பிள்ளையார் பிறந்த கதையும், பிள்ளையார் படுகொலையும் …

​இந்தியப்​ பண்பாட்டு சூழலில் சமய வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப்போய் உள்ளதால் அது சார்ந்த திருவிழாக்கள் ஏக மக்களின் இளைப்பாறுதல் நிகழ்வாக இருப்பதாலும் அதனை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ​ இந்தியாவில்சமயங்கள் அனைத்தும் பல நூற்றாண்டு வரலாறு கொண்டுள் ​​ ள​ன.அதன் வரலாற்று போக்கில் பல்வேறு சமயங்கள் அந்தந்த கால வளர்ச்சிக்கேற்ப முந்தியதை பிந்தியது ஆதிக்கம் செலுத்தி அதன் சில கூறுகளை தன் வயப்படுத்திக் கொண்டதும் தான் இதுவரையிலான இந்திய சமய வரலாறு. ஆரம்ப நாட்களில் […]

யார் நல்லாசிரியர்?

இன்று  ஆசிரியர்  தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி நாடு முழுதும் ”ஆசிரியர்கள் தினம்” சிறப்பாக கொண்டாடுப்படுகிறது.  மத்திய – மாநில அரசுகள் கடந்த காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் – ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ”நல்லாசிரியர் விருது” அளித்து வருகிறது. ஆனால் நம் மனதில் எப்போதும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்களா..? இதில் அரசியல் தலையிடு இல்லையா? தேர்வு முறைகளில் நியாமான வகையில் இருக்கிறதா? இத்தகைய கேள்விகள் […]

ஜனநாயகம், குடும்ப அமைப்பிலாவது சாத்தியமாகட்டும்!

சமூக அமைப்பில், உழைப்பிற்கான எந்த தளமானாலும் அங்கு பறிக்கப்படும் உரிமைகளை குற்றம் சாட்டவோ, உழைப்பிற்கான வெகுமதியை வற்புறுத்தி பெறவோ,அனைவரும் இணைந்து முடிவுகளில் பங்கேற்கும் முறைகளும், ஒருங்கிணைக்கும் சங்கங்களும் இருபாலருக்கும் பொதுவானதே (பெயரளவிலாவது இது தொடர்கிறது). ஆயினும் இங்கே குழுவாக, சமவுரிமையுடன் வாழ்வது எனும் தோற்றத்தை தர முயலும் குடும்ப அமைப்பில் பாலின வேறுபாடு, பொருளீட்டல் மற்றும் மதம் சார்ந்த பழக்க வழக்கங்களின் பொருட்டு சமத்துவம் ஒரு தோற்ற மாயையாகிவிடுகிறது. குடும்பத்தின் உள் விதிக்கப்பட்ட ஒழுங்கை ஏற்றுநடக்கும் போது […]

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1

வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் மீண்டும் சிறு அளவிலான விவசாயம், வேட்டை, காய் கனிகளை சேகரித்து உண்டு வாழும் ‘இயற்கையை ஒட்டிய’ வாழ்க்கை என்பதைத் தவிர […]

தங்க மீன்கள் – சினிமா மொழியை தவறவிட்ட இயக்குனர் ராம் !

(தங்க மீன்கள் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்கும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், இயக்குனர் ராம் – மேம்பட, அவரின் படைப்புகள் மேம்பட வாழ்த்துகள் மட்டும் போதாதே. தங்க மீன்கள் திரைக்கதையிலும், கதையிலும் உள்ள குறைபாடுகளை இந்த விமர்சனம் முன் வைக்கிறது. அதுவும் இயக்குனர் ராம் என்பதால் உருவான எதிர்பார்ப்பிலிருந்து இந்த விமர்சனம் அவரின் அடுத்த இயக்கமான ‘தரமணி’யை மேம்படுத்த உதவுமென, நம்புவோம்)   Image Courtesy : Wikimedia தங்க மீன்கள் – இது நான் வியந்த ராமின் […]

மீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் !

“கலாச்சாரத்தை விழுந்து விழுந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களே!  நீங்களெல்லாம் அறிவுரை கூறவும், பிரசங்கத்தை பொழியவும் மீண்டும் மனிதத்திற்கு எதிரான குரூரங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன.” மும்பையில் 23 மூன்று வயதான பெண் பத்திரிக்கையாளர், ஐந்து மனிதவடிவு மிருகங்களால் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை பாதிக்கப்பட்ட பெண் எந்த ஆண் நண்பனுடனும் சினிமா பார்க்க செல்லவில்லை, 9 மணி இரவிற்கு மேல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கவில்லை, சமூகத்தின் பழிபோடும் கயமைத்தனத்துக்கு இரையிடும் வகையில் கவர்ந்திழுக்கும் உடையணியவும் இல்லை. தனது பணியை […]

சென்னை மாநகரத்திற்கு வயது 375

சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா […]

எகிப்து: தொடர்கதையாகும் படுகொலைகள் …

நேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள். தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள். தலை, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்த கதை அது. எப்படிப்பார்த்தாலும், 200 புகைப்படங்களுக்கு மேல் இருக்கும். நெஞ்சை அதிர வைக்கும் அந்தப் புகைப்படங்கள் கெய்ரோவை மையமாகக் கொண்டு செயல்படும் புகைப்பட இதழியலாளர் முஸைப் எல்ஸாமியால் எடுக்கப்பட்டவை. கடந்த புதன் […]