைவாதத்திற்கு தான் வித்திடும்.