ஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா . . . . . !

முன்னுக்கு வருகிற பிரச்னைகள் மீது எல்லோரும் ஆளாளுக்கு ஏதாவது சொன்னது போக அறுதியான உண்மை என்கிற ஒன்று இருக்குமல்லவா, அதை நான்தான் சொல்லப்போகிறேன் என்பது போல எழுதுவது ஜெயமோகனின் வாடிக்கை. விட்டுப்போன மிச்சம் மீதிகளை கலந்துக்கட்டி ஏதாவது சொல்வதற்கு சால்ஜாப்பாக ‘உடனடியாய் கருத்து சொல்வதில் எப்போதும் தயங்குகிறவன்’ என்று மிகுந்த அடக்கத்தோடு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளவும் தயங்கமாட்டார். உடனே, முன்னணி எழுத்தாளர்களெல்லாம் மூடிக்கொண்டிருக்கும் போது (வாயைத்தான்) இவராவது வாய் திறந்து அருளியிருக்கிறார் பார்த்தீர்களா என்று சிலர் குதியாளம் போடுவார்கள். […]

அலையுறும் எறும்புகள் (சிறுகதை)

இரவு நேரம். பன்னிரெண்டைத் தாண்டி கடிகார முள் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மாடி வீடு. மேலத் தெருவில் உள்ளது. மேலத்தெருவிற்கு சிவன் கோவில் தெரு என்றொரு பெயரும் உண்டு. மேலத்தெரு அகலமானது. மேலத்தெருவின் 28ம் நம்பர் கதவைத் திறந்தால் 7 வீடுகள். உள்ளே நுழைந்து இடது பக்கம் திரும்பினால் மாடி வீட்டின் படிக்கட்டுகள். மாடி வீட்டில் இரண்டு அறைகள். படுக்கையறை கட்டிலில் மகனும், மகனது அம்மாவும் படுத்திருந்தார்கள். கட்டிலின் அருகில் பெரியதொரு ஜன்னல். ஜன்னல் கதவுகளைத் […]

ஆட்டோகிராப் …..!

வீட்டிற்குள் நுழைந்தவள் முகம் கை கழுவிக் கொண்டு சமையலறையில் நுழையப் போனவளை ‘ லட்சுமி ‘ என்று அழைத்து அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடான காப்பியை தந்தான். ” ஸாரி லட்சுமி உன்னோட வேலை சுமையை யோசிக்காமல் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன் ” என்றான்.

வாசிப்பின் காதலர் தின வாழ்த்துக்கள் !

பல மாதங்கள் ஆயிற்று அந்தத் தோழரைப் பார்த்து. சில ஆண்டுகளாக நளினி பெங்களூரில் இருப்பவர். கடந்த வாரம், எதிர்பாராத ஒரு புத்தக வாசிப்பு அவரை சந்திக்க உதவியது. கூரியரில் எழுத்தாளர் திலீப் குமார் அனுப்பிக் கொடுத்த அவரது சிறுகதைத் தொகுதியில் நான் எதிர்பார்த்தபடியே எனக்கு மிகவும் பிடித்த அவரது “ஒரு குமாஸ்தாவின் கதை” இருக்கவே, அலுவலகத்திலிருந்து மாலை புறப்படுகையில் ரயில் பயணத்தில் வாசிக்க எடுத்தேன், இடையே வந்த இரண்டு அலைபேசி அழைப்புகளுக்கு நடுவே நகர்ந்த கதையின் முக்கியமான கடைசி ஒன்றரை பக்கங்கள் இருக்கையில் நான் இறங்கவேண்டிய […]

காதல் செய்வோம்…

வாழ்வின் பல உன்னத தருணங்களை தரவல்லது காதல்.. காதலிக்காத கடவுள்கள் இங்குண்டு.. காதலிக்காத புரட்சிக்காரன் இங்கு யாருண்டு.. பகத்சிங்க்கு கூட காதலி இல்லையே தவிர காதல் குறித்த பார்வையுண்டு.. காற்றில் பரவும் மெல்லிசையை விடவும் இனிதானது.. கைப்பேசி வழியே காதுகளை வந்தடையும் காதலியின் குரல்.. மொட்டவிழும் பொழுதுக்காய் காத்திருக்கும் புகைப்பட கவிஞனின் பதற்றத்துக்கு சற்றும் குறைவற்றது.. ஒற்றை எழுத்தில் வந்து சேரும் குறுஞ்செய்திக்காக காதலிப்பவன் புரியும் தவம்.. எல்லோராலும் போராட முடிவதில்லை ஆனால் எவராலும் காதலிக்காமல் இருக்க […]

விசாரணை, யாரை விசாரிக்கச் சொல்கிறது?

‘‘இல்லீங்கய்யா… நான் ஆஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போவேங்கய்யா”  என மேலதிகாரியிடம் திமிறவும் முடியாமல் விலகவும் முடியாமல் சமுத்திரக்கனி பேசுகையில், “கோட்டாவுல வேலைக்கு வந்தவன் நியாயம் பேச வந்துட்டான்” என்பதாக ஒரு வசனத்தை போகிற போக்கில் மேலதிகாரி வழியாக சொல்லிச்செல்வதன் மூலம் கோட்டாவில் வேலைக்கு வந்தவர்களுக்குள் கொஞ்சம் கூடுதலாக மனசாட்சியும் மனிதாபிமானமும் இருக்கிறது என்பதாக காட்சிப்படுத்துகிறார் வெற்றி மாறன்.

அப்பா சிறுவனாக இருந்தபோது – நூல் அறிமுகம்

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய பெற்றோர்களின் சிறுவயது நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும். இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிற தன்னுடைய அம்மாவும் அப்பாவும் கூட ஒரு காலத்தில் தன்னைப்போல சிறுகுழந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதே குழந்தைகளுக்கு மலைப்பாக இருக்கும். நம்முடைய பெற்றோர் சின்னவயதில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், நம்மைப்போல ஏதாவது செய்திருப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லா குழந்தைகளுக்கும் இயல்பாகவே இருக்கும். “நான் குட்டி வயசா இருக்கும்போது…..” என்று உங்களுடைய குழந்தைகளிடத்தில் சொல்லத்துவங்கிப் பாருங்கள். உடனேயே அவர்களது கண்கள் விரிந்து ஆர்வதத்தில் […]

தண்ணீர் – கந்தர்வன் சிறுகதை

ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை.