#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?

நண்பன் யாரென்று சொல்லுங்கள் சமஸ் . . . . . !

எதிரியை பற்றி பேசும் போது நண்பன் யார் என்று சொல்ல வேண்டாமா-? அன்புள்ள சமஸ் அவர்களுக்கு, தங்கள் எழுத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவன் என்ற அடிப்படையில் தங்கள் மீதுள்ள அன்பின் தூண்டுதலில் எழுதுகிறேன். எளிமை, நேர்மை, தியாகம், போராட்டமே வாழ்க்கையாக உள்ளவர்கள் இடதுசாரிகள் என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன். ஆனால் ஒன்றை (மதவாதம்) எதிர்க்கிறேன் என்று சொல்லும் தாங்கள் அதற்கான மாற்றாக தொடர்ந்து மற்றவர்களை விட கூடுதலாக களத்தில் இடதுசாரிகள்தான் நின்றார்கள் […]

இன்னும் எதிர்பார்க்கிறோம் சமஸ் . . . . . !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க அல்லாத காங்கிரஸ், பி.ஜே.பி & பா.ம.க அங்கம் வகிக்காத மூன்றாவது அரசியல் மாற்றுக்கான முயற்சியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒராண்டுகள், இரண்டுகள் என பல ஆண்டுகள் நடக்காத விசயம் இப்போது நடந்துள்ளது. 2ஜி, சொத்துக்குவிப்பு என ஊழலில் திளைத்த தமிழகத்தை இரு பெரும் கட்சிகளிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் முன்னேறி இன்று முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. முதலில் இது நடக்க வேண்டும். நடக்கும். நடக்கட்டும். சமஸ் தனது நடுப்பக்கங்களில் ஒன்றை […]

ஜல்லிக்கட்டு, ஒழிய வேண்டும் …

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு பற்றிய கூச்சல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு என்பது வீரத்த தமிழனின் பாரம்பர்யக் கலை என்றும் அநியாயமாக நீதிமன்றம் தலையிட்டு நிறுத்திவிட்டது என்று குற்றஞ்சாட்டுவதோடு, ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு அடுத்தகட்சிதான் காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. நான் இந்தக் கூச்சலிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன். காளையை என்ன அதைவிட பெரிய மிருகமான யானையையும், கொடிய மிருகமான சிங்கத்தையும் அடக்கியவன் மனிதன். […]

ஜல்லிக்கட்டு, மறைய வேண்டும் …

ஜல்லிக்கட்டு விளையாட்டே கூடாது என நினைப்பவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பரப்பப்படும் – ‘ரத்தப் பலி விவசாயத்தை வளமாக்கும்’, ‘மாடு பிடியே வீரத்தின் அடையாளம்’ ‘ஆண்மையின் அடையாளம்’ என்பது போன்ற கருத்தாக்கங்கள் தவறானது. இதுபோன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், பிரச்சாரங்கள் நடக்க வேண்டும்.

புதிய கல்விக்கொள்கையின் பிரச்சனைகள் என்னென்ன?

மத்திய அரசு முன்வைத்திருக்கும் கல்விக்கொள்கை அறிவியலாளர்கள், படித்தவர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. கல்விக்கொள்கைக்கு எதிராக “அறிவியல் இயக்கத்தினர்” பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், கல்வியைச் சிதைக்கும் கல்விக்கொள்கையின் சாரத்தை அவர்கள் பட்டியலிடுகின்றனர். படித்தவர்கள் அனைவருக்கும் வேலை இல்லை. காரணம் வேலைவாய்ப்புகள் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. இநத உண்மையை மறைத்து திறன்கள் இல்லாமைதான் காரணம் எனக்கூறி திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் எட்டாம் வகுப்பிற்கு மேல் சேவைசார் தொழிற்கல்விக்கு  (service) பரிந்துரைக்கிறது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் […]

பேராசையின் உச்சகட்டம்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் பயணிக்கும் போது, இருமருங்கிலும் பச்சை பசேலன்ற வயல்வெளிகள் கண்ணுக் கினிய காட்சிகளாய் அமைந்த காலம் ஒன்றிருந்தது. வைகை அணை யிலிருந்து கால்வாய் மூலம் பாயும் நீர்வளத்தால் மேலும் வளங் கொழித்தது மேலூர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல சிறப்புக்களில் ஒன்று, அது தொடர்ச்சியின்றி இருப்பது.  மற்றொன்று அதன் தொன்மை மிக்க வலுவான பாறைகள். கிரானைட் என்றழைக்கப்படும் இப்பாறைகளின் அருமையை கட்டடக் கலை வல்லுநர்கள் நன்கறிவர். இயற்கை அளித்த இந்தக் கொடையை வெட்டி […]

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)

பண்டங்கள் மற்றும் சேவை வரி – சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.

மதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …

சிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது. நூலாசிரியர் நா.முத்துநிலவன் தமிழகம் முழுதும் அறியப்பட்ட நல்ல நாகரீக பேச்ச்சாளர் , முற்போக்கு […]

இரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)

(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.) “இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் படைத்தானா” என்பது கவியரசு கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு திரைப்பாடலின் பல்லவி. அதன் அடுத்த வரி, ‘…ஏழையைப் படைத்தவன் அவன் என்றால், இறைவன் என்பவன் […]