பிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…

இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நவம்பர் 16 – கர்த்தார் சிங் தூக்கிடப்பட்ட நாள்!

கத்தார் சிங் தூக்கிடப்பட்ட நாள் 1915 நவம்பர் 16: வாழ்க்கை வரலாறு‍ கர்த்தார் சிங் 1896-ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள் பிறந்தார். பகத் சிங் இவரைத் தன் வழிகாட்டியாக குறிப்பிடுகிறார். கதர் கட்சியை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். கர்த்தார் சிங் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தில் சரபா என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சர்தார் மங்கள் சிங். அவரது தாயார் சாஹிப் கபூர். அவரின் இளவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாத்தாவின் அரவணைப்பில் […]

கழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்

”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.

மதவேடதாரிகள்!

மக்களின் மத உணர்வுகளை ஒரு‍ பிரிவினர் தவறாகவும், சாதுரியமாகவும் பயன்படுத்திக் கொள்வதில் நம் சமூகத்தில் ஏற்பட்டு‍ வரும் நிலைமைகளைப் பற்றி இந்த நாட்டில் வாழும் எவரும் இப்போது‍ கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. இத்தகைய செயல் மூலம் பல்வேறு‍ கலாச்சார நீரோட்டங்களின் சங்கமத்தின் அடிப்படையில் உருவான நமது‍ வளமான வரலாற்று‍ பாரம்பரியம்

தமிழ் அறிவுலகில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்தது !

தமிழ் சமுதாயத்தின் அறிவுலகம் கொண்டாடியிருக்க வேண்டிய, ஆனால் கொண்டாடப்படாத ஒரு பேரறிஞர் மறைந்துவிட்டார். இன்னும் சில மாதங்கள் கடந்திருந்தால் அவருக்கு நூற்றாண்டு கொண்டாடியிருக்கலாம். ஆனால் அகவை 99 நடந்து கொண்டிக்கும்போதே அக்டோபர் 22ம் தேதி அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். அவர் பெயர் என்.சுப்ரமண்யன்! உடுமலைபேட்டையில் தனது இளைய மகன் சுந்தரேசன் வீட்டில் 22ம் தேதி காலை 10 மணியளவில் அவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே நிரந்தரத் துயில் கொண்டுவிட்டார்.

இந்தியா இந்து ராஜ்யமா?

நமது நாடு பல்வேறு மதத்தினர் வாழும் நாடு. ஒரே மதத்தினர் பல்வேறு மொழிகளைக் கொண்டவர்களாக பிரிந்தும், ஒரே மதத்தினர் பல்வேறு சாதியினர்களாக பிரிக்கப்பட்டும் உள்ளனர். இத்தகைய வேற்றுமைகளைக் கொண்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக ஒரே தேசத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். சமுதாயத்தின் மீது, நாட்டின் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படும் பிற்போக்காளர்கள் இவ்வேற்றுமைகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

யோகா – வரலாறு…

(யோகாசனம் என்ற கலை, உலகம் முழுவதும் ஏராளமானோரால் பின்பற்றப்படுகிறது. மிக அதிக விகிதத்தில் மருத்துவர்களைக் கொண்டுள்ள கியூப தேசத்திலும், யோகாசனத்தை தினமும் செய்துவர மருத்துவர்கள் . இந்தியாவிலோ, அது ஆன்மீகவாதிகள் சிலரின் தனியுடைமையாக மாற்றப்பட்டு, கடுமையான விலைவைத்து விற்கப்படுகிறது. யோகாசனம் ஒரு அறிவியல், அது அனைவருக்குமானது, ஒவ்வொருவரும் கற்று, மேம்படுத்தப்படவேண்டிய கலை என்கிற அடிப்படையில் ‘மாற்று’ இணையத்தில் இந்தத் தொடர் வெளியிடப்படுகிறது) யோகா எங்கிருந்து உருவானது, யாரால் உருவாக்கப்பட்டது என்ற சரியான வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் […]

போர் இன்னும் முடியவில்லை …

”தங்களிடம் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு விரோதம் இல்லை எனினும் எங்கள் தாயகத்தின் விடுதலைக்காக தங்களை கொலை செய்ய நேரிடுகிறது” இப்படி ஒரு கடிதம் எழுதி சாவிற்கு தயாராக இருங்கள் என்று அயர்லாந்து நாட்டு வைசிராயை எச்சரித்து பின் கொலை செய்தவர்கள் ஐரிஷ் புரட்சி வீரர்கள். படிக்கும் போதே சிலிர்த்துக் கொள்ளும் ஐரிஷ் புரட்சியாளர்களின் வீரத்திற்கு இணையான எத்தனையோ தீரர்களை பெற்றெடுத்த மண் இந்திய மண். முதல் தற்கொலை போராளி: சிவகங்கை கோட்டையை கைப்பற்ற வாளும், வேலும் கொண்டே […]