”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” – நேர்காணல்

“தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல். பொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும்  அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி வந்திருக்கிற சூழலில் இடதுசாரிகளின் பங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்னவாக இருந்திருக்கிறது என கேள்விகள் வருகின்றன ஆனால் உள்ளபடியே பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் […]

அரசு சாரா நிறுவனங்களும் (NGO), அதன் மறைமுக அரசியலும் . . . . . . . !

முதலாளியம் ஓய்வு நேரங்களை உற்பத்தி செய்யும். அந்த ஓய்வு நேரங்களை வேறு வழியில் தானே திருடியும் விடும். மேலை நாடுகளிலேயே இந்த நிலைமைதான். இந்தியா போன்ற மூன்றாம் உலக வளரும் நாடுகளில் இன்னும் முதலாளித்துவமே முழு வளர்ச்சி அடையவில்லை. சமூகம் இன்னும் நிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய தாராளவாதச் சமூகமாக இருக்கிறது. இத்தாராளவாதப் போக்கு, அசலான புரட்சிக்கும் பெருந்தடையாக இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவில் மொழி, இன, தலித் அடையாள அரசியல் போக்குகள் தவிர்க்க இயலாதவை. அடிப்படையில் சிற்சில பாசிசப் […]

நா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்!

பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார்…. தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் என்கிற கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமாருக்கு சிறுவயதில் இருந்தே புத்தகங்களோடு… நெருங்கிய உறவை உருவாக்கிக் கொடுத்தார், அவரது அப்பா. 1975 ஜூலை மாதம் 12ம் தேதி பிறந்த நா.முத்துக்குமார், 2016ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 14ம் தேதி, தன்னுடைய 41வது வயதில் நம்மை விட்டு, இந்த உலகத்தை விட்டு…. அவரது உறவை துண்டித்துக் கொண்டார். சென்னை […]

மா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்

மாதவையா கிருஷ்ணன் என்ற மா.கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியரான அ.மாதவையாவின் எட்டாவது பிள்ளையாக திருநெல்வேலியில் ஜூன் 30 ஆம் நாள் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையுடன்  நெருக்கமாக இருந்தால் என்னவோ ஊர்சுற்றும் மனப்பான்மையும் இலக்கிய ஆர்வமும் சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. ஏட்டுக்கல்வியில் பெரிதும் நாட்டமில்லாத அவருக்கு தன்னுடைய மயிலாப்பூர் வீட்டைச் சுற்றியிருந்த புதர்காடுகளில் இருந்த வெளிமான், ஓநாய் மற்றும் பறவைகள் மீதே அதிக ஆர்வமிருந்தது. பள்ளி மாணவனாக இருந்தபோதே ஒரு கீரிப்பிள்ளையை செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார். சென்னை […]

சுதந்திரப் போராட்ட தியாகியா வாஞ்சிநாதன் . . . . !

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் […]

அன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ – ஆதவன் தீட்சண்யா

ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் ஒசூரில் நடத்தினோம். எப்படியோ தகவல் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து அன்றைக்கு அறிமுகமானவர் தான் தோழர் ஆண்ட்டோ. பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நேரிலோ போனிலோ எப்போதும் சினிமா சினிமா என்று சினிமாவை […]

“சிவம் பேசினால் சவம் எழும்”

“ கோழையே சுடு! நீ சுடுவது சே அல்ல, சாதாரண மனிதனை நோக்கித்தான், உனது கைகள் நடுங்காமல் துப்பாக்கியை உயர்த்தி எனது நெஞ்சைப்பார்த்து சுடு

செப் 11: மகாகவி நினைவு நாள் – நினைவலைகள் …

எஸ் வி வேணுகோபாலன்  தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரும், மகாகவி பாரதியும் இளமைக்காலம் தொட்டுக் கூடவே வருகின்றனர். இயற்கையின் காட்சியானாலும், ஆட்சியாளர்மீது கோபம் என்றாலும் பாரதி உடனிருக்கிறார் எப்போதும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு பொருள் கிடைக்கச் செய்பவை சிறந்த இலக்கிய வாசிப்பை வழங்குகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் இலக்கிய பிரதி என்று சொல்லப்படுவது இங்கே நினைவுக்கு வருகிறது. குயில் பாட்டையும், பாஞ்சாலி சபதத்தையும் அதனால் தான் ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு முறையில் கொண்டாடி வாசித்துக் கொண்டிருப்பது. சென்னை புறநகர் […]

பொம்மலாட்டக் கலைக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்

ஐ.வி. நாகராஜன் பொம்மலாட்டக் கலை என்பது ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கலை யாக இருந்தது இந்தக் கலை நிகழ்ச்சி கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங் களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த வித்தியாசமான கலை, அட்டைகளால் தயார் செய்யப்பட்ட பொம்மை களை திரைக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் வேடிக்கையாக கதைக்கு ஏற்ப பின்னணிக் குரல் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிரோட்டம் கொடுப்பார். அதைப் பார்த்து ரசிப்பவர்கள் தங்களை மறந்து அந்த கதாபாத்திரங்களோடு […]