சமூக அவலங்களின் எதிர்ப்பு குரலாக மண்டோ

சாதத் ஹசன் மண் டோ என்ற பெயர் எத்தனை பேருக்குள் அதிர்ச்சியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தி  இருக்கிறது என்பது இலக்கிய உலகம் அறிந்ததுதான். வாசகனின் மனதை அதிர்வுகளுக்கு உள்ளாக்கி அவர்களின் சிந்தனை போக்கையே நிலைகுலைய செய்யும் எழுத்தாற்றல் கொண்ட மகத்தான படைப்பாளன் மண்டோ என்பதால் தான் கீழ் கண்ட வரிகளின் மூலம் தன்னை யார் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார் மண்டோ. In the name of god the compassionate, the merciful here lies Saadat Hasan […]

வல்லரசுகளுக்கு இராணுவப்பாடம் கற்றுத் தந்த வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்…!

உலகத்திலேயே இராணுவப் பயிற்சி இல்லாமலேயே மாவீரன் நெப்போலியனுக்கு நிகராக படைத் தளபதியாக உயர்ந்தவர்கள் இருவர். ஒருவர் இந்திய தேசியப் படையை அமைத்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் நேதாஜி. இன்னொருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இராணுவத் தளபதி வோ கியேன் கியாப் (Võ Nguyên Giáp). நேதாஜியும், கியாபும் இராணுவப் பயிற்சி இல்லாமலேயே அன்றைய இரு பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போர் செய்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த […]

மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? – 2

அரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி மோடி குறித்த கட்டுரை அல்ல இது. மாறாக, சர்வதேச நிதி மூலதனம், நவீன தாராளவாதம் மற்றும் இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றையத் தேவைக்கு மோடி எப்படி பொருந்துகிறார் என்பது குறித்த விளக்கமே. “ஒரு நவீன அரசு என்பது, பூர்ஷ்வாக் களின் ஒட்டுமொத்த நலன்களையும் கணக்கில் கொண்டு செயல்படும் ஒருநிர்வாகக் குழு என்பதைத் தவிரவேறொன்றுமில்லை.” இவை கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள வாசகங்கள். காலமாற்றத்திற்கும், முதலாளிகளின் தேவை களுக்கும் ஏற்ப அரசின் […]

2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு!

நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் அது பிழையான உத்தியாகவே (Strategic Error)  முடியும்.

இந்தியா இந்து ராஜ்யமா?

நமது நாடு பல்வேறு மதத்தினர் வாழும் நாடு. ஒரே மதத்தினர் பல்வேறு மொழிகளைக் கொண்டவர்களாக பிரிந்தும், ஒரே மதத்தினர் பல்வேறு சாதியினர்களாக பிரிக்கப்பட்டும் உள்ளனர். இத்தகைய வேற்றுமைகளைக் கொண்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக ஒரே தேசத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். சமுதாயத்தின் மீது, நாட்டின் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படும் பிற்போக்காளர்கள் இவ்வேற்றுமைகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

நீதியற்ற சாதித் தீர்ப்பு … (உனக்கு மனசாட்சி இருக்கிறதா இந்தியாவே?)

தேசிய நினைவுச் சின்னங்களை பொறுத்த வரையில், வெற்றிச் சின்னங்களை விட துயரச் சினங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை; ஏனென்றால் அவை நாம் செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்றன. தலித்துகளை பொருத்தவரை நிறுவப்படாத நினைவுச் சின்னங்கள் ஏராளம் உண்டு. பல நூற்றாண்டுகளாக உழைத்தவனின் கழுத்தை காலால் மிதித்து அவனுழைப்பை அனுபவித்த ஆண்டைகள் தம் நன்றிக் கடனை தீர்க்க காலம் நெடுக, நாடெங்கும் தலித்துகளை தீர்த்துக்கட்ட தயங்குவதில்லை. இந்தியாவின் அனைத்து மூலையிலும் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? -1

2013 செப்டம்பர் 18 அன்று திருமதி ஜக்கியா ஜஃப்ரி அவர்களால் அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்ற முறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம். குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகள் நடைபெற்றபோது மோடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் முழுப்பொறுப்பும் வகித்தார் என்று முறையிடுபவர் தன் மனுவில் குற்றம் சாட்டியிருக்கிறார். நரேந்திர மோடி மற்றும் 59 பேர்களுக்கு எதிரான ஜக்கியா ஜஃப்ரியின் குற்ற முறையீட்டில் மும்பையில் உள்ள நீதி மற்றும் […]

என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?

அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.

‘சே’ எனும் மந்திரச் சொல்…

“நான் எழுந்து நிற்கின்றேன் துப்பாக்கியை என்னை நோக்கி நேராக நீட்டு, குறி பார், தைரியத்தை வரவழைத்துக்கொள், கண்களை மூடிக்கொண்டு சுட்டு விடு”  அடுத்த நொடி சாவைத் தழுவிக் கொள்ளப் போகிறோம் என தெரிந்தும் தன்னை சுட வந்த ராணுவ வீரனைப் பார்த்து இவ்வாறு சொன்ன துணிச்சலுக்கு சொந்தக்காரன் ”சே”.சுட்டது பொலிவிய ராணுவ வீரன். ”கோழையே நீ சுடுவது சே–வை அல்ல ஒரு சாதாரண மனிதனை” எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னாதன் வாழ்நாளில் கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 3)

அமெரிக்காவிலும் ஸ்டாலின் புகழ்: சோவியத்தின் ஸ்டாலின்க்ராடில் ஜெர்மனியை சரணடைய வைத்த பின்பு, ஸ்டாலினிற்கு உலக அளவில் ஆதரவு பெருகியது. அஃது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. சோவியத்தைத் தொழில் மயமாக்கியதிலும், புதுமையான யுத்திகளால் பொருளாதார முன்னேற்றத்தை சாத்தியமாக்கியத்திலும் ஸ்டாலினின் பங்கைப் பாராட்டியெழுதின அமெரிக்கப் பத்திரிகைகள்.