மோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”

கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13ஆவது உச்சிமாநாடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஐரோப்பிய தலைவர்களுடன் பல தீர்மானங்களில் கையெழுத்திட்டார். அதில் 17ஆவது தீர்மானத்தில், நேப்பாளம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. “நேப்பாளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கவேண்டிய தேவை இருப்பதை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த நேப்பாள மக்களையும் இத்தீர்மானம் […]