ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். […]
Category: இந்தியா
கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி
கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்
அம்பேத்கர் வழியில்…
எங்கும் அம்பேத்கரை பற்றிய பேச்சு. இது வரை தலித் தலைவராக மட்டுமே இனம் கண்ட இந்திய மண்ணில், அம்பேத்கரின் “125 ஆவது பிறந்தநாள்” மத்திய அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு, பலவிதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அம்பேத்கரை யாரென்றோ அவரது சிந்தனைகள் என்னவென்றோ அரசால் பேசப்படுகிறதா என்றால், இல்லை. அப்படி என்றால் அம்பேத்கரை விளம்பரப்படுத்துவதன் நோக்கமென்ன ? தலித் ஓட்டுகளை வாங்குவது மட்டுமா நோக்கம்? ஆர்ஆர்எஸ்எஸின் பிரச்சார ஏடு தொடர்ந்து அம்பேத்கருடைய சிந்தனைகளை திரித்து எழுதி வருகிறது; அம்பேத்கரை “இந்து […]
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு – தேசவிரோதிகள்
பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு […]
காந்தியின் கடைசி பிறந்த நாள் …
காஷ்யபன் ” நான் 125 வயது வரை வாழ்வேன். என்மக்களுக்கு சேவை செய்வதின் மூலம் இறைவனுக்கு தொண்டூழியம் செய்வேன் “என்றார் காந்தியடிகள். அதற்கு ஏற்றார் போல தன் உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் அவருடைய முதல்பிறந்த நாள் வந்தது. உலகம் பூறாவிலும் இருந்து 2-10-47 தேதியன்று வாழ்த்து செய்திகள் குவிந்தன. மவுன்பாட்டன் தன் மனைவி எட்வினா சகிதம் வந்து வாழ்த்து சொன்னார் அதிகாலையில் 5 மணிக்கே சர்தார் பட்டேல் வந்தார். காலை பிரார்த்தனைக்கு பிரதமர் […]
காஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …
“ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்”
வீரம் விளைந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…
தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது.
காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!
காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.
மண்டேலா-அம்பேத்கர்: ஒடுக்கப்பட்டோரின் குரல்கள்!
இறப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், அவர்கள் இந்த சமூக நலன்களுக்கு எவ்வளவு பங்காற்றியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படும்.
தெலுங்கானா – மறக்கடிக்கப்படும் வரலாறு!
வரலாறு, அது எப்போதும் எழுதப்படுபவர் சார்ந்த அரசியல், சூழல், மற்றும் அவரது விருப்பத்திற்கு ஏற்றார் போல் தான் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது, எழுதப்படும். வரலாறு திரிக்கப்படுவது என்பதற்கு மோடி அவர்களின் சமீபத்திய பேச்சுக்களே உதாரணங்கள். வரலாறு எப்போதும் ஒரே மாதிரியாக எழுதப்பட்டதும் கிடையாது. அதேபோன்று சில வரலாறுகள் (அதாவது நிகழ்வுகள்) மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்காக திட்டமிட்டு மறைக்கப்படும். அப்படி மறைக்கப்பட்டு பெருவாரியான மக்களுக்கு தெரியாமலேயே போய்விட்ட ஒரு வரலாறை நினைவு கூர்வதற்கான ஒரு முயற்சி.