ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்கும் பாடல்கள்!

நூல் அறிமுகம் கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் தி.நடராஜன் பாரதி புத்தகாலயம் பக்.352 ரூ.250 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம் என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப் புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்க வரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான் பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்த நாட்களின் அன்றாடமாக இருந்தது.

இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி?

நூல் அறிமுகம் கல்வி என்பது உணவு, உடை, உரையுள் போல ஒரு அத்தியாவசியத் தேவை. இதை உலகத்தின் அனைத்து முற்போக்காளர்களும் ஏற்றுக் கொள்வர். எல்லா அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் நமது இரு சக்கர வாகனம் பஞ்சர் ஏற்படும் போதும், நண்பர்களுடன் டீக்கடைக்குச் சென்று ரெண்டு டீ சொல்லிவிட்டு காத்திருக்கும்போதும், பேருந்தின் ஜன்னல் வழியே பாக்கும் போதும் பல சிறுவர்கள் மேலாடை கூட இல்லாமல் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். அவர்களைப் பற்றி சிந்தித்திருப்போமா? அவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை […]

விக்கிரமாதித்தன் கதைகள் …

விக்கிரமாதித்தன் கதை தமிழகத்தில் அதிகமான விற்பனையான புத்தகங்களில் ஒன்று, அந்த கதைகளை சின்னவயதில் கேள்விப்பட்டிருகிறேன். அந்த கதைகள் முன்னர் தினமலர்-சிறுவர்மலர் இதழில் காமிக்ஸ் வடிவில் வரும், அதற்காக பள்ளி முடிந்ததும் சிறுவர் மலர் இதழுக்காகவே நூலகம் செல்வோம். அந்த கதைப் புத்தகத்தை சென்ற ஆண்டில் வாங்கினேன் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த புத்தகம் 26ம் பதிப்பைக் கண்டுள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, வடமொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு சென்றிருக்கிறது. அந்த கதைகள், போஜரானுக்கு சிம்மசானம் சொல்லியகதை, விக்கிரமாதித்தனுக்கு […]

குதிரைக்கு கொம்புதான் முளைத்திருக்கிறது

’தவறாகவேப் புரிந்து கொள்ளப்படும் பல விஷயங்களைப் போலவே “ சிறுவர் இலக்கியம்” என்பதும் சிறுவர்களைப் பற்றி பேசும் இலக்கியம் என்றே தவறாகக் கொள்ளப்பட்டு விட்டதா என்கிற அச்சம் எனக்கிருக்கிறது. சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் ஏராளம் குவிகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான எழுத்து என்பது இல்லை என்றே சொல்லுமளவு அருகித்தான் கிடக்கிறது. ஆனால் இந்தக் குறையை நீக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் தம்பிகள் விஷ்ணுபுரம் சரவணனும், உமாநாத் செல்வனும். வேண்டுமானால் பாருங்கள் இந்த இரண்டு பிள்ளைகளும் இந்தத் தளத்தில் பெரிதாய் வளர்ந்து வருவார்கள். அதை […]