“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ!”

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து பழக்கப்பட்ட சங்கராச்சாரியார்களின் கைகள் நீதிமன்றத் தீர்ப்பை கேட்டவுடன் வெற்றி என்று சைகை காட்டும் வகையில் உயர்ந்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் […]

என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?

அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.

ஒரு போராளியின் முடிவும், சில சிந்தனைகளும் …

தோழர் நீலவேந்தன் மறைவு துயரமானது. ஏனோ மனம் அவர் தானாக எடுத்த இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எவ்வளவு சிறந்த லட்சியமாக இருந்தாலும் அதை அடைவதற்கு தன்னுயிரை மாய்த்துக் கொள்வது வழி ஏற்படுத்தாது.

தோழர் நீலவேந்தன் எழுதிய இறுதிக் கட்டுரை … கசப்பிலிருந்து தொடங்குவோம்…!

(தோழர் நீலவேந்தன் எழுதிய இறுதிக் கட்டுரை இது. 2 நாட்களுக்கு முன்பு இந்தக் கட்டுரையைக் கொடுத்து சிரித்துப் பேசிய நீலவேந்தன். 25 ஆம் தேதி அதிகாலை தன் உயிரை ஈந்தார். சமூக விடுதலைப் போராட்டத்தை ஓரடி முன் நகர்த்த வேண்டுமென, வாழ்க்கையையே தத்தம் செய்திருந்த அந்தத் தோழன் மறைவுக்கு – ‘மாற்று’ தனது அஞ்சலியை செலுத்துகிறது.) சமூகத்தையும் சக மனிதர்களையும் உளமாற நேசிக்கிற ஒரு தலித்துக்கு வருடத்தின் 365 நாளுமே துக்க நாட்கள்தான் என்றாலும், ஆண்டுதோறும் செப்டம்பர் […]

திராவிடர் – ஆரியர் முரண்பாடு இன்றும் முடியவில்லை … பேராசிரியர் அருணன்

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு. மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை, தமிழரின் தத்துவ மரபு, பெரியாரின் பெண்ணியம், காலந்தோரும் பிராமணியம் 8 தொகுதிகள் உள்ளிட்டு ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள தோழர் அருணனை சந்தித்தோம். அவர் பெரியாரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்று இணையத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல் …

ஆயுதம் செய்வோம் பாரதியின் பாடல்களால்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்: “இதுவா பாரதி நீ பார்க்க நினைத்த பாரதம்? இதுவா பாரதி நீ சொல்லி கொடுத்தசுதந்திரம்? எங்களுக்கு வெட்கப்படக் கூட விவஸ்தை இல்லை..” மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்’ என்று ஆர்ப்பரித்துக் கூத்தாடினார். ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சியா ளர்கள் ஆனந்த சுதந்திரத்தை அன்றாடம் தவணை முறையில் விற்றுக் […]

இந்துப் பெருமிதம் விடுதலையைத் தருமா?

பணம் படைத்தோரை ஏழைகளின் கோபக்கனலில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டதே அனைத்து மதங்களும் என்பது நாம் நன்றாக அறிந்ததே. அதிலும் நாம் பிறந்ததாகச் சொல்லப்படுகிற இந்து மதம் இருக்கிறதே, படுபுத்திசாலித்தனத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்படுகிற மக்களுக்கு, பாதிப்பை ஒரு துளியும் உணரச்செய்யாமல் பாதிப்பை ஏற்றுக்கொள்ள வைப்பது புத்திசாலித்தனம் அல்லாமல் வேறென்ன? உலகிலுள்ள அனைத்து மதங்களும், அந்தந்த மதங்களுக்குள் சமத்துவத்தைப் பேணுகின்றன. ஆனால் இந்து மதம் மட்டும் மக்களைப் பிளப்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு ஐரோப்பிய, […]