ஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பேசும் ‘தீபன்’ …

சமீபத்தில் நடந்துமுடிந்த 2015 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில், சிறந்த படத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான “தங்கப்பனை” விருதை வென்றிருக்கிறது “தீபன்” என்கிற பிரெஞ்சுத் திரைப்படம். பிரான்சின் புகழ்பெற்ற இயக்குனரான ஜாக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரெஞ்சுத் திரைப்படமாக இருப்பினும், 90% த்திற்கும் மேலான உரையாடல்கள் தமிழிலேயே இருப்பதால், தமிழ்ப்படம் என்றே சொல்லத்தோன்றுகிறது. தீபன் திரைப்படத்தின் மையக்கதை மிக எளிமையானதுதான். சிலப்பல காரணங்களுக்காக தங்களது சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து புதிதாக வாழ்க்கையைத்தொடங்க புதிய ஊருக்கு செல்கிற குடும்பம், […]