சுதந்திரம் கோரும் ஹாதியாவும்… குட்டிக் குரங்குகளின் கர்வாப்ஸியும்!

கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹாதியா வழக்கு, மதமாற்றம் பற்றிய, பல்வேறு சூடான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சங்க பரிவார் அமைப்பினர் மதமாற்றம் என்ற குடுவைக்குள் இந்த பிரச்சனையை அடைத்து, மற்ற சமூக பிரச்சனைகளையும், அரசியல் உரிமைகளை மறுப்பதையும் வசதியாக மறைக்க முயன்று வருகின்றனர். திருமண வயதைக் கடந்த, உயர்படிப்பு படித்த ஒரு பெண் தனக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவும், தனக்குப் பிடித்தமான தத்துவத்தை ஏற்று இந்த சமூகத்தில் வாழவும் அவருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள […]

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 4

முதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-2/ மூன்றாவது பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-3/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி…   9.   தோல் தலைநகரத்தின் தோலையும் உரித்துப்போட்டது: இந்தியாவின் தோல் தலைநகரம் என அழைக்கப்படும் நாக்பூரில்தான், 16% அளவிற்கான தோல் பொருட்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இதன்மூலம் 4,00,000 பேருக்கு நேரடியாகவும், மேலும் 6,00,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் தொழிற்துறையாக நாக்பூரில் அது இருந்துவருகிறது. நாக்பூரில் மட்டும் கடந்த நவம்பருக்கு முன்னரவரை அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட 400 தோல்பதனிடும் தொழிற்சாலைகள் இருந்தன. […]

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 3

முதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-2/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி… 5.   ஆசியாவின் பெரிய சந்தையான புர்ராபஜாரின் தள்ளாட்டம்: ஆசியாவின் மிகப்பெரிய மொத்தவியாபார சந்தையான புர்ராபஜாரின் நிலையும் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் ஆட்டம் கண்டது. புர்ராபஜாரில் ஒட்டுமொத்தமாக 25 துணை சந்தைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்துதான் கிழக்கிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பல்வேறு பொருட்கள் செல்கின்றனர். 50 முதல் 90% வரையிலான வியாபாரம் புர்ராபஜாரின் சந்தைகளில் குறைந்தது. கடந்த நவம்பர் 8 லிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், ஜிஎஸ்டி […]

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 2

முதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/ பணமதிப்பிழப்பினால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்: 1.   புதிய பேமண்ட் வங்கிகளின் உருவாக்கம்: கால்பந்தாட்டப் போட்டி துவங்கிய அரைமணிநேரம் வரையும் ஒரு அணியால் எந்த கோலும் போடமுடியவில்லையாம். உடனே தனக்கு வசதியாக, எங்கேபந்து போகிறதோ, அதுதான் கோல்போஸ்ட் என்று அவ்வணி வாதிட்டதாம். அதேபோன்றுதான் ஊழலையும் கருப்புப்பணத்தையும் ஒழிப்பதற்கென்று சொல்லிவிட்டு, பின்னர் பணமில்லாப் பரிவரத்தனைக்கு மாறுவதற்காகத்தான் பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டுவந்தோம் என்று கோல்போஸ்டை மத்தியரசு திடீரென்று மாற்றியமைத்தது. அதனால் ஆறு புதிய மொபைல் பேமண்ட் […]

Demonetisation – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 1

சொல்லப்பட்ட நோக்கங்களும், டமாலான செயல்பாடுகளும்: 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமதிப்பில் 86% அளவிற்கு இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தார். அதற்கு மூன்று காரணங்களையும் கூறினார். கருப்புப்பணத்தை ஒழிப்பது கள்ளநோட்டுக்களை செல்லாமல் ஆக்குவது தீவிரவாதத்தை ஒழிப்பது இம்மூன்றைத்தான் ஆரம்பத்தில் காரணங்களாக மோடி அறிவித்தார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காக, யாருக்காக, எந்த நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டது என்பதை காலப்போக்கில்தான் நாம் புரிந்துகொள்ளமுடிந்தது. திட்டம் அமல்படுத்தியவுடனேயே, ‘கண்ணாடியைத் திருப்பினா, […]

பண மதிப்பிழப்பு நடவடிக்கை “ஒரு இந்துத்துவ புரிதலில் இருந்து”….!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு  அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது. இந்தளவுக்கு மிகப்பெரிய பேரழிவை, அதுவும் உலகத்தின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றான, ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை உடைய ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிய மிக முக்கிய நடவடிக்கையானதாலோ […]

பயமறியா செங்கொடிக் காதலர்களடா நாங்கள்…

நீங்கள் மாணவர்கள்தானே கொஞ்சம் உலக வரலாற்றைப் புரட்டி பாருங்கள், நாங்கள் செங்கொடிக் காதலர்கள். மறந்துவிடாதீர்கள்.

திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி | IAS அதிகாரியின் சாட்சியம்

திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி. குஜராத் குருதி! குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..! ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட  குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த  கட்டுரை இது. மீண்டும் இதுபோன்றதொரு கலவரத்திற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா […]

தலித் அர்ச்சகர்: இந்து ஆகமத்திற்கு முன் கைகட்டி நிற்கிறதா இந்திய சட்டம்?

கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் நாளொரு அறிவிப்பு செய்து இந்திய தேசியத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபமாக அறிவித்த அறிவிப்புகள் எல்லாமே செம ஹாட் அறிவிப்புகள் தான். அதில் ஒன்று தான், 6 தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அறிவிப்பு. கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. திருவாங்கூர் தேவசம் போர்டு என்பது கேரள அரசின் தேவசம் போர்டு என்று அறியமுடிகிறது. அந்த […]

தீபாவளி “பண்பாடும் பொருளாயதக் கட்டுமானமும்” . . . . . . !

தீபாவளி – தீபம்+ஆவளி,  தீபங்களின் வரிசை. இருளை விலக்கி, ஒளியை வரவேற்கும் விழா. அனைத்து தரப்பினரும் ஏதோ ஒருவகையில் பங்கேற்கும் பண்டிகை. எத்தனை விமரிசனங்கள், எத்தனை எதிர் அரசியல்கள், எத்தனை மாறுதல்கள், எத்தனை சமய அடையாளங்கள், அத்தனையையும் தாண்டி பெருஞ்செல்வாக்குடன் வருடந்தோறும் கழிகிறது தீபாவளி நாள். மிகமுக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய செய்தி தீபாவளி நாட்களின் வர்த்தகம். அரிவாள்மனையிலிருந்து, ஆடை ஆபரணங்கள் வரையிலும் விற்பனையில் சக்கைபோடும் விழா தீபாவளி. குதூகலம், உற்சாகம் தொற்றிக்கொள்ளும் வகையில் காலந்தோறும் மாற்றம் பெற்று,  தன்னை […]