அண்ணன் விற்பனைக்கு… (சிறுவர் கதை)

அமுதா நான்காம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் அகிலன். அவன் ஒரு வால்பையன். எப்போதும் ஏதாவது அட்டகாசம் செய்வான். அதனால் அவனை அமுதாவுக்கு பிடிக்கவே பிடிக்காது. சாப்பிடும்போது அவளுடைய தட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டு விடுவான். அவளுடைய புத்தகத்தில் கிறுக்கிவிடுவான். அவளுடைய பென்சிலை எடுத்துக் கொள்வான். இப்படி நிறைய வால்தனம் செய்வான். ஒருநாள் அவர்களின் தெருவில் “பொதுச்சந்தை” நடக்கப் போவதாக அறிவிப்பு வருகிறது. “பொதுச்சந்தை என்றால் என்னப்பா?” என்று அப்பாவிடம் கேட்டாள் அமுதா. […]

ஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்

“இப்ப உள்ள குழந்தைங்க எல்லாம் எவ்வளவு புத்திசாலியா இருக்காங்க… பயங்கர ஆச்சரியமா இருக்கு… நானெல்லாம் கல்லூரி படிக்கும்போதுகூட ஃபோனை பார்த்ததில்ல. ஆனா என் பொண்ணைப் பாருங்க, என்னோட ஸ்மார்ட் போனில் என்னமா பூந்து விளையாடுறா. என்னென்னவோ ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் பண்றா. புதுபுதுசா கேம்ஸ் எல்லாம் விளையாடுறா. எனக்கு கூட அதெல்லாம் தெரியாது” இப்படிப் பெருமை பேசும் பெற்றோரை சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது. இது உண்மைதானா? ஸ்மார்போனிலும், டேப்லட்டிலும் விளையாடும் குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று நாம் பெருமைகொள்ளமுடியுமா? […]

அப்பா சிறுவனாக இருந்தபோது – நூல் அறிமுகம்

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய பெற்றோர்களின் சிறுவயது நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும். இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிற தன்னுடைய அம்மாவும் அப்பாவும் கூட ஒரு காலத்தில் தன்னைப்போல சிறுகுழந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதே குழந்தைகளுக்கு மலைப்பாக இருக்கும். நம்முடைய பெற்றோர் சின்னவயதில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், நம்மைப்போல ஏதாவது செய்திருப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லா குழந்தைகளுக்கும் இயல்பாகவே இருக்கும். “நான் குட்டி வயசா இருக்கும்போது…..” என்று உங்களுடைய குழந்தைகளிடத்தில் சொல்லத்துவங்கிப் பாருங்கள். உடனேயே அவர்களது கண்கள் விரிந்து ஆர்வதத்தில் […]

எதற்காக சிறுவர் நூல்கள் வாங்க வேண்டும்???

“ஒரு பெரிய காடு இருந்திச்சாம். அதுல சிங்கம், புலி, கரடி, ஓநாய், நரி, முயல், யானை அப்படின்னு நிறைய மிருகங்கள் இருந்திச்சாம்….” என்று நாம் கதை சொல்லத் துவங்கும்போதே, அதனை குழந்தைகள் கற்பனை செய்யத் துவங்கிவிடுவார்கள். அதனால், கதைகளின் வழியாக அவர்களின் கற்பனைத்திறனையும் அறிவையும் ஒருசேர வளர்க்கமுடியும். அவர்கள் சிறந்த மனிதர்களாக வளர்வதற்கும் கதைகள் நிச்சயம் உதவியாக இருக்கும். தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கென்றே ஒரு சிறு தொகையையாவது ஒதுக்கிவிடுங்கள்.. யாருக்காக/எதற்காக சிறுவர் […]

இரா. நடராசனுக்கு பால சாகித்ய அகடமி விருது

தமிழில் சிறுகதை, நாவல், அறிவியல் நூல்கள் என அனைத்துத் தளங்களிலும் இயங்கிவரும் முன்னணி எழுத்தாளர், கல்வியாளர் நடராசன். சிறுவர் இலக்கிய படைப்பாளியாக கடந்த இருபதாண்டு களாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவரது ஆயிஷா எனும் குறுநாவல் தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது!

2014ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

வாத்து ராஜா – சிறுவர்நூல்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “வாத்து ராஜா” என்கிற சிறுவர் நூலை சமீபத்தில் எனது சிறுமகளுக்கு வாசித்துக்காட்டினேன். தலைப்பைப் பார்த்ததுமே, “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா..” என்று துவங்கி ஏதோ ஒரு கற்பனை ராஜாவின் வாக்கையையும் வரலாற்றையும் சொல்லப்போகும் சராசரி ராஜாகாலத்துக் கதைதானோ என்று நினைத்திருந்த எனக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் உறங்குமுன், சில பக்கங்களை வாசித்துக் காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இக்கதையினை வாசித்துக்காட்டிய நாட்களில், “இரவு எப்பப்பா வரும்?” என்று […]

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது […]

விக்கிரமாதித்தன் கதைகள் …

விக்கிரமாதித்தன் கதை தமிழகத்தில் அதிகமான விற்பனையான புத்தகங்களில் ஒன்று, அந்த கதைகளை சின்னவயதில் கேள்விப்பட்டிருகிறேன். அந்த கதைகள் முன்னர் தினமலர்-சிறுவர்மலர் இதழில் காமிக்ஸ் வடிவில் வரும், அதற்காக பள்ளி முடிந்ததும் சிறுவர் மலர் இதழுக்காகவே நூலகம் செல்வோம். அந்த கதைப் புத்தகத்தை சென்ற ஆண்டில் வாங்கினேன் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த புத்தகம் 26ம் பதிப்பைக் கண்டுள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, வடமொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு சென்றிருக்கிறது. அந்த கதைகள், போஜரானுக்கு சிம்மசானம் சொல்லியகதை, விக்கிரமாதித்தனுக்கு […]