பலூட்டா – அறுவடையில் பங்கு . . . . . . . !

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான தலித் மக்களின் வாழ்வியலை எளிமையாக சுட்டிக்காட்டிச் செல்லுகின்றது தயா பவாரின் இச்சுயசரிதை. மராத்தி மொழியின் முதல் தலித் சுயசரிதை என்பது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பு. இந்நூல் வெளிவந்த காலகட்டத்தோடு ஒப்பிடும்பொழுது சாதியம் இன்று அதன் பரிணாமங்களை அடைந்துள்ளதே ஒழிய, எப்பொழுதும் போன்ற ஊர் சேரி பிரிவினைகளும், சாதியப்பாகுபாடுகளும் அதன் பொருளில் எவ்விதத்திலும் மாறுதலடையாமல் அப்படியே இருக்கின்றன. மும்பையின் “கோல் பிதா”, “காமாட்டிபுரம்” மற்றும் “காவாக்கானா” போன்ற ஸ்லம் பகுதி மக்களை, அவர்களின் […]

“கட்டைப் பஞ்சாயத்தும், பக்குவப்பட்ட ஜனநாயகமும்“ – மாதொருபாகன்

இராமாயணமும், மகாபாரதமும் எப்படி புனைக்கதைகளோ அதே போன்ற ஒரு புனைக்கதைதான் மாதொருபாகன். புனைக்கதைகள் அதன் படைப்பாக்க மதிப்பு என்ற அடிப்படையில், படைப்பாளியின் தேர்ச்சித் திறனும், அழகியல் உணர்வும் வாசகனுக்கு ஒருவித புலனின்பத்தை வழங்கக் கூடியது.

புலிகளின் தமிழீழம் என்பது முஸ்லிம்களற்ற தனிநாடு…

வாழ்வின் ஆதாரம் காதல். வாழ்வின் தூரத்தை நிர்ணயிக்கப் போதுமான அளவு கோளாக இருப்பதுவும் காதல். காதலுக்கு ஆண்பெண் பேதமில்லை. அதுகுடும்பப்பெண், போராளி, படித்தவள், படியாதவள், சமூகஆர்வலர், ஆர்வலரில்லாதவர் என்பதான மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.

தமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்

இந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார்.

கருப்பு யானைகளுக்கு வெள்ளையடிக்கும் ஜெயமோகன்

துயரத்தின் விசும்பல்களாலான கண்ணீருக்கும், கிளிசரின் கண்ணீருக்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ள கூடிய நவீன நாட்களில் சுரண்டல் கைகள் இலக்கியத்திலும் ஆழ ஊடுருவ முயல்கிறது. அதுதான் எம்மை திடுக்கிட வைக்கிறது. ஜெயமோகன் அவர்களின் வெள்ளையின் வழி நெடுக வரலாறை அறுத்து கூறு போட முயன்றுள்ளது எதற்காக? யார் கண்ணீரை துடைக்க? யாருக்கு கண்ணீர் வரவழைக்க?