ஜோயல் பிரகாஷ் . . . . . தொடரும் கல்வி நிறுவன சாதியப் படுகொலைகள் . . . . . . . !

ரோகித் வெமூலாவிலிருந்து மட்டுமல்ல.. நாம் அறியப்படுவது இங்கிருந்துதான் முத்துகிருஷ்ணன், சரவணன், அனிதா, இப்போது ஜோயல் பிரகாஷ்…! என கல்விநிலையங்களில் சாதியத்தின் பெயரால் திறமையான மாணவர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்தி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தற்கொலைக்கு தூண்டி கொண்றொழிக்கிறது கல்வியின் பெயரால் இயங்கும் சாதியக் கொலைக்கூட்டங்கள்.! சென்னை கவின் கலைக் கல்லூரியில் செராமிக் பிரிவை சேர்ந்த மாணவர் ஜோயல் பிரகாஷ் (தலித் கிறிஸ்தவர்) சொந்த ஊர் வேலூர் மாவட்டம். அங்கிருந்து தினமும் சென்னைக்கு பயணம் செய்து படித்து […]

அடக்குமுறை லத்திகளில் ஆணென்ன, பெண்ணென்ன?

ஆறு நாட்கள் அமைதியாக அறவழிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் என்று சொன்ன அதே வாய் தான் 7-வது நாளில் தீவிரவாதிகள் என சித்தரித்து போராட்டத்திற்கு முடிவுக்கட்டியது. இதில் பலி ஆடுகளாக்கப்பட்டது அப்பாவி மீனவக் குப்பத்து மக்களும், தலித் மக்களும்தான். ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என்ற கோரிக்கை வைத்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை காவல்துறை கடந்த 23ம் தேதி தனது முழு அதிகாரத்தை கொண்டு ஒடுக்க முயன்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் “எங்கள் […]

பொய்மையின் குருக்கள் ஒரு எச்சரிக்கை !

    ’ஜல்லிக்கட்டு’ பண்பாட்டுத் தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டம், காவல்துறை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தகைய அடக்குமுறைகள் புதியவை அல்லவென்றாலும், இந்தமுறை மக்கள் கண்முன் பட்டவர்த்தனமாக நிகழ்த்தப்பட்டது. ஏன் ஜல்லிக்கட்டு? தமிழக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நம்மால் வரிசைப்படுத்த முடியும். காவிரி நீர் உரிமைக்கான போராட்டத்தை டெல்டா விவசாயிகள் நடத்தினார்கள். அது விவசாயிகள் அமைப்புகளின் ஒன்றுபட்ட போராட்டமாகவும், அனைத்துக் கட்சிகளின் போராட்டமாகவும் மாறியது. மாநிலம் தழுவிய கடையடைப்பு நடந்தபோது, சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளும் வலுவான […]

சீறிய வரலாறு . . . . . !

‘ நமக்கு ஓட்டரசியல் தேவையில்லை , தேவை மாற்று அரசியல் , மாணவர் அரசியல் ’   ‘ டெல்லிக்கு தமிழகம் அடிமையில்லை’ இவையெல்லாம் நேற்றைய சென்னை சாலை மறியலில் கேட்ட பேச்சுகள், முழக்கங்கள்.. கேன்சர், காச நோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலையை ஏற்றி இலாபம் பார்த்தது நோவார்ட்டிஸ் என்ற நிறுவனம், கின்லே, அக்வாஃபீனா யார் இந்த நிறுவனங்கள் ? இந்த விஷயங்களெல்லாம் நேற்றைய சாலை மறியலில் இளைஞர்களாலும், யுவதிகளாலும் முன்வைக்கப்பட்ட பேச்சுகள் . […]

ஜல்லிக்கட்டு போராட்டம் அரசியல் தேவையா??

காணும் பொங்கல் அன்று கூட சென்னை போன்ற பெருநகரத்தில் அவ்வளவு கூட்டத்தை பார்க்க முடியாது. குறிப்பாக மெரீனா கடற்க்கறையில் இவ்வளவு ஜனத்திரள் , போதாதற்கு ஐடி கம்பெனி ஊழியர்கள் பலரும் அவரவர் ஐடி வளாகத்தில் ஆயிரம் ஆயிரமாக திரண்ட காட்சி. சரியாக சமீபத்தில் இதுபோன்ற கூட்டத்தை இவ்விடங்களில் பார்த்ததாக நினைவில்லை. இவர்கள் அனைவரும் கூடி எழுப்பிய கோஷம் “ஜல்லிக்கட்டு வேண்டும்” . “ஜல்லிக்கட்டை தடுக்காதே” , “ஜல்லிக்கட்டு எங்கள் கலாச்சாரம்” என்பவைதான்!! நடுத்திர மக்கள் இவ்வளவு பெருவாரியாக […]

L&T Infotech நிறுவனத்திடம் நியாயம் கேட்கும் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் . . . . . !

தகவல் தொழில்நுட்ப துறை , இது இன்றைய இளைஞர்களின் கனவு உலகம் . ஏன் இந்த துறைக்கு இவ்வளவு வரவேற்பு ? கை நிறைய சம்பளம் , வியர்வை இல்லாத கழுத்து பட்டை , அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் , சமூகத்தில் உயர்ந்த நிலை ; இவை தாம் இந்த துறைக்கு மாணவர்களையும், இளைஞர்களையும் கவர்து இழுக்கும் வாசகங்கள் . இவைகள் அனைத்தும் உண்மை என்றாலும் , இவை மட்டுமே இந்த துறையை செலுத்துபவை அல்ல […]

L & T Infotech மோசடி, கல்லூரி வளாகத் தேர்வுகளின் உண்மை முகம் . . . . . . . !

விடுமுறை காலமான  மே , ஜூன் மாதங்களில்   பொதுவாக   மாணவர்களில் இரு பிரிவினர் மட்டும் சற்றே பயம் கலந்த உணர்வோடு நாட்களை நகர்த்திக் கொன்டிருப்பர். இக்கட்டுரையை அவர்கள் படித்தார்களேயானால்  நான்  எந்தப் பிரிவை குறிப்பிடுகிறேன் என்று அவர்களுக்கு  சொல்லி தெரியவேண்டியதில்லை. மற்றவர்களின் வசதிக்காக கூறுவதானால் , ஒன்று பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரி செல்லவிருக்கும் பிரிவினர்கள் . மற்றொன்று கல்லூரி படிப்பை முடித்துவிட்டு  வேலைக்கு செல்லும் என்னத்தோடு இருக்கும் பிரிவு.  கடந்த ஒருமாதமாக தொலைக்காட்சிகளிலும் , இணையதளங்களிலும் […]

பள்ளி தீ விபத்து

கும்பகோணம் பள்ளி விபத்து: அரசு தப்பலாமோ?

10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பை மட்டும் வாசிப்பவர்களுக்கு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதோடு முடிந்துவிடும். ஆனால், அது சட்டெனக் கடந்துபோகக் கூடிய சம்பவமா?

எரிக்கப்பட்ட கல்விக்கடன் பத்திரங்களும், எழுச்சிமிகு மாணவர் போராட்டங்களும்…

உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் போன்ற ஸ்கேன்டிநேவியன் நாடுகளில், உயர்க்கல்விக்கான செலவில் 5-10% மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும்; மீதித் தொகையினை அரசே ஏற்றுக்கொள்கிறது. அதுவே, […]