யாருங்க நீங்க . . . . . . . . . . ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, யாருக்குமே பிரயோஜனம் இல்லாத அந்த சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தோடு சேர்த்து, ரஜினிகாந்த்தும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார். ஒரேயொரு கேள்விதான் நேற்று ரஜினிகாந்த் கிளப்பிய அனைத்து களேபரங்களுக்கும் அடிப்படையாக இருந்தது. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘#நான்தான்பா_ரஜினிகாந்த்’ முதலிடத்தைப் பிடித்து, ரஜினியை அம்பலப்படுத்தவும் அந்த ஒற்றைக் கேள்வியே காரணமாக அமைந்தது. தூத்துக்குடியில் ஸ்ட்ரெலைட் போராட்டத்தின்போது அதிகார வர்க்கம் நடத்திய அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் சொல்லப்போவதாக நேற்று கிளம்பிச்சென்றார் நடிகர் ரஜினிகாந்த். ‘ஒரு நடிகனான […]

நம்புங்கள் இது நாகரீக சமூகம் . . . விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தின் கொடூரம் . . . . . !

பார்த்தாலே பதைப்பதைக்கச் செய்கின்றன அந்தப் புகைப்படங்கள். கிட்டத்தட்ட முகம் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த உடல்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும் ரத்தத்தின் வாடை, உலகின் எந்த மூலையில் இருந்து பார்ப்பவராயினும் குமட்டலை ஏற்படுத்துகின்றன. தாய், மகள் மற்றும் மகன் என இந்தக் கொடூரத் தாக்குதலில் மகனின் பரிதாபச் சாவு நமக்குள்ளும் பாதுகாப்பற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ளது வெள்ளம்புத்தூர் கிராமம். இந்த கிராமத்தின் தலித் குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். […]

கொல்லவும் முடியாது… வெல்லவும் முடியாது…

ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். […]

நூல் அறிமுகம் – திமுக பிறந்தது எப்படி?

பெரியார் படத்தில் இவ்வாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். காட்சி 1: ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைகிறது. இந்திய நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற இருக்கின்றனர். ஆட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து இங்குள்ள உயர் சாதியினர்களின் கைக்குத்தான் மாறவிருக்கிறது. ஆகவே இந்நாளை நாம் “துன்ப நாளாக” அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்து, தன்னுடைய பத்திரிகையில் “துன்ப நாள்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிடுகிறார். காட்சி 2: அண்ணா தன்னுடைய சகாக்களுடன் இதை எப்படி நாம் துன்ப நாளாகக் […]

ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்குண்மை தெரிந்து சொல்வேன் ….. பாரதி

‘ பாரதி ‘ எனும் பெயர் உச்சரித்த கணம் நினைவில் வருவது ‘ எட்டையபுரத்தானுக்கிணையான புலவனை எங்காச்சும் பார்த்தியா மாடத்தி ‘ எனும் கரிசல் கிருஷ்ணசாமியின் கம்பீரமும் மென்மையும் குழைந்த குரலில் ஒலிக்கும் பாடல் வரியே ! விநாயகரையும் சக்தியையும் காளியையும் போற்றி எழுதி உருவ வழிபாட்டில் ஆர்வம் கொண்ட பக்திமானாக அவரை அடையாளம் காட்டும் கவிதைகளே பின்னர் உண்மையும் அறிவும் அன்பும் இயற்கையுமே கடவுள் என எழுதியதில் அவரின் பரிணாம வளர்ச்சி நமக்கு அடையாளமாகிறது. குயில்பாட்டின் […]

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” – நேர்காணல்

“தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல். பொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும்  அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி வந்திருக்கிற சூழலில் இடதுசாரிகளின் பங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்னவாக இருந்திருக்கிறது என கேள்விகள் வருகின்றன ஆனால் உள்ளபடியே பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் […]

தலைவர்களின் தலைவர் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ

தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவைத் தவிர உலகின் எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த, மக்களுடனான உறவு இருந்திருக்கவே முடியாது. அமெரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் ஒரு சின்னஞ்சிறு தீவும், அந்த தீவின் துணைத்தீவுகளாக சுமார் 300 தீவுகளும் அடங்கும் மிகச்சிறிய பூமிப் பிரதேசம். அதன் ஆட்சியதிகாரப் பொறுப்பிலிருக்கும் ஒரு தலைவர் எப்படி உலகின் உன்னதமான தலைவரானார். உலக சமூகமே மனமுவந்து அவரைத் தலைவராக கொண்டாடுவதன் மர்மம் என்ன? விடை எளிது, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதநேயர், […]

போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த வார்த்தைகள் ஒரு நாளும் சாகாது. போய் வா […]

அரசு சாரா நிறுவனங்களும் (NGO), அதன் மறைமுக அரசியலும் . . . . . . . !

முதலாளியம் ஓய்வு நேரங்களை உற்பத்தி செய்யும். அந்த ஓய்வு நேரங்களை வேறு வழியில் தானே திருடியும் விடும். மேலை நாடுகளிலேயே இந்த நிலைமைதான். இந்தியா போன்ற மூன்றாம் உலக வளரும் நாடுகளில் இன்னும் முதலாளித்துவமே முழு வளர்ச்சி அடையவில்லை. சமூகம் இன்னும் நிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய தாராளவாதச் சமூகமாக இருக்கிறது. இத்தாராளவாதப் போக்கு, அசலான புரட்சிக்கும் பெருந்தடையாக இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவில் மொழி, இன, தலித் அடையாள அரசியல் போக்குகள் தவிர்க்க இயலாதவை. அடிப்படையில் சிற்சில பாசிசப் […]