நாம் தமிழர் உறவுகளுக்கு ஒர் மனம்திறந்த மடல் …….!

தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன்கள்  அமீர் , ரஞ்சித் இடையிலான விவாதம் குறித்து நீங்கள்  பரவலான விமர்சனங்களையும் , பல வினாகளையும் முன்வைத்தீர்கள் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் விமர்சனங்களும் ,வினாக்களுமே ஆரோக்கியமான  அரசியலின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம்.  ஆனால் அந்த நிகழ்வில் இறுதியாக நடந்த விவாதத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்த நீங்கள் ரஞ்சித் அவர்களின் ஒட்டுமொத்த உரையின் சாரம்சத்தை மறைத்ததுதான் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும் நிலைக்கு […]

தர்மதுரைகளைத் தொலைத்துவிட்டோமே! | NEET | NEETExam | Anitha

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டியும் நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து 88,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை முன்னரே அறிந்து கொண்டு தேர்வு எழுதிய அப்பாவிக் கூட்டம் நம் தமிழக மாணவர்களாகத்தான் இருக்கும். நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பிருந்தே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். தமிழக அரசின் சார்பிலும், கண்டிப்பாக விலக்கு வாங்கப்படும் என உறுதியளித்துக் கொண்டே […]

குர்மீத் ராம் ரஹீம் சிங் எனும் பாலியல் குற்றவாளி . . . . . . . !

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் வெறும் சாமியார் மட்டுமில்லை என்பதுதான் இந்தக் கலவரங்களுக்கான மிக முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் அவரைப் பற்றிய தகவல்கள் நமக்கே பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது. 1948ம் ஆண்டு மஸ்தானா பலோசிஸ்தானி என்பவரால் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மஸ்தானா இறந்த பிறகு 1990ம் ஆண்டு தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவரானார் குர்மீத் ராம் […]

தலாக் … தலாக்… தலாக் ….

இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர். சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு […]

அதிமுக இணைப்பு நாடகம் – அம்பலக்கூத்து . . . . . . !

  தமிழக அரசியல் களம் தன் வெற்றிடத்தை, அரசியல் சூதாட்டங்களால் நிரப்பியபடி நகர்கிறது என்றாலும் மாற்றரசியலுக்கான வாசலை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக் கழக ஆட்சிகளின் மிக முக்கியமான காலகட்டம் இது. அண்ணாதுரை மறைவு, எம்ஜிஆர் மறைவு போல மற்றுமோர் மறைவு இல்லை ஜெயலலிதாவின் மறைவு. உலகமயச் சூழலில், தமிழக அரசியல் களத்தின் போக்கு, இருபது ஆண்டுகளாகவே அதன் திசைவழியில் முக்கியத்துவம் உடையது. முன்னேறிய மாநிலமான தமிழகத்தின் அரசியல், இந்தியக் கூட்டாட்சித் தனத்துக்கு பெரும் சவாலாகவும், அதன் […]

இலுமினாட்டி என்ற கதையாடல் . . . . . . . . !

இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர். அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக […]

அன்பிற்கினிய வசந்தா, எனக்களிக்கப்பட்ட தீர்ப்பும் சிறையும் இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம்!

நமது நம்பிக்கைகள் வெற்று காலியிடமல்ல என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. நமது நம்பிக்கைகள், சிந்தாந்த ரீதியாக வலுவிழந்ததில்லை. நாம் வெல்வோம்.

காவல்துறைக்கு சங்கம் அவசியமா?

தமிழ்நாடு காவல் துறையிலிருந்து சங்கம் வைக்க அனுமதி கோரி மீண்டும் குரல் எழுந்துள்ளது.  வழக்கம் போல அரசு அதனை அங்கீகரிக்க மறுக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் சங்கம் வைத்து தமது பிரச்சனைகளை தீர்க்க உரிமை உள்ள நாட்டில் காவல்துறைக்கு மறுக்க பல காரணங்களை அரசும் உயர்மட்ட அதிகாரிகளும் முன்வைக்கின்றனர். பல காரணங்கள் என சொன்னாலும் சுத்தி வளைத்து சொல்ல வருவது காவல்துறையின் ஒழுக்கம் கட்டுப்பாடு போய்விடும் எனும் ஒரே காரணம்தான். அரசின் பார்வைக்கு ஒழுக்கம் எனப்படுவது யாதெனில் […]

ஜி.எஸ்.டி – எனும் பொருளாதார துல்லியத் தாக்குதல்…!

இந்திய நாட்டில் இன்று பல வகை வரிகள் நடைமுறையில் உள்ளன. ஆம். ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சராசரியாக 10 வகையான வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவை விதித்து வரும் வரிகள் அனைத்தும் இவற்றில் உள்ளடக்கம். ஒருங்கிணைக்கப்பட்ட வரி முறை : இத்தகைய வரிகள் அனைத்தையும் பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான ஒரே வரியாக மாற்றுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று […]

ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை & பால் ஆகியவை வதந்திகளே . . . . . . . !

ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை, பால் ஆகியவை வதந்திகளே என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக கேள்விக்குறியுடனான தலைப்பை போடுவதும் கூட அவசியமில்லாமல் ஒரு வதந்தியை உயிரோடு வைத்திருக்கும். ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, ப்ளாஸ்டிக் பால் என்று பலவிதமான வதந்திகள் நம்மை ஆட்கொள்கின்றன. உண்மைதானா? நாம் உணவை வாங்கிவருகின்ற ப்ளாஸ்டிக் கவரைப் போன்றதுதானா நாம் சாப்பிடும் உணவும்? … பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் இந்த செய்தி உத்திரபிரதேச ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டு இன்று நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ளன. […]