ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது? உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் […]

ஃபாஸிஸத்தின் விஷ வேர்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக இந்தியப்பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. கடந்த 23 வருடங்களில் ஒரு பிரமிக்க்த்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. புலி தனது இரையைப் […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 1)

அசீமானந்தா தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 4: கனிமொழி – ஜாபர் சேட்

தமிழக உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட், திமுக ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி இடையே நடந்த உரையாடல்

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 3: ஜாபர் சேட் – கனிமொழி

கனிமொழி மற்றும் தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான உரையாடல்

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 2 : (ஜாபர் சேட் – சரத் ரெட்டி)

(காங்கிரஸ் – தனது சிபிஐ உளவு அமைப்பை பயன்படுத்தி, திமுகவின் மீது கொடுத்த அழுத்தம் குறித்த ஊகமான புரிதலை இந்த உரையாடல் மூலம் பெற முடிகிறது. மேலும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைப் போலவே, தமிழகத்திலும் காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் சொந்த ஏவல்களைச் செய்து வந்துள்ளது அம்பலப்படுகிறது. அப்போதைய முதலமைச்சருக்கு இது முழுமையாக தெரியும் என்றும், டாட்டா நிறுவனத்திற்கும், திமுக குடும்பத்திற்கும் இடையில் இது நடந்திருக்கலாம் என பிரசாந்த் பூசன் சொல்கிறார்) இரண்டாவது உரையாடல்: தேதி – […]

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 1: (ஜாபர் சேட் – சண்முகநாதன்)

(ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரின் உடல்நலம் குறித்து பல வதந்திகள் வந்தன. இந்த நிலையில், தில்லியில் சவுக்கு இணையதளத்தின் முயற்சியால் பெறப்பட்ட ஆவணங்களை ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞ்சர் பிரசான்த் பூசன் வெளியிட்டுள்ளார். 2 ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் செயலர் உள்ளிட்டோர் பேசிய ‘டேப்’-ஐ வெளியிட்டுள்ளார். அவற்றில் உள்ளதாக சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சி ஆங்கிலத்தில் கொடுத்துள்ள டிரான்ஸ் கிரிப்ட் – தமிழாக்கம் செய்யப்பட்டு கீழே தரப்படுகிறது) 31.12.2010 […]

பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்!

நாம் ஒன்றே, நமது கலாச்சாரம் ஒன்றே, நமது பராம்பரியம் ஒன்றே, அன்றாட வாழ்க்கை ஒன்றே, வரலாறு ஒன்றே என இந்துத்துவம் எனும் கொடிய நோயை நாடு முழுவதும் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் அஜன்டாவை அரசியல் தளத்தில் நின்று நிறைவேற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் முயற்சிக்கிறது, 2014ல் ஆட்சியமைத்து 2004ல் விட்டதை எல்லாம் காவி மாற்றம் செய்யலாம் என பகல் கனவு காண்கிறது. அடித்தொண்டையிலிருந்து பேசும் பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் நாடு முழுக்க பொய், புனைகளை சொல்லி […]