வரலாற்றில் இன்று – ஆந்திர பிரதேசம் பிறந்தது

இந்தியா என்பது பல தேசிய இனங்களின் சங்கமிப்பு. தனித் தனியாக சிதறிக் கிடந்த பல ராஜ்ஜியங்களை ஒன்றாக்கியது ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இந்திய அரசு அதிகாரத்தை ஒப்படைக்கும் போதே அவர்கள் எதிர்பார்த்தது “இந்தியா உடைந்துவிடும்” என்பது தான். ஆனால் பல தடைகளைக் கடந்து இன்றும் இந்தியா ஒன்றாய் எழுந்து நிற்கிறது. அதற்கு முழு முதல் காரணம் ஒவ்வொரு இனத்துக்கும் தனியான  மாநிலம் என்று அமைந்து இருக்கும்  மொழிவாரியான  மாநில அமைப்பே.

அக்டோபர் 31 – இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்

இந்திரா காந்தி இரண்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் (அக்டோபர் 31, 1984). இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் மூன்றாவது பிரதமருமாவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, பெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா  காந்தி என்று‍ அழைக்கப்பட்டார். ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் […]

முதலாம் உலக போரைப் பற்றி!

ஒட்டோமான் பேரரசு முதலாம் உலக போரின் போது‍ தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் (அக்டோபர் 30, 1918) முதல் உலகப்போர் உலகம் தழுவிய அளவில் நடைபெறவில்லை எனினும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கலந்து‍ கொண்ட போர். இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

பொன்னியின் செல்வன்!

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்த நாள் (அக்டோபர் 29, 1950)

சுதந்திர தேவி சிலை!

நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் பிரான்ஸ் அன்பளிப்புச் செய்த விடுதலைச் சிலையைத் திறந்து வைத்த நாள் (அக்டோபர் 28, 1886)