மத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)

இஸ்ரேலே நடுங்கிய எகிப்து நாசரின் எழுச்சியும் வளர்ச்சியும்: 1950இல் எகிப்தின் கைரோவில் பிரிட்டனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. பல இராணுவ அதிகாரிகளும் குழுவாக இருந்து அப்போராட்டத்தை வழிநடத்தினர். நாசர் என்பவர் அதில் முக்கியப் பங்காற்றினார். அக்குழுவில் இராணுவத்தைச் சேராதவராக இருந்த ஒருவர் குத்தோப் மட்டும்தான். ஏராளமான நூல்களையும் இலக்கியங்களையும் வரலாற்றையும் படித்திருந்த அறிவுஜீவியான குத்தோப் அக்குழுவிற்கு தேவைப்பட்டார். துவக்கத்தில் நாசர் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளும் குத்தோப்பின் எழுத்திற்கு இரசிகர்களாக இருந்தனர் என்பதும் அதற்கு முக்கியகாரணமாகும். […]