என் கல்வி.. என் உரிமை..

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அறிவு என்பது ஒரு குழுவுக்கோ ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல.அது அனைவருக்குமானது.ஆனால் அதை அடைய இன்று வரை பல குழந்தைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மூன்றாம் கட்ட நாடுகளாக இருக்கும் ஒரு நாட்டில் அது இன்னமும் எட்டாக் கனவாகவே உள்ளது. கல்வி என்பது என்ன? இந்த உலகம் எப்படி இயங்குறது என்று சொல்லித் தருவது, நம் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று […]

பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

தில்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப்புத்தியில் சில விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவேசப்பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரணமடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சியளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களில் சிலரும் இடதுசாரி சிந்தனையாளர்களும், போராடி வருகின்றனர். ஒருநாள் நடத்தும் ஆவேசப் போராட்டங்கள் கடந்து, சில நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து என்ன கருதுகிறோம்? […]

தபோல்கர் கொலை : சோகம் கொள்வதற்கல்ல, கோபம் பூணுவதற்கு…

Image Courtesy : wikimedia உலகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான்! கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்! பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை இவர்கள் போய் காப்பாற்ற வேண்டியிருக்கிறதே… தான் அவமதிக்கப்படுவதற்கு எதிராகத் தானாக எதுவும் செய்ய முடியாதவர் என்று தங்களுடைய கடவுளை இவர்கள்தான் காட்டிக்கொடுக்கிறார்கள்… நமது […]

திடங்கொண்டோர் மெலிந்தோரை தின்று பிழைத்திடலாமோ?

உணவுப் பாதுகாப்பு மசோதா மீது இருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதா வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் வேண்டும்; அனைத்துப் பொருட்களும் வேண்டும், 35 கிலோ அல்லது நபருக்கு 7 கிலோ; இதில் எது அதிகமோ அது வழங்கப்பட வேண்டும்; அரிசி ரூ.2/- விலையில் கொடுக்கப்பட வேண்டும். இதர அத்தியாவசியப் பொருட்களும் ரேசனில் வழங்க வேண்டும். ஆதாருடனோ நேரடி பணமாற்றத்துடனோ இதை இணைக்கக் கூடாது. […]

இந்திய நாடும் விவசாயிகளும் – பி.சாய்நாத்

(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி […]

ஹிரோஷிமா – ஃபுக்கூஷிமா…

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாகி அமெரிக்க அணுகுண்டின் தாக்குதலுக்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட ஹிரோஷிமாவின் அணுகுண்டு ’சிறு பையன்’ (Little Boy)  என அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்பட்டது. நாகசாகியின் குண்டு அமெரிக்கர்களால் ‘கொழுத்த மனிதன்’ என அழைக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டு 64 கிலோ U235 எனப்படும் யுரேனியம் 235 எனும் யுரேனியத்தின் ஓரகத் […]

மின்சாரம் மக்களின் உரிமை! அதை அளிப்பது அரசின் கடமை!!

சுதந்திர இந்தியாவில் மின் துறையின் வளர்ச்சி மகத்தானது. மின்சார உற்பத்தி 1326 மெகாவாட்டில் துவங்கி இன்றைக்கு 2,11,766 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து நிற்கும் துறையாக இந்திய மின்துறை வளர்ந்து உள்ளது. மின் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் மின்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் தொடரமைப்பு பாதை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3708 சுற்று கிலொ மீட்டரில் துவங்கி மூன்று லட்சம் கிலொ மீட்டராக விரிவடைந்து உள்ளது. இவை அனைத் தும் மின் துறை பொதுத்துறையாகவே இருந்த காரணத்தினால் […]

அரசியல் பேசலாம்!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அரசியல் அதிகாரமும், செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும் ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 ஆண்டு கால சுதந்திரம் ஒரு சாராருக்குத்தான் பயனளித்திருக்கிறது. கொள்ளையடிக்க ஒரு சாராருக்கு சுதந்திரம்: மற்ற அனைவருக்கும் பட்டினியால் மடிய சுதந்திரம்: இவை சுதந்திரம் அல்ல, சாமானிய மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ற அடிமைத்தனம். பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? என்றார் பாரதி. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து  […]

எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 …

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிட முடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்களில் வெளிவராத பதிவுகள் கூட பலரால் எழுதி வெளி வருவதைக் காண முடிகிறது. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும் படியாக இருக்கிறதென்றால், […]

மலம் கழிக்கும் கலை – மகிழ்நன்

சமீபத்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கைப்பேசிகளைவிட குறைவான அளவிலேயே கழிவறைகள் இருக்கின்றன என்ற தகவல் சிலருக்கு தார்மீக ரீதியாக சினத்தை உண்டு பண்ணியிருக்கலாம். ஆனால், இது கண்டிப்பாக வருத்தப்படக் கூடிய செய்தியா? ஒரு காலத்தில் பணக் காரர்களின் பணக்காரத்தனத்தின் குறியீடாக இருந்த கைப்பேசி இன்று பாமரர்கள் கையிலும் உலாவருவது எத்தனை முன்னேற்றம், இதைக் கேட்டு (அ)நியாயமாக பெருமைப் படத்தானே வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியை  மட்டும் பிரதானமாக முன்னிறுத்த முடியுமா […]