‘சே’ எனும் மந்திரச் சொல்…

“நான் எழுந்து நிற்கின்றேன் துப்பாக்கியை என்னை நோக்கி நேராக நீட்டு, குறி பார், தைரியத்தை வரவழைத்துக்கொள், கண்களை மூடிக்கொண்டு சுட்டு விடு”  அடுத்த நொடி சாவைத் தழுவிக் கொள்ளப் போகிறோம் என தெரிந்தும் தன்னை சுட வந்த ராணுவ வீரனைப் பார்த்து இவ்வாறு சொன்ன துணிச்சலுக்கு சொந்தக்காரன் ”சே”.சுட்டது பொலிவிய ராணுவ வீரன். ”கோழையே நீ சுடுவது சே–வை அல்ல ஒரு சாதாரண மனிதனை” எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னாதன் வாழ்நாளில் கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் […]

தியாக தீபம் திலீபன் – பட்டினிப் போராட்டத்தில் பனிரெண்டு நாட்கள்

“புரட்சி” என்கிற வார்த்தைக்குப் அடுத்து நமது நாட்டில் மதிப்பு இழந்துவிட்ட ஒரு வார்த்தையாக இருப்பது உண்ணாவிரதப் போராட்டம் என்பது. அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக நம்மால் தேசப் பிதா என்றழைக்கப்படும் காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது. காந்தி செய்து கொடுத்த ஆயுதத்தை பலர் தனது கொள்கைகளுக்காக பயன்படுத்தினர் .அனால் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தோர் என்பது சிலரே. அவற்றில் மிகவும் முக்கியமானவர் திலீபன் என்று அழைக்கப்படும் பார்த்திபன் இராசையா.

மறைக்கப்பட்ட 9/11

உலகின் பெரும்பாலான மக்களுக்கு 9/11 என்றதும் உடனே நினைவுக்கு வருவது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், செவ்வாய்க் கிழமையன்று நியூயார்க் நகரின் வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்டதே, ஊடகங்கள் பல தொடர்ச்சியாக அதைப் பற்றி செய்திகள் வெளியிட்டும், ஒளிபரப்பியும் அந்நிகழ்வைத் தாண்டி வேறெதையும் நம்மை சிந்திக்காதவாறு நம் சிந்தனையை மழுங்கச் செய்துள்ளன. இதை விட பல மடங்கு கோரமான ஒரு 9/11 ஐ இவ்வுலகம் ஏற்கனவே சந்தித்துள்ளது. அது நம்மிடமிருந்து நம்மையறியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. […]

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1

வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் மீண்டும் சிறு அளவிலான விவசாயம், வேட்டை, காய் கனிகளை சேகரித்து உண்டு வாழும் ‘இயற்கையை ஒட்டிய’ வாழ்க்கை என்பதைத் தவிர […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள். ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டு, கிழக்கே சோவியத் தொடங்கி இந்திய எல்லை வரை உலகின் பாதியை ஜெர்மனியாகவோ ஜெர்மனியின் காலனியாகவோ மாற்ற நினைத்தார் ஹிட்லர். ஆஸ்திரியா, ரைன்லாந்து, மேற்கு போலந்து மற்றும் சோவியத்தின் ஸ்டாலின்கிராடு போன்ற பகுதிகளை ஜெர்மனியின் பூர்வீகப் பகுதிகள் என்று உரிமை கோரியது ஜெர்மனி. […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)

1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேவேளையில், அவ்விடத்திற்கு சில மைல் தூரத்தில் விஞ்ஞானிகள் குழுவின் கண்காணிப்பில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்சின் தலைமையில் அமெரிக்காவின் போர் தலைமையகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனை விட மிகப்பெரிய […]