ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !…

தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் வேஷத்திற்கு பின்னணி பாடகனாக அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.

வல்லினம் ஆக்சுவலி இடையினம்

கல்லூரி படிக்கும் போதே வல்லினம் டிரெய்லர் வந்துவிட்டது. டிரெய்லரைப் பார்த்ததும் அப்படியே  மண்டை முடி எல்லாம் நட்டுக்கொண்டு. படம் பாக்குறோம்டா என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் நான் படித்து முடித்து வேலைக்குப் போய் அடுத்து வேறொரு கம்பெனி மாறிய பிறகு தான் வந்திருக்கிறது. இருந்தாலும் போய் பார்த்துவிடுவோம் என்று போய் பார்த்தேன்.  தியேட்டரில் மொத்தமே இருபது பேர்தான் இருந்திருப்போம். படம் ஆரம்பத்திலேயே கழுகு நாயகன் கிருஷ்ணா வந்தார்… என்னடா கிருஷ்ணா இருக்கார்னு சொல்லவே இல்ல ஒரு வேளை […]

எதுவுமே இல்லாதவனின் அடையாளத் தேடல் – கோலி சோடா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளத்தை அடைவதற்கும், தக்க வைப்பதற்குமான போராட்டமே வாழ்க்கை என்பதுதான் கோலி சோடாவின் ஒற்றை வரி கதை. கோயம்பேடு மார்க்கெட்டில் சொன்ன வேலையை செய்து, கிடைத்த இடத்தில் தூங்கி, ஒரு பெண்ணை காதலிப்பது என்பதை தவிர்த்து எந்த லட்சியமுமின்றி சுற்றித் திரியும் 4 அநாதை சிறுவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்க உத்வேகமளித்து, உதவியும் செய்கிறார் காய்கறி கடை நடத்தும் ஆச்சி. ஆச்சியின் வழிகாட்டுதலின் படி ஒரு மெஸ் ஆரம்பிக்க […]

பிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை!

நதீன் லபாகி என்கிற லெபனான் பெண் இயக்குனரின் இயக்கத்தில், ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் திரைப்ப விருதுக் கதவுகளைத் தட்டிவிட்டு வந்த திரைப்படம் தான் “Where do we go now?”. மத ஒற்றுமையை வலியுறுத்திய இத்திரைப்படம்தான், லெபனான் நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூல் செய்த மாபெரும் வெற்றிப்படம். 50 ஆண்டுகளாக மதம் சார்ந்த போர்ச்சூழலிலேயே வாழ்ந்துவருகிற லெபனான் மக்கள் அனைவரும் மதக்கலவரங்களை வெறுத்து ஒற்றுமையினையே விரும்புகிறார்கள் என்பது இத்திரைப்படத்தின் வெற்றியின்மூலம் உறுதியாகியிருக்கிறது. திரைக்கதை: லெபனான் உள்ளிட்ட […]

மதயானைக்கூட்டம் – குரோதத்திற்கு எதிரான மனசாட்சியின் போராட்டம் !

மதயானைக்கூட்டம் – தலைப்புக்குத் தகுந்தார்ப்போலத்தான் படமும். மதம் பிடித்த யானைபோல, உயிர்ப்பலிக்கு அலையும் மனிதர்களின் கதை. சாதிச் சமூகம் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு இந்தப் படத்திலிருந்து விடை காணலாம். சடங்குகளின் ஊடாகவும், ஒரு ஆணை மையப்படுத்தியும் அமைந்திருக்கும் சமூகத்தில் சாமானியர்கள் எப்படி பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். பொருளற்ற ‘அகம்’ எவ்வாறு அவர்களை வழி நடத்துகிறது என்பதை மதயானைக் கூட்டம் பதிவு செய்கிறது. போடிநாயக்கனூரில் வசிக்கும் தேவர் சாதியின் ஒரு பிரிவான கள்ளர் குடும்பங்கள்தான் கதைக் களம். […]

தூம் 3 – கதை சொல்லாமல் ஒரு விமர்சனம் !

அமீர்கான் வில்லனாக நடிக்கிறார். இதுபோதாதா? தூம் 3 படம் பார்ப்பதற்கு! ஏற்கனவே வெற்றிபெற்ற கதைக் களத்தில், காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் திருடன் – போலீஸ் கண்ணாமூச்சியை வைத்து கட்டமைக்கப்பட்ட சுவாரசியமான திரைக்கதைதான் இதுவும். முதல் காட்சியில் ஒரு வங்கிக் கொள்ளை: அமெரிக்காவில் ஒரு வங்கியின் முன், வீடற்ற நபர் ஒருத்தர் பிச்சையேந்திக் கொண்டிருப்பார். அவரது கையில் சில நூறு டாலர்கள் வந்து விழும், சில நொடிகளில் அது பண மழையாகப் பொழியும். அமீர்கான் மேலிருந்து விழுந்துகொண்டிருப்பார். […]

பிரியமுள்ள பத்ம பூஷண் ரஜினிகாந்த் அவர்களுக்கு!

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் நமக்குள்ளான உறவு 30 ஆண்டுகாலம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதாவது எனது 10 வயதில் போக்கிரி ராஜா ரிலீஸ் […]

இரண்டாம் உலகமும் பெண்களுக்கு எதிரானதே…!

எல்லாவற்றையும் வார்த்தைகளால் சொன்னால் புரிந்து கொள்வதும், மனதில் பதிய வைப்பதும் கடினம் என்பதால், காட்சிப்படுத்தி எளிமையாக புரிய வைப்பது, கல்வி முறையில் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

Haunting landscape

Cities have a peculiar capacity to make one feel alone in the midst of a crowd. Here the pressure for existence is simply overwhelming for the neighbours to notice each other. Individual faces are not remembered, for all men and women are the sheep of “Modern Times” in myriad forms.

Ray – The ruler of silent realms

In Ray’s movies, actions are where the silences are. It is cinema at its purest. Every art form, has its own realm where it reaches its zenith. The thrill of the theatre is in its vibrant expression. What is opera without the crescendo? For a painting, there is the prime feeling which the subordinates strive to invigorate.