செப் 11: மகாகவி நினைவு நாள் – நினைவலைகள் …

எஸ் வி வேணுகோபாலன்  தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரும், மகாகவி பாரதியும் இளமைக்காலம் தொட்டுக் கூடவே வருகின்றனர். இயற்கையின் காட்சியானாலும், ஆட்சியாளர்மீது கோபம் என்றாலும் பாரதி உடனிருக்கிறார் எப்போதும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு பொருள் கிடைக்கச் செய்பவை சிறந்த இலக்கிய வாசிப்பை வழங்குகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் இலக்கிய பிரதி என்று சொல்லப்படுவது இங்கே நினைவுக்கு வருகிறது. குயில் பாட்டையும், பாஞ்சாலி சபதத்தையும் அதனால் தான் ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு முறையில் கொண்டாடி வாசித்துக் கொண்டிருப்பது. சென்னை புறநகர் […]

பொம்மலாட்டக் கலைக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்

ஐ.வி. நாகராஜன் பொம்மலாட்டக் கலை என்பது ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கலை யாக இருந்தது இந்தக் கலை நிகழ்ச்சி கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங் களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த வித்தியாசமான கலை, அட்டைகளால் தயார் செய்யப்பட்ட பொம்மை களை திரைக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் வேடிக்கையாக கதைக்கு ஏற்ப பின்னணிக் குரல் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிரோட்டம் கொடுப்பார். அதைப் பார்த்து ரசிப்பவர்கள் தங்களை மறந்து அந்த கதாபாத்திரங்களோடு […]

அஹிம்சையெனும் பேராசை …

வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று விழிமலர்ந்து கண்டுகொண்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையில், தற்போது அரசால் அனுமதிக்கப்பட்ட நுழைவாயில் ஒன்றின் வழியாக உள்ளே நுழைகிறேன். என் வாழ்நாளில் […]

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது […]

கழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்

”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்கும் பாடல்கள்!

நூல் அறிமுகம் கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் தி.நடராஜன் பாரதி புத்தகாலயம் பக்.352 ரூ.250 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம் என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப் புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்க வரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான் பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்த நாட்களின் அன்றாடமாக இருந்தது.

குறுந்தொகை – The compilation of miscellaneous feelings in love

அழகன் முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துடன் துவங்கும் குறுந்தொகை முழுக்க முழுக்க காதல் தான். இருந்தாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் காட்டும் காதலை ரசிக்க முடியவில்லை.’ இவங்களுக்கு காதலிக்குறத தவிர வேற வேலையே இல்ல போல என்று சலிக்கும் படியாக இருந்தது. முக்கியமாக, வளையல் கையை விட்டு நழுவுவது, பிரிவால் உடல் மெலிவது, தேமல் தோன்றுவது போன்ற உவமைகள் பல இடங்களில் ரிப்பீட் ஆகும் போது…. பல வரிகள் உண்மையாகவே மனதை வருடும் படியாக இருந்தது.

சென்னை மாநகரத்திற்கு வயது 375

சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா […]