ஒரு சர்வாதிகாரியால் தன்னிலை கடக்க முடியுமா . . . . . . ?

ஃபிடலின் இறப்புக்கு பின்னர்  ஃபிடலைப் பற்றிய , கியூபாவைப் பற்றிய  பல ஆயிரக்கணக்கான  கட்டுரைகளும் , எழுத்துக்களும் பல கோணங்களில் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன .  பி.பி.சி யும் , சி.என்.என்  னும் தினமும் சில மணி நேரங்களாவது கியூபாவையும், ஃபிடலை பற்றிய செய்தியையும் ஏதோ ஒரு வகையில் காட்டிக்கொண்டிருக்கின்றன (நல்ல ஸ்பான்சர் போல!!) . எழுத்துக்களிலும், காட்சி ஊடங்களிலும் , சமூக ஊடகங்களிலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஃபிடலைப்பற்றியும், கியூப அரசாங்கத்தைப் பற்றியும்  அவதூறூகளும் , […]

போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த வார்த்தைகள் ஒரு நாளும் சாகாது. போய் வா […]

கொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . !

  அக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது. அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி இருக்கையில், இந்த மரணங்கள் நம் இதயத்தின் ஒரு நரம்பைக் கூட தொட முடியாத ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம். முதலாளித்துவ […]

தனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்…

பணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.

வெறுப்பை ஆழமாக விதைக்கிறதா ”வாகா” திரைப்படம் . . . . . . . !

ஹரிதாஸ் படத்தை இயக்கிய இயக்குநரின் படம் என்பதால் “வாகா” படத்தில் ஏதாவது கண்டிப்பாக இருக்கும் என்பதே, வாகா படத்திற்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். இந்திய இராணுவ வீரர்கள்…. பாகிஸ்தான் இராணுவ வீரர்களால்… எப்படியோ பிடிக்கப்பட்டு எல்லையில் தலை துண்டிக்கப்பட்டு வீசப்படுகிறார்கள்… அப்படி பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும் இந்திய இராணுவ வீரர்களை சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்… என்று கதையின் ஆரம்பம் மிக மிக கனமாக ஒரு படபடப்போடு தொடர்கிறது… பாவம் அதற்கு பின் அந்த கதை […]

ஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா . . . . . !

முன்னுக்கு வருகிற பிரச்னைகள் மீது எல்லோரும் ஆளாளுக்கு ஏதாவது சொன்னது போக அறுதியான உண்மை என்கிற ஒன்று இருக்குமல்லவா, அதை நான்தான் சொல்லப்போகிறேன் என்பது போல எழுதுவது ஜெயமோகனின் வாடிக்கை. விட்டுப்போன மிச்சம் மீதிகளை கலந்துக்கட்டி ஏதாவது சொல்வதற்கு சால்ஜாப்பாக ‘உடனடியாய் கருத்து சொல்வதில் எப்போதும் தயங்குகிறவன்’ என்று மிகுந்த அடக்கத்தோடு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளவும் தயங்கமாட்டார். உடனே, முன்னணி எழுத்தாளர்களெல்லாம் மூடிக்கொண்டிருக்கும் போது (வாயைத்தான்) இவராவது வாய் திறந்து அருளியிருக்கிறார் பார்த்தீர்களா என்று சிலர் குதியாளம் போடுவார்கள். […]

LGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .

கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians குறித்தான ஆவணப்படமொன்று இயக்கும் பணியில் உள்ளார். LGBT செயற்பாட்டாளரான மாலினியிடம் LGBT குறித்தும், ‘பிரைட்’ ஊர்வலத்தின் நோக்கங்கள் குறித்தும் சில கேள்விகளை […]

சுயநல கவிதை

– உலகம் உருளுதடா -மனிதன் உள்ளமும் உருளுதடா ! பணத்தைத்தேடி பகட்டைத்தேடி -மனிதன் மனம் உருண்டோடுதடா ! மனிதன் சமுதாயக்கூட்டமடா -ஆனால் சுயநலமா செயல்படுகிறானடா! கல்வியை இலாபமாக்கிறானடா – மனித அறிவின் வளர்ச்சியை பாழாக்குகின்றானடா ! மருத்துவத்தை வியாபாரமாக்கின்றனடா – சகமனிதன் உயிரரை காவுவாங்குகிறானடா! வளங்களை சூறையாடுகின்றனடா -அவன் பெரும் முதலாளியாக்குகின்றனடா! நாட்டை நிர்முலமாக்குகின்றனடா-அந்நிய முதலாளிகளின் கைகூலியாகி! வேடிக்கை பார்க்குதடா -சுயநலமாய் சகமத்தியத்தர கூட்டமடா ! தெருமுனையில் தீயடா -சகநடுத்தர வீட்டையும் எரிக்குமடா ! உணர்ந்துக்கொள்ள மறுக்குதடா […]

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் தொ(ல்)லை பேசியின் வாயிலாகவும்,நேரிலும் இறைவி திரைப்படத்தை பார்த்துவிட்டாயா..? அப்படம் மீதான உமது கருத்து என்ன..? என்றெல்லாம் இந்நாட்டின் தேசியத்திற்க்கு ஏதோ பங்கம் வந்துவிட்டது போல் கேள்வி கேட்டு துளைத்ததால் சரி இறைவி என்ற திரைப்படத்தை […]