’மாற்று – சமூக இணையம்’ ஒரு புதிய தொடக்கம் …

அன்பார்ந்த நண்பர்களே, ஆகஸ்ட் 15 முதல் ஒரு புதிய இணையதளம் தொடங்குகிறோம். தமிழில் சமூக வலைத்தள வசதிகளை உள்ளடக்கிய முதல் இணையமாக இது அமைந்திருக்கும். டுவிட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் – போல அல்லாமல், ’மாற்று’ மேலும் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ‘கட்டற்ற மென்பொருள்’ கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இணையத்தில் நமது அந்தரங்கத்திற்கு பாதுகாப்பில்லை என்பதால், மிக அவசியமான தகவல்களை தவிர மற்ற தகவல்களை நாங்கள் கேட்பதில்லை. அவசியமான விவாதங்களுக்கான களமாகவே இதனை அமைத்துக் […]

நமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …

‘மாற்று இணையதளம்’ – ஆகஸ்ட் 15, 2013 முதல் தனது சேவையை தொடங்குகிறது. மாற்று, ஏற்கனவே ஒரு வலைப்பூவாக செயல்பட்டது. அநீதியை ‘மாற்று’, அடிமைத்தனத்தை ‘மாற்று’, ஆதிக்கத்தை ‘மாற்று’, அறியாமையை ’மாற்று’, என்கிற அடிப்படையில் பல்வேறு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டன. இப்போது மாற்று இணையதளம் ஒரு தனி ஊடகமான பரிணமித்திருக்கிறது. நோக்கம், கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கான இதழியல் நெறியுடன், தொழில்நுட்பத்திலும் மாற்றுக் கட்டமைப்பைக் கொண்டு இதை ஒரு‍ இணையதளமாக கட்டமைத்திருக்கிறோம். இந்தத் தளத்தில் எவரும், தங்களின் சொந்த படைப்பையோ, தங்கள் நண்பர்களின் பதிவுகளையோ பெற்று […]