வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 2

 வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1 புதியதாக படிப்பவர்கள் இந்த முதல் பகுதியை படித்துகொள்வது நலம். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மேன்மேலும் உற்பத்தியில் உபரியை உருவாக்கி மானுடக் கூட்டத்தில் ஒரு சிறுபகுதியாவது நீண்டகால நோக்கில் மானுட வாழ்க்கையையும் அது நடைபெறும் சூழலையும் ஊன்றிக் கவணித்து அதில் மாற்றம் கொண்டுவர சிந்திக்கவும் செயல்படவும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. இந்த சாத்தியங்கள் காலம் காலமாக தமது காலத்திற்குரிய வரம்புகளோடு மானுட வாழ்க்கையையும் அது இயங்கும் சூழலையும் […]

உலகை உலுக்கிய சமாதான உரை உங்களையும் உலுக்கும்.

 “தி கிரேட் டிக்டேட்டர் ” சர்வாதிகாரி ஹிட்லர் தனது பேராசையால் உலகை   நசுக்கிக் கொண்டிருந்த போது அவனை பகடி செய்து சார்லி சாப்ளின்  எடுத்த படம். அது வரை தனது படங்களில் பேசியிராத சாப்ளின் முதன்  முதலாக “தி கிரேட் டிக்டேட்டர்” படத்தின் இறுதிக்காட்சியில் பேசுவார்.  சர்வாதிகாரி போலவே இருக்கும் நாடோடியை தவறுதலாக மேடைக்கு  பேச அழைக்கிறார்கள். பல துயரங்களில் அடிபட்ட அவன் ஆற்றிய உரை  மகோன்னதமானது.  இப்படி தொடங்கிறது அவரின் உரை “என்னை மன்னித்துவிடுங்கள். […]

திராவிடர் – ஆரியர் முரண்பாடு இன்றும் முடியவில்லை … பேராசிரியர் அருணன்

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு. மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை, தமிழரின் தத்துவ மரபு, பெரியாரின் பெண்ணியம், காலந்தோரும் பிராமணியம் 8 தொகுதிகள் உள்ளிட்டு ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள தோழர் அருணனை சந்தித்தோம். அவர் பெரியாரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்று இணையத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல் …

பெண்ணுக்கு மரியாதை – மாற்றத்தின் முதல் படி !

‘மரியாதை’ என்பதின் பொருள் என்ன? தன்னை விட பெரியவர்களை உயர்வாக எண்ணுவது மட்டும் தானா?… இல்லை!! ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பே மரியாதை. இந்த அளவற்ற அன்பால் என்ன பயன் ? அன்பு, தன்னை போல் அவரும் ஒரு சக மனிதர் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இந்த புரிந்துணர்வால் என்ன பயன்? அவருக்கு நாம் தீங்கு விளைவிக்கக்கூடாது. அவருக்குரிய எல்லா வாய்ப்புகளும் நியாயமாக கிடைக்க நாம் வழிவிட வேண்டும். அவரை நாம் அடிமையாக நடத்தக்கூடாது […]

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன.

‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம்

ஆயுதம் செய்வோம் பாரதியின் பாடல்களால்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்: “இதுவா பாரதி நீ பார்க்க நினைத்த பாரதம்? இதுவா பாரதி நீ சொல்லி கொடுத்தசுதந்திரம்? எங்களுக்கு வெட்கப்படக் கூட விவஸ்தை இல்லை..” மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்’ என்று ஆர்ப்பரித்துக் கூத்தாடினார். ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சியா ளர்கள் ஆனந்த சுதந்திரத்தை அன்றாடம் தவணை முறையில் விற்றுக் […]

மறைக்கப்பட்ட 9/11

உலகின் பெரும்பாலான மக்களுக்கு 9/11 என்றதும் உடனே நினைவுக்கு வருவது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், செவ்வாய்க் கிழமையன்று நியூயார்க் நகரின் வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்டதே, ஊடகங்கள் பல தொடர்ச்சியாக அதைப் பற்றி செய்திகள் வெளியிட்டும், ஒளிபரப்பியும் அந்நிகழ்வைத் தாண்டி வேறெதையும் நம்மை சிந்திக்காதவாறு நம் சிந்தனையை மழுங்கச் செய்துள்ளன. இதை விட பல மடங்கு கோரமான ஒரு 9/11 ஐ இவ்வுலகம் ஏற்கனவே சந்தித்துள்ளது. அது நம்மிடமிருந்து நம்மையறியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. […]

பஞ்சாயத்து சொம்பு ஏன் சிரியாவுக்கு போகுது?!?

“இதனை ஏதோ காட்டுத்தனமான போர் என்று நினைக்கவேண்டாம். இது மனிதகுல விடுதலையினை மீட்டெடுக்கிற போராட்டம்” – வியட்நாம் போர் குறித்து அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், 1964 Image courtesy : Wikimedia “ஆப்கானை மீட்கவந்த போராளிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும்” – முஜாகிதீன்களாக இருந்த தாலிபான்கள் குறித்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், 1985 “ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் நிலைநாட்டுவதற்காகவும், பனாமாவில் வாழ்கிற அமெரிக்கர்களின் உயிரைக் காப்பாற்றவுமே பனாமாவோடு போருக்குச் செல்கிறோம்.” – அமெரிக்க அதிபர் ஜார்ஜ் […]

“விவாதம்” புதிய ஓய்வூதியத் திட்டம் – எதிர்காலத்தின் மீதான சூதாட்டமா?

(புதிய பென்சன் மசோதா, பாராளுமன்றத்தில் சட்டமாகியிருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை காங்கிரசும் – பாஜகவும் கொண்டுவந்துநிறைவேற்றியுள்ளன. தங்கள் சொந்த தொழிற்சங்கங்களே ஏற்காத இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால், நம் ஓவூதியர்களின் நிதி, பங்குச் சந்தைகளுக்குள் திருப்பிவிடப்படுவது ஒரு அபாயம். இரண்டாவது, இத்தனை ஆண்டுகள் பெற்று வந்த சிறிய அளவிலான சமூகப் பாதுகாப்பும் – இனி இல்லாமல் ஆகப்போகிறது. இளம் தலைமுறையினரை, நிச்சயமற்ற எதிர்காலத்தில் தவிக்கவிடப் போகும் இந்த சட்ட மசோதா தொடர்பாக விவாதிப்போம்) விவாத […]

பிள்ளையார் பிறந்த கதையும், பிள்ளையார் படுகொலையும் …

​இந்தியப்​ பண்பாட்டு சூழலில் சமய வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப்போய் உள்ளதால் அது சார்ந்த திருவிழாக்கள் ஏக மக்களின் இளைப்பாறுதல் நிகழ்வாக இருப்பதாலும் அதனை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ​ இந்தியாவில்சமயங்கள் அனைத்தும் பல நூற்றாண்டு வரலாறு கொண்டுள் ​​ ள​ன.அதன் வரலாற்று போக்கில் பல்வேறு சமயங்கள் அந்தந்த கால வளர்ச்சிக்கேற்ப முந்தியதை பிந்தியது ஆதிக்கம் செலுத்தி அதன் சில கூறுகளை தன் வயப்படுத்திக் கொண்டதும் தான் இதுவரையிலான இந்திய சமய வரலாறு. ஆரம்ப நாட்களில் […]