தனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்…

பணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.

LGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .

கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians குறித்தான ஆவணப்படமொன்று இயக்கும் பணியில் உள்ளார். LGBT செயற்பாட்டாளரான மாலினியிடம் LGBT குறித்தும், ‘பிரைட்’ ஊர்வலத்தின் நோக்கங்கள் குறித்தும் சில கேள்விகளை […]

கெளரவமாகிறது கொலை . . . . . . ! கழுத்தறுபட்டு சாகிறது காதல் . . . . . !

”மத்த ஸ்டேட் மாதிரியெல்லாம் கிடையாதுங்க”, ”தமிழ்நாடு இந்த விஷயத்துல ரொம்ப முன்னேறிடுச்சி” என்று பேசித்திரியும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்கிறோம் என்று சொல்லித் திரியும் தமிழ்நாட்டில், நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் உடுமலையில் நிகழ்ந்தேறியுள்ளது. கடந்த வருடத்தின் எண்ணிக்கையான 43-ல் மேலும் ஒன்று என்று கடந்து போக முடியாத அளவிற்கு விமலாதேவி, கண்ணகி-முருகேசன், கோகுல்ராஜ், இளவரசன் என ஏதோ ஒரு வகையில் தொடர்கதையாகிக் கொண்டே வருகிறது. சாதி மறுத்து காதல் […]

“கலாபவன்” மணி எனும் கேரள மண்ணின் மகத்தான கலைஞன் . . . . . . . . !

கேரளாவின் சேனத்துநாடு குன்னிசேரி வீட்டில் ராமன் மணி சாலக்குடியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையின் கசப்பான சுவையை மட்டும் அறிந்து  வளர்ந்த குழந்தை பருவத்துக்கு சொந்தக்காரர். இளமையில் தனக்கிருந்த வாய்ப்பு வசதிக்கு ஒரு ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையைத் துவங்கவே முடிந்தது. பின்னாளில் பன்முகத் திறமை வாய்ந்த திரைக்கலைஞராக பரிணமித்த “கலாபவன் மணி” என்ற புகழ்பெற்ற திரைக்கலைஞர் தான் அவர். மிமிக்ரி செய்வதிலும் நாடகங்களில் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் இளவயதில்  சிறுசிறு மிமிக்ரி நிகழ்ச்சிகளை […]

காதல் ஃபீனிக்ஸ்

காதலைப் பறவையாக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில் அதன் இறக்கை துடிப்பு சுதந்திரத்தைக் கோரியது! காதலை பனிக்கட்டியாக்கி என் உள்ளங்கையில் வைத்துச் சில்லென்று ரசிக்கையில் உருகி ஓடி வெளியேறிவிட்டது! காதலே கனவுகளாய் மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என ஆசை ஆசையாய்ப் படுக்கை விரித்த இரவுகளில் உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது! பின்னர், காதல் பூக்களில் முட்களால் குத்தப்பட்ட கதையும் காதல் நெருப்பில் என் இதயம் வெந்த கவிதையும் இருக்கின்றன அழுக்கேறிய பழைய டயரி பக்கங்கள் நெடுக! நேற்று […]

காதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாடும்!

காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான அரசியல் நிகழ்வல்ல. ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் – சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. தங்கள் காதலை பாதுகாத்துக் கொள்ள – காதலர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்!

ஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.

சம பாலின உறவும் கலாச்சார ஆயுதமும்!

டிசம்பர் 10 மனித உரிமை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, மனித உரிமைகளில் ஒன்றாக வலியுறுத்தப்பட்டு வருகிற சம பாலின உறவு உரிமையை நிராகரிக்கும் தீர்ப்பை இந்தியாவின் தலைமை நீதிமன்றம், அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், சம பாலின உறவு வாழ்க்கையைத் தேர்வு செய்வோரை சிறையில் அடைக்க வழி செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துகிற நாட்டின் அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று […]

தர்மஸ்தலா.. மர்ம ஸ்தலா?

மங்களூர் மாவட்டம், பெல்த்தங்கடி தாலுகா, உஜிரே பஞ்சாயத்துக்கு உட்பட்டது தர்மஸ்தலா. இங்கு புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கோவில் நிர்வாகத்தின் தலைவர், தர்மாதிகாரி என்று அழைக்கப்படுகிற பொறுப்பு வழிவழியாக ஹெக்டே குடும்பத்துக்கு உண்டு. தற்போது வீரேந்திர ஹெக்டே என்பவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார். இவர், பொதுவாக, கோவில் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தர்மஸ்தலாவுக்கே அதிபர் என்று கருதப்படுபவர்.கடந்த 12 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட மர்ம மரணங்கள் தர்மஸ்தலாவில் மட்டும் நிகழ்ந்துள்ளன. இதில் 93 பெண்களும் அடங்குவர். இதில் பிரச்சனை […]

டப்பர் வேர் தயிர்க்காரி …

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு வேலையாக இருந்தேன். மிர்னி, ஒரு டப்பர்வேர் பாத்திரத்தில் இருந்த தயிரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தயிரு வேணுமா தயிரு…தயிரு வேணுமா தயிரு…என்று கூவியபடியே என்னருகில் வந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எனக்கும் தயிருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது. அது இருபத்தைந்து வருடத்திற்கு முந்தய தொடர்பு. அந்த தொடர்பை ஒரே நொடியில் என் ஞாபகச் சிறையில் இருந்து மீட்டெடுத்து விட்டாள். எனக்கு பத்து வயது. […]