சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி!

நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான்! – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை… தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே முன் நின்று களமாடப் புறப்பட்ட கௌசல்யா இந்த இளம் வயதில் இவ்வளவு […]

பேருந்து கட்டண உயர்வு . . . . . . . தனியார்மயத்தை நோக்கி பொதுப்போக்குவரத்து . . . . . . . ?

விண்ணைத் தொடும் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், விலைவாசி, இட நெருக்கடி, தண்ணீர் தட்டுப்பாடு இதற்கு நடுவில் தான் நடுத்தர வர்க்கத்தின் அடித்தளத்திலிருப்பவர்கள் தங்களின் அன்றாட பிழைப்பிற்காக வெகு தொலைவில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. வேலைக்காகவும், கல்விக்காகவும்  தினம் தினம் இவர்கள்  பொதுப் போக்குவரத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். இன்னும் காலூன்றிக் கொள்ளாத இளைஞர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள், பார்வை அற்றோர்கள் என ஒரு நகரின் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் பொதுப் போக்குவரத்தைத் தான் நம்பியிருக்கிறார்கள். சொந்தமாக வண்டி அல்லாதவர்களுக்கு […]

குப்பைக் கிடங்கைவிட சேரி மக்களின் நிலை கேவலமா . . . . . . ???

(2015 மழை வெள்ளத்தை காரணம் காட்டி அகற்றப்பட்டபோது ஆய்வு செய்து எழுதியது…) இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகக் கூறப்படுகிற இதே காலச்சூழலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் ஏழை எளிய குடிசைவாழ் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. தங்களது வாழ்வாதாரத்துக்காக இடம்பெயர்வது ஒருபுறமிருக்க, இயற்கைச் சீற்றத்தின்போது அல்லது யுத்தம் போன்ற அவசர நிலைமையின் காரணமாக இடம்பெயர்வது இன்னொருபுறமிருக்க, தற்போது மக்களை அப்புறப்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தில் அடிகொடுத்து, அவர்களுக்கு எதிரான ஒரு யுத்தம் தொடுக்கப்படுகிறது. இதற்கு வளர்ச்சி […]

ஜோயல் பிரகாஷ் . . . . . தொடரும் கல்வி நிறுவன சாதியப் படுகொலைகள் . . . . . . . !

ரோகித் வெமூலாவிலிருந்து மட்டுமல்ல.. நாம் அறியப்படுவது இங்கிருந்துதான் முத்துகிருஷ்ணன், சரவணன், அனிதா, இப்போது ஜோயல் பிரகாஷ்…! என கல்விநிலையங்களில் சாதியத்தின் பெயரால் திறமையான மாணவர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்தி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தற்கொலைக்கு தூண்டி கொண்றொழிக்கிறது கல்வியின் பெயரால் இயங்கும் சாதியக் கொலைக்கூட்டங்கள்.! சென்னை கவின் கலைக் கல்லூரியில் செராமிக் பிரிவை சேர்ந்த மாணவர் ஜோயல் பிரகாஷ் (தலித் கிறிஸ்தவர்) சொந்த ஊர் வேலூர் மாவட்டம். அங்கிருந்து தினமும் சென்னைக்கு பயணம் செய்து படித்து […]

கொசஸ்தலை ஆறு & பள்ளிக்கரணை சதுப்பு நிலம் . . . . . . . தீர்வென்ன?

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப மனித வாழ்வோடு அதிக தொடர்பு கொண்டது ஆறுகள். மனிதனின் நாகரிக வளர்ச்சியானது ஆற்றோரங்களில் தான் தொடங்கின. இயற்கை கொடுத்த அருங்கொடைகளில் ஆறுகளும் அடங்கும்.  ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை மற்றும் பல வகையான தொழிற்சாலைகள் தண்ணீரையையே நம்பியுள்ளது. இவ்வாறு, பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆறுகளை அரசு முறையாக பராமரிக்காமல் அதில் தொழிற்சாலை கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுகின்றனர்.   […]

நீயா? நானா? வின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதா . . . . . ?

விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சி மற்றும் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி மீது என்னைப் போல் பலரும் மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் நேற்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதம் கவனித்த என்னைப் போன்ற பலரும் ஆண்டனியின் அணுகுமுறை கண்டு அதிர்ச்சியடைந்தோம். கேரளப் பெண்கள் அழகா ? தமிழகப் பெண்கள் அழகா ? என தலைப்பிட்ட விவாதத்தின் முன்னோட்டமே ஆட்சேபனைக்குரியதாக இருக்க அது வாக்கெடுப்பிற்கும் விடப்பட்டது என்பது மறைக்கப்பட்ட சேதியே! ஆண்டனி மற்றும் நீயா? நானா? இயக்குநர் […]

கொளுத்தப்பட வேண்டிய கந்துவட்டிக் கொடூரம்!

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் காவல் நிலையத்திற்கும் 2 கி.மீ. தூரமே…
ஆனால், நீதி எளிய மனிதர்களுக்கு நெருங்க முடியாத தூரத்தில் உள்ளது…

பணிமனை இடிபாட்டிலிருந்து தொழிலாளர்களின் கதறல் …

இடிபாடுகளில் சிக்கி, தற்போது சிகிச்சை பெற்றுவருகின்ற ஓட்டுனர் பிரேம் குமார், தனது பேட்டியில் “அதிகாலை 3 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்தது. அரை மணி நேரமாக கதறினோம். எங்கலுடன் நடத்துனர்கள், ஓட்டுநர்கள், நிர்வாக அதிகாரிகள், மெக்கானிக் உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனர். எங்கள் சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள் எங்களை மீட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் உறவுகளுக்கு ஒர் மனம்திறந்த மடல் …….!

தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன்கள்  அமீர் , ரஞ்சித் இடையிலான விவாதம் குறித்து நீங்கள்  பரவலான விமர்சனங்களையும் , பல வினாகளையும் முன்வைத்தீர்கள் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் விமர்சனங்களும் ,வினாக்களுமே ஆரோக்கியமான  அரசியலின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம்.  ஆனால் அந்த நிகழ்வில் இறுதியாக நடந்த விவாதத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்த நீங்கள் ரஞ்சித் அவர்களின் ஒட்டுமொத்த உரையின் சாரம்சத்தை மறைத்ததுதான் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும் நிலைக்கு […]

அதிமுக இணைப்பு நாடகம் – அம்பலக்கூத்து . . . . . . !

  தமிழக அரசியல் களம் தன் வெற்றிடத்தை, அரசியல் சூதாட்டங்களால் நிரப்பியபடி நகர்கிறது என்றாலும் மாற்றரசியலுக்கான வாசலை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக் கழக ஆட்சிகளின் மிக முக்கியமான காலகட்டம் இது. அண்ணாதுரை மறைவு, எம்ஜிஆர் மறைவு போல மற்றுமோர் மறைவு இல்லை ஜெயலலிதாவின் மறைவு. உலகமயச் சூழலில், தமிழக அரசியல் களத்தின் போக்கு, இருபது ஆண்டுகளாகவே அதன் திசைவழியில் முக்கியத்துவம் உடையது. முன்னேறிய மாநிலமான தமிழகத்தின் அரசியல், இந்தியக் கூட்டாட்சித் தனத்துக்கு பெரும் சவாலாகவும், அதன் […]