பால்புதுமையினர் வெளிப்பாடும் சமூக எண்ணமும் . . . . . . . . . . . . !

சமீபகாலங்களில் தங்களது பாலீர்ப்பு அல்லதுபாலினத்தை வெளிப்படுத்துவது பற்றியஉரையாடல்கள் LGBTQ+ மக்கள் மற்றும் பொதுச்சமூக மக்கள் மத்தியில் அதிக அளவில்ஏற்பட்டுள்ளது. தனது பாலினத்தையோ அல்லது பாலீர்ப்பையோ வெளிப்படையாய் சொல்லிவாழும் LGBTQ+ மக்கள் மட்டுமே மனசாட்சிக்குகட்டுப்பட்டு, அதற்கு துரோகம் இழைக்காமல்வாழ்பவர்கள் எனும் கருத்துக்களை சில LGBTQ+ சமூக மக்களும், பொதுச்சமூகத்தில் சிலரும்கொண்டிருக்கின்றனர். அவ்வாறான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. முதலில் பாலினம்/பாலீர்ப்பு என்பது ஒருமனிதனுடைய தனிப்பட்ட விஷயம், அதனைவெளியில் தெரியப்படுத்த வேண்டுமாவேண்டாமா என முடிவு செய்ய வேண்டியதுஅத்தனிமனிதன்தான். ”நீ மறைவையில்(க்லோசெட் closet) இருக்கிறாய். அதனால் உன்மனத்திற்கு நீ துரோகம் இழைக்கின்றாய் “ எனக்கூறுவது தவறு. மக்கள் கூட்டுச்சமூகமாக வாழும்ஒரு இடத்தில், தனி மனிதன் தன் முடிவுகளைஅச்சமூகத்தினைக் கருத்தில் கொண்டே எடுக்கவேண்டியுள்ளது. மனத்தின் சாட்சி என்பதுஅம்மனிதன் வாழும் சமூகத்தின்விதிகளின்படியே அமைகிறது. அவ்வகையில்பார்த்தால் இந்தியாவில் பால்புதுமையினர்வேற்றுகிரகவாசிகளாகவும், சமூகத்தைக்கெடுக்க வந்தவர்களாகவும்பார்க்கப்படுகின்றனர். ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைசேர்ந்தவர் எப்படி தனது சாதியை பிறர்அறியக்கூடாது என்ற நிலைக்குஉள்ளாக்கப்படுகிறாரோ அதுபோன்ற நிலைக்கேபால்புதுமையினரும் தள்ளப்படுகின்றனர். ஒருவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல்இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அதில் அவரது / அவரைச் சார்ந்தவர்களின்விழிப்புணர்வு மற்றும் சமூக பொருளாதாரநிலைமையும் அடங்கும். ஓர்பாலீர்ப்பு உள்ளஒருவரின் வெளிவரும் பயணம் தன்னைப்பற்றிஅறிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்வதில்இருந்தே தொடங்குகிறது. இவ்வறிமுகம் ஊடகம்மூலகமாவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோஇருக்கும். அவை என்றுமே நேர்மறையாகஇருந்ததே இல்லை. முக்கியமாக தமிழ்த்திரையுலகம்ஓர்பாலீர்ப்பை ஒருகேலிக்கூத்தாகவே மாற்றி வைத்துள்ளது. இந்தியக் குடும்பங்களில்/பள்ளிகளில்பாலுறவைப்பற்றியோ,பாலினத்தைப்பற்றியோவிவாதிக்கப்படுவதில்லை. எட்டாம் வகுப்பு முதல்ஆண், பெண் உறுப்புகள் பற்றிய பாடங்கள்உயிரியலில் எனக்கு வந்திருக்கிறது ஆனால் ஒருமுறை கூட ஆசிரியர் அப்பாடங்களை நடத்தியதேஇல்லை. அப்படி இருந்தும் திருமணம் தான்வாழ்க்கை என இச்சமூகம் கூறுகிறது. ஒருகுழந்தைக்குப் பாலுறவைப்பற்றிய முதல்அறிமுகம் அதன் பள்ளி நண்பர்களிடமிருந்தேகிடைக்கிறது. அவ்வறிமுகம் எதிர்பாலினத்தைப்பற்றியதாகவே இருக்கும். அவ்வாறு இருக்கையில் ஓர்பாலீர்ப்பு உள்ள ஒருகுழந்தை அதை ஒரு கட்டம் என்றோ / தனக்குவந்த நோய் என்றோ நினைக்கும், தானும்ஒருநாள் தன் நண்பர்களைப்போல எதிர்பாலினத்தவர் மீது காதல் / ஆசை கொள்வோம்என நினைக்கும். இவை எல்லாவற்றையும் மீறிஒருவர் தன்னை ஏற்றுக்கொண்டாலும் தன்னைச்சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றஅச்சம் இருக்கும். பாலினம் சார்ந்த எந்தவிஷயத்தையுமே என்றுமே விவாதித்திடாத தன்பெற்றோரிடம் இதை எப்படிக் கூறுவது என்றதயக்கமும், அவர்கள் தன்னைகைவிட்டுவிடுவார்கள்  என்ற அச்சமும்தலைதூக்கும். தன்பாலீர்ப்பு உள்ளவர்க்கும்சரசாரி மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் மற்றபிரச்சனைகளும் இருக்கும் என்பதையும் நாம்நினைவில்கொள்ள வேண்டும். தன்னைப்பற்றிபெற்றோரிடம் கூறினாலும் அவர்கள் தங்கள்பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள கால அவகாசம்தேவைப்படும். ஒருவர் தனைப்பற்றி தன்பெற்றோரிடத்தில் கூறினாலும் மற்றவர்களுக்குஏன் கூற வேண்டும் என்று கூட நினைக்கலாம். இச்சமூகத்தின் நம்பிக்கை மற்றும் அதன்விழிப்புணர்வின்மையாலேயே நாங்கள்எங்களைப்பற்றி இவ்வுலகத்திற்குஅறிவித்துக்கொள்ளும் நிலைமைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இங்கே நாங்களும்வாழ்கின்றோம் என்பதை வெளிக்காட்டஎங்களுக்கு தேவை தைரியமே தவிரகுற்றவுணர்ச்சி அல்ல. அதே சமயம்மறைவையில் வாழ்பவர்கள்தைரியமில்லாதவர்களா என்றால் இல்லை, அவரவர் அவர்களுக்கு சாதகமான நேரத்திற்காககாத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு அப்படிஒரு நேரம் வராமல் கூட போகலாம். என்னைப்பொறுத்தவரையில் வெளிப்படையாய்வாழாவிட்டாலும் தான் விரும்பிய நபரோடுவாழும் உறுதியுடைய அனைவருமே தங்கள்மனதிற்கு துரோகம் இழைக்காதவர்களே. – கொன்றை வேந்தன்  

பழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . !

பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது பத்து பேர் கூடுதலாக […]

நிப்பான் தாஸ்களின் தேவை அதிகமாகி இருக்கிறது . . . . . . . . . !

சமூகம் அதில் சூழ்ந்திருப்பவர்களுக்குத் தீர்மானித்திருக்கும் எல்லை என்பது மிகச்சிறியது. அதிலும் இறுக்கிக் கட்டப்பட்டவர்கள் பெண்கள். ஒவ்வொரு முறையும் இந்த இறுக்கங்களைத் தளர்த்தியும், தடைகளைத் தகர்த்தெறிந்துமே வாழ்வில் வெற்றியென்ற பக்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அப்படிப்பட்ட தடையை மீறித்தான் உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கிறார் தங்கமகள் ஹிமா தாஸ். அசாம் மாநிலம் நௌகாவ் மாவட்டத்தில் உள்ள காந்துலிமாரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹிமா தாஸ். தந்தை ரஞ்சித் தாஸ் மற்றும் ஜோனாலி தாஸுக்கு தொந்தரவு […]

பற்றி எரியும் ஸ்டெர்லைட் , அரசியல் தீர்வா ,விஞ்ஞானத் தீர்வா?

ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கீ சூடு நடந்து முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இநேரம் ஆட்சி தமிழக அரசியல் சூழல் கொந்தளிப்பாகி இருக்க வேண்டும் . ஆனால் முதல்வரும் துனைமுதல்வரும் எப்போதும்போல் பேட்டிகளை கொடுத்து கடந்து செல்கின்றனர். மத்தியில் ஆட்சி செய்பவர்களின்  ஆணவம் இவர்களை விஞ்சுவதாய் இருக்கிறது. தமிழ் சமூகத்தால் முற்றாக நிராகரிக்கபட்டிருக்கும் கட்சிகள் என்று உண்டானால் அது , பாஜகவும் அதிமுகவும்தான். ஆனால் அவர்கள்தான் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களின் கயமையையும் , […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6

மதுரையில் பிரதம சங்க சிக்ஷா வர்க்:    1995-ம் ஆண்டில் தான் சி.பி.ஐ.எம் தலைவர் இ.பி.ஜெயராஜனைக் கொல்ல முயற்சி நடந்தது. ரயிலில் ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து தான் அந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் ஜெயராஜனை சுட்டவனுக்கு குறி தவறியது. நவீன, தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயராஜன் உயிர் பிழைத்தார். விக்ரம்சாலில் சசி, வேட்டை தினேசன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கிகளுடன், ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவருமே […]

கொல்லவும் முடியாது… வெல்லவும் முடியாது…

ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். […]

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம், வேலன்டைன் தினமாக கூறப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத பாதிரியாரான வேலன்டைன் […]

காதல்/காதலர் தினம் – கற்பு, கலாச்சாரம் மற்றும் சில பரிமாணங்கள்!

காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து இவற்றை காப்பாற்றிக் கொண்டிருக்கையில், மிக எளிதாக காதல் என்ற பெயரில் அவற்றை சீர்குலைத்தால் எப்படி அவர்களால் […]

மேலாண்மறை நாடு கண்டெடுத்த முத்து பொன்னுசாமி !

” நான் என் எழுத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். என் கிராமத்தில் நிலவும் சூழல்களுக்கு நேர்மையாக இருப்பதன் மூலம், நான் உத்தரபிரதேசத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கு பொருந்தும் எதையாவது எழுதியிருப்பேன். நாம் யாருடைய பிரச்னையை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம் இல்லையா ? “ சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியை மகசசே விருது பெற்ற பிரபல ஊடகவியலாளர் சாய்நாத் சந்தித்து எடுத்த பேட்டி இந்த வகையில் முடிகிறது. அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் இன்றைய […]

டெங்கு அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமானிய குடிமகளின் கடிதம் . . . . . . !

கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் ஒழியாமல் டெங்கு செய்திகளாகவே இருந்தன. தீபஒளித் திருநாளின் மகிழ்வு கூட பல குடும்பங்களில் துயர்தரும் நாளாக மாறி துக்க இருள் சூழ்ந்ததாக இருந்ததையும் காண நேர்ந்தது. கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் டெங்கு பற்றிய செய்திகளாகவே இருந்தன. அதில் காய்ச்சலால் அனுமதிக்கப் பட்டவர்கள் , அதற்கு பலியானவர்கள் என அன்றாடம் பெரும்பட்டியல் ஒருபுறம். இதில் தவமிருந்து பெற்ற […]