விடியலை நோக்கிய பயணத்தில் நேப்பாளம்…

இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தில் தற்போது தேர்தல் நடந்து, அதில் கம்யூனிஸ்டுகள் பெருவாரியான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் அதிபரும் இருந்தார்கள் தானே! அப்போதைய நிலையை விடவும் இப்போது என்ன பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் நேப்பாளத்தில் எதுதான் நல்ல கட்சி? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரலாற்றுப்பூர்வமான உண்மைகளோடு நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியதால் […]

எவன்டா இலுமினாட்டி . . . . . . . ?

“உன் பிரச்சனைகளுக்கு நீயோ, இந்த அரசோ, சமூகமோ, உற்பத்திமுறையோ காரணமில்ல. எங்கயோ இருக்கிற கிரகங்களும் நட்சத்திரங்களும் தான் காரணம்” என்று சொல்லி எதற்கும் போராடவிடாமல் காலங்காலமாக ஜோசியக்காரர்கள் நம்மைத் தடுத்தார்களல்லவா… அதேபோன்று, “இன்றைய பிரச்சனைகள் அனைத்துக்கும் எங்கயோ இருக்கிற 13 பேர்தான் காரணம். நீயும் நானும் எதையும் மாற்றிவிட முடியாது. போய் பொழப்பப்பாரு” என்று சொல்பவர்கள்தான் இலுமினாட்டி குறித்து பேசுபவர்கள். அவர்கள் சொல்லும் அந்த 13 பேர்தான் இலுமினாட்டிகளாம். இயற்கையை விளங்கிக்கொள்ளாத காலகட்டத்தில் மழை, வெயில், சூரியன், […]

இலுமினாட்டி என்ற கதையாடல் . . . . . . . . !

இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர். அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக […]

Wannacry மற்றும் இதர Malwareகளிலிருந்து தப்பிக்க வழி…

Wannacry என்கின்ற ransomware வைரஸ் உலகம் முழுக்க இருக்கிற பெரும்பான்மையான கணினிகளில் பரவி வருகிறது. இது Malware என்று சொல்லப்படும் வைரஸ். இது ஒரு கணினியை தாக்கிய பின், அந்த கணினியிலிருந்து எந்தவொரு இணையதளத்தையும் பார்க்கும்போது, அந்த இணையதளம் சரியான முறையில் பார்க்க முடியாது. அமைதியாக இருக்கும். அந்த வைரஸ் பாதித்த கணினியில் இருக்கிற எல்லா முக்கியமான கோப்புகளும், Spread Sheet ஆக இருந்தாலும், வேர்டு கோப்புகளாக இருந்தாலும், தரவுகளாக இருந்தாலும், இல்லை உங்களுடைய முக்கியமான தகவல்களாக இருந்தாலும் சரி, […]

இஸ்ரேல் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை நோக்கத்திலிருந்து அதிகமாக விலகச்சென்றுவிடக் கூடாது என்பதற்காக)  இலேசாக அதனைத் தொட்டுச்சென்றிருக்கிறேன். இஸ்ரேன் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது? இக்கேள்விக்கு இன்று சொல்லப்படும் பதில் […]

21 ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று உள்ளதா ?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 170 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரிஸ் கம்யூன் உருவாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை மனிதன் சுரண்டும் அவல நிலைமையில் இருந்து முதன் முதலில் மனிதனுக்கு விடுதலை தந்த 20 ஆம் நூற்றாண்டு கண்ட மாபெரும் விஞ்ஞான நிகழ்வுகளுள் ஒன்றான ரஷ்ய புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. இதன் தாக்கத்தில் பின்னர் உண்டான சீன, வியட்னாம், கியூப புரட்சி ஆகியன முடிந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. யாவற்றிற்கும் மேலாக […]

செங்குருதியில் மலர்ந்த மகளிர் தினம் . . . . . . . . . !

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நட்த்த வந்தோம் என்ற பாட்டு சித்தன் பாரதியின் வரிகளுக்கேற்ப வீட்டிற்குள் இருந்த பெண் சமுதாயம் வானை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டது பல்வேறு பெண்களின் போராட்டங்களும், அதன் வெற்றியுமே. உலக மகளிர் தினமாக மார்ச் 8 ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பல வியாபார நிறுவனங்களின் கொண்டாட்ட தினமாகவும், சலுகை தள்ளுபடிகளை அறிவிக்கப்படும் நாளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு கோலப்போட்டி, […]

ஒரு சர்வாதிகாரியால் தன்னிலை கடக்க முடியுமா . . . . . . ?

ஃபிடலின் இறப்புக்கு பின்னர்  ஃபிடலைப் பற்றிய , கியூபாவைப் பற்றிய  பல ஆயிரக்கணக்கான  கட்டுரைகளும் , எழுத்துக்களும் பல கோணங்களில் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன .  பி.பி.சி யும் , சி.என்.என்  னும் தினமும் சில மணி நேரங்களாவது கியூபாவையும், ஃபிடலை பற்றிய செய்தியையும் ஏதோ ஒரு வகையில் காட்டிக்கொண்டிருக்கின்றன (நல்ல ஸ்பான்சர் போல!!) . எழுத்துக்களிலும், காட்சி ஊடங்களிலும் , சமூக ஊடகங்களிலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஃபிடலைப்பற்றியும், கியூப அரசாங்கத்தைப் பற்றியும்  அவதூறூகளும் , […]

தலைவர்களின் தலைவர் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ

தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவைத் தவிர உலகின் எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த, மக்களுடனான உறவு இருந்திருக்கவே முடியாது. அமெரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் ஒரு சின்னஞ்சிறு தீவும், அந்த தீவின் துணைத்தீவுகளாக சுமார் 300 தீவுகளும் அடங்கும் மிகச்சிறிய பூமிப் பிரதேசம். அதன் ஆட்சியதிகாரப் பொறுப்பிலிருக்கும் ஒரு தலைவர் எப்படி உலகின் உன்னதமான தலைவரானார். உலக சமூகமே மனமுவந்து அவரைத் தலைவராக கொண்டாடுவதன் மர்மம் என்ன? விடை எளிது, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதநேயர், […]

போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த வார்த்தைகள் ஒரு நாளும் சாகாது. போய் வா […]