ஒரு கத சொல்லட்டுமா சார்…

வேதா: சார் ஒரு கத சொல்லட்டுமா விக்ரம் சார்? விக்ரம்: என்னடா பெரிய கதை… அரசியல் ஒரு சாக்கட… அதனால மூக்கை பொத்திக்கிட்டு போகனும். அதான? வேதா: அதில்ல விக்ரம் சார்… கதையக் கேளு சார்…. ———————————– ஒரு நாட்டில் தங்களுடைய ராஜா அதிகமாக ஏமாற்றுவதை உணர்ந்த மக்கள், ஒன்றுசேர்ந்து அந்த ராஜாவை அடித்துவிரட்டினர். அந்த நாட்டுக்கு புது ராஜா வந்தார். அப்புதிய ராஜா, ஊரெங்கும் காய்களோ பழமோ தராத அழகான அலங்கார மரங்கள் நடும் திட்டத்தை […]

அண்ணன் விற்பனைக்கு… (சிறுவர் கதை)

அமுதா நான்காம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் அகிலன். அவன் ஒரு வால்பையன். எப்போதும் ஏதாவது அட்டகாசம் செய்வான். அதனால் அவனை அமுதாவுக்கு பிடிக்கவே பிடிக்காது. சாப்பிடும்போது அவளுடைய தட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டு விடுவான். அவளுடைய புத்தகத்தில் கிறுக்கிவிடுவான். அவளுடைய பென்சிலை எடுத்துக் கொள்வான். இப்படி நிறைய வால்தனம் செய்வான். ஒருநாள் அவர்களின் தெருவில் “பொதுச்சந்தை” நடக்கப் போவதாக அறிவிப்பு வருகிறது. “பொதுச்சந்தை என்றால் என்னப்பா?” என்று அப்பாவிடம் கேட்டாள் அமுதா. […]

ஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்

“இப்ப உள்ள குழந்தைங்க எல்லாம் எவ்வளவு புத்திசாலியா இருக்காங்க… பயங்கர ஆச்சரியமா இருக்கு… நானெல்லாம் கல்லூரி படிக்கும்போதுகூட ஃபோனை பார்த்ததில்ல. ஆனா என் பொண்ணைப் பாருங்க, என்னோட ஸ்மார்ட் போனில் என்னமா பூந்து விளையாடுறா. என்னென்னவோ ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் பண்றா. புதுபுதுசா கேம்ஸ் எல்லாம் விளையாடுறா. எனக்கு கூட அதெல்லாம் தெரியாது” இப்படிப் பெருமை பேசும் பெற்றோரை சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது. இது உண்மைதானா? ஸ்மார்போனிலும், டேப்லட்டிலும் விளையாடும் குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று நாம் பெருமைகொள்ளமுடியுமா? […]

செல்லாக்காசு . . . . . . . !

இந்த நாலு நாளா தூங்க முடியலை. மனசுல நிம்மதி இல்லை. எனக்கு மட்டும் இல்லை. அக்கம் பக்கத்துல இருக்கற என்னோட சிநேகிதகாரங்களும் நிம்மதியா இல்லை. ஒவ்வொரு தடவையும் வீட்டுல கரண்ட் கட்டாகறப்ப நம்ம வீட்ல மட்டுமா? ன்னு ஒரு கவலை வந்து, எல்லா வீட்டுக்கும் கட்டாகியிருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிம்மதி வருமே அது மாதிரி நிலைதான் இப்ப. ஆனா திரும்ப கரண்ட் வரல. நமக்கு மட்டும் கரண்ட் இல்லேன்னா, மனசு பதறுமே அது மாதிரி ‘எப்ப அமைதி […]

நரோடா காவ்ன் . . . . . . . !

பின்புறம் டீ பாய்லர் வைத்துக் கட்டப்பட்ட சைக்கிளில் முகமெல்லாம் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் ரபீக். அன்று காலை எண்ணெயால் துடைக்கப்பட்டிருந்த பச்சை வண்ணமடிக்கப்பட்ட அவனது சைக்கிள் பளிச்சென்று இருந்தது. ஹாண்டில்பார்களின் இரு முனையிலும், பெண்கள் சடை முடியப் பயன்படுத்தும் குஞ்சம் போன்ற ஒரு பொருள் அழகுக்காக பொருத்தப்பட்டிருந்தன. அவை ஹாண்டில்பார்களுக்கு வால் முளைத்தது போல காற்றில் படபடத்துப் பின்னோக்கிப் பறந்தது. ஒரு மஞ்சள் நிறத் துணிப்பை ஹாண்டில் பாரில் தொங்கிக் கொண்டு இருந்தது. அதிலிருந்த பொருளை அடிக்கடி […]

அலையுறும் எறும்புகள் (சிறுகதை)

இரவு நேரம். பன்னிரெண்டைத் தாண்டி கடிகார முள் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மாடி வீடு. மேலத் தெருவில் உள்ளது. மேலத்தெருவிற்கு சிவன் கோவில் தெரு என்றொரு பெயரும் உண்டு. மேலத்தெரு அகலமானது. மேலத்தெருவின் 28ம் நம்பர் கதவைத் திறந்தால் 7 வீடுகள். உள்ளே நுழைந்து இடது பக்கம் திரும்பினால் மாடி வீட்டின் படிக்கட்டுகள். மாடி வீட்டில் இரண்டு அறைகள். படுக்கையறை கட்டிலில் மகனும், மகனது அம்மாவும் படுத்திருந்தார்கள். கட்டிலின் அருகில் பெரியதொரு ஜன்னல். ஜன்னல் கதவுகளைத் […]

ஆட்டோகிராப் …..!

வீட்டிற்குள் நுழைந்தவள் முகம் கை கழுவிக் கொண்டு சமையலறையில் நுழையப் போனவளை ‘ லட்சுமி ‘ என்று அழைத்து அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடான காப்பியை தந்தான். ” ஸாரி லட்சுமி உன்னோட வேலை சுமையை யோசிக்காமல் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன் ” என்றான்.

தண்ணீர் – கந்தர்வன் சிறுகதை

ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை.

பெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்கக் கடிதம் …

ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.

எஞ்சிய சில நல்ல பக்கங்கள்

அம்மாவிற்கு வரவர ஞாபகமறதி அதிகமாகிவிட்டது. மூக்குக் கண்ணாடியை, சுலோக புத்தகத்தை, பீரோ சாவியை எங்கே வைத் தோம் என்பது மாதிரியான மறதி இல்லை. நிகழ்வுகள், மனிதர்கள் குறித்தான நினைவுகளின் மறதி. அம்மாவின் இயல்பே அதுதான் என்றால் நாங்கள் இத்தனை வேதனைப்பட மாட்டோம்.