“அவள்” குறும்படம் . . . . . . . . இருவேறு கோணத்தில் ஒரு பார்வை . . . . . . . !

முதல் கோணம்: ஒரு பாலியல் தொழிலாளியின் எளிய விருப்பத்தை காட்டுகிற குறும்படம், “அவள்”! தோழர் அருண் பகத் இயக்கியுள்ளார். பாலியல் தொழில் உள்ளிட்ட பொதுச் சமூகத்தில் உடல் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி சில வாரங்களுக்கு முன் பரவலாக சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது. சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் உறவு வைத்ததாக சில திரையுலக பிரபலங்களின் பெயர்களை நடிகை ஸ்ரீஜா வெளியிட்டிருந்தார். அச்சமயத்தில், ‘என் உடல், என் உரிமை’ என்கிற ரீதியிலும் அவர் பேசி இருந்தார். […]

“லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம் . . . . . . . !

எங்களை தற்கொலைக்கு தள்ளாதீங்க, வாயில சிறுநீர் ஊத்தாதிங்க… நாங்களும் மனுசங்க தான்! ஒரு பால் ஈர்ப்பும் உரிமைக்குரலும்! “லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம். நீலம் பண்பாட்டு மையம் சமூக மாற்றத்திற்கான தளத்திலும் மனித மாண்பை மீட்டெடுப்பதிலும் தொடர்ந்து தன் பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது. பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சியை தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையத்திற்காக நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாலினி ஜீவரத்னம் இயக்கியுள்ள ஆவணப்படம், “லேடீஸ் அண்ட் […]

லக்ஷ்மி குறும்படம் – இருவேறு கோணத்தில் ஓர் பார்வை . . . . . . .

முதல் கோணம்: கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; பாரதியின்  வரிகள் கற்பு எனப்படுவதை இருபாலருக்கும் சமமென்கிறது. இந்த குறும்படம் ‘லட்சுமி’ நிச்சயமாக கற்பை பற்றிய விவாதங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல. ஒரு மத்திய தர அல்லது நடுத்தர குடும்பங்களின் இயந்திர ஒட்டத்தில் உணர்வு பகிர்வுகளுக்கான நேரம், உணர்வை வெளிப்படுத்துவதற்க்கான வெளி ஏற்படுவதில்லை. இயந்திரத் தனமான வாழ்க்கை நகர்வில் உடலுறவை தவிர்த்து ஒருவருக்கொருவர் செலவிடும் நேரம் என்பது மிக குறைவு .உடலுறவின் உண்மை தன்மையை, […]

களவு – குறும்படம் ஒரு பார்வை . . . . . !

இந்த குறும்படத்தின் கதைக் கரு என்பது சில வருடங்களுக்கு முன நம்மில் பலரும் பெரும்பான்மையாக நகைச்சுவையாகவோ அல்லது கழிவிரக்கமாகவோ கடந்து போன ஒரு புகைப்படம்தான், ஒரு இஸ்லாமிய பள்ளியில் மாநில/மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த ஒரு ப்ளெக்ஸ் பேனரின் புகைப்படம்தான் அது. அதில் ஆண் பால் மாணவர்களின் முகம் மட்டுமே நமக்கு தெரியும் மற்ற பெண் மாணவர்களின் முகம் மொத்தமாக ஹிஜாப் (முகத்திரை) போட்டு மூடப்பட்டு அனைவரையும் பொதுவாக காட்டும். (ஒருவரின் படத்தயே […]

“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” & “டாக்டர்.ஷூமேக்கர்”… “நீலம்” நிகழ்த்திய நெகிழ்ச்சியும், ஏற்றிய நெருப்பும்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது. இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை முத்தமிழ் ஒருங்கிணைத்திருந்தார். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப் படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப் படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட “ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… ஆகிய இரண்டு ஆவணப் படங்களும் முன்மொழிந்தன. ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ராஜதுரை, வெங்கடேஷ் […]

அன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ – ஆதவன் தீட்சண்யா

ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் ஒசூரில் நடத்தினோம். எப்படியோ தகவல் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து அன்றைக்கு அறிமுகமானவர் தான் தோழர் ஆண்ட்டோ. பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நேரிலோ போனிலோ எப்போதும் சினிமா சினிமா என்று சினிமாவை […]

குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை

27 நிமிடங்கள் மனிதன் பேசும் மொழிகளில் எந்த மொழியில்  இருந்தும் ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் ஒரு குறும்படம். உங்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது, உங்களிடம் பேசினால் என்ன நடந்துவிடப்போகிறது… என்று யாரையோ சவுக்கால் அடிப்பதற்காகவே படம் முழுவதும் மொழியை, வார்த்தைகளை இயக்குநர் தவிர்த்திருப்பார் போல. படத்தின் பெயர் குறியீடு. படம் முழுவதும் குறியீடுகள் தான். அந்தக் குறியீடுகளை பார்வையாளர்களின் வசதிக்கு விட்டு விட்டு, உங்கள் பாடு நான் அது தான், இது தான் என்று எதையும் […]

மறக்கப்பட்டவன் விட்ட குத்து … (நாக் அவுட் முதல் தொடர் 2)

பரபரப்பான நகரத்தின் சாலையொன்று. மனிதர்களும் வாகனங்களும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சாலையோரத்தில் ஒரு மூதாட்டி பயறு, கிழங்கு, மீன் போன்ற உணவுப்பொருட்களை விற்பனைக்காக கடைவிரிக்கிறாள். அவற்றின் மீது நாட்டம்கொண்டு ஈக்கள் அவற்றின்மீது மொய்த்துக்கிடக்கின்றன. அந்த கடைக்கு சற்று தள்ளி ஒரு மரத்தின் அருகே கிடத்தப்பட்டிருக்கிறது அந்த மனிதனின் சடலம். அதன் உடலெங்கும் ஈக்கள் மொய்த்துக்கிடக்கின்றன. அய்யா… தர்மம் பண்ணுங்கய்யா… அனாதை பொணம்…தர்மம் பண்ணுங்கய்யா.. என ஒருவன் அந்த பிணத்தைக்காட்டி போவோர் வருவோரிடம் பணம் வசூலித்துக் […]