தமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்

1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம். சிவாஜிகணேசன், சாரதா, மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம். பி.மாதவன் இயக்கிய படம். நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான். நான் சமீபத்தில் பார்த்தப் படம் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல். ஞானஒளிக்கும் எதிர் நீச்சலிற்கும் இடையில் நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த […]

ஆயுதம் செய்வோம் பாரதியின் பாடல்களால்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்: “இதுவா பாரதி நீ பார்க்க நினைத்த பாரதம்? இதுவா பாரதி நீ சொல்லி கொடுத்தசுதந்திரம்? எங்களுக்கு வெட்கப்படக் கூட விவஸ்தை இல்லை..” மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்’ என்று ஆர்ப்பரித்துக் கூத்தாடினார். ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சியா ளர்கள் ஆனந்த சுதந்திரத்தை அன்றாடம் தவணை முறையில் விற்றுக் […]

தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம் …!

சமூகத்தின் மீது வருத்தப்பட்டும் வருத்தப்படாமல் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் தொகுப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்துள்ளது. இன்றைய தமிழ் சமூகத்தின் அடையாள அரசியலுக்கு ஆயுதமாக சாதிய வெறியர்களால் காதல் எதிர்ப்பு கையிலெடுக்கப்படுகிறது. உயிரினங்களின் இயல்பான எதிர்க்கும் அவர்கள், காதல் நிறைவேறினால் தலையே போய்விட்டது போல் இயற்கைக்கு முரணான தங்கள் அரசியலை முன்னெடுப்பதை – வருத்தப்படாத வாலிபர் சங்கம் சரியாகவே சொல்லிவிடுகிறது. இரண்டரை மணிநேரத்தில் பாடலில், நகைசுவையில் இழையோடும் காட்சிகள் வயிறு குலுங்க வைத்துவிடுகின்றன… திரைக்கதை நகர்த்தலில் […]

தங்க மீன்கள் – சினிமா மொழியை தவறவிட்ட இயக்குனர் ராம் !

(தங்க மீன்கள் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்கும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், இயக்குனர் ராம் – மேம்பட, அவரின் படைப்புகள் மேம்பட வாழ்த்துகள் மட்டும் போதாதே. தங்க மீன்கள் திரைக்கதையிலும், கதையிலும் உள்ள குறைபாடுகளை இந்த விமர்சனம் முன் வைக்கிறது. அதுவும் இயக்குனர் ராம் என்பதால் உருவான எதிர்பார்ப்பிலிருந்து இந்த விமர்சனம் அவரின் அடுத்த இயக்கமான ‘தரமணி’யை மேம்படுத்த உதவுமென, நம்புவோம்)   Image Courtesy : Wikimedia தங்க மீன்கள் – இது நான் வியந்த ராமின் […]

தங்க மீன்கள் – சாதாரணமானவர்களின் வாழ்க்கை …

தங்க மீன்கள் – பள்ளிக்கூடங்கள் குறித்த கதை என்று மேம்போக்காக சொல்லிவிடலாம். ஆனால், இந்தக் கதையில் அது ஒரு பகுதி மட்டுமே. 20 ஆம் நூற்றாண்டில், நம் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏராளமான அப்பன்களின் கதை இது. தன் வாழ்க்கையில் 2 திரைப்படங்கள் மட்டுமே இயக்கிய ஒரு சாதாரண மனிதனின், அசாதாரணமான படைப்பு தங்க மீன்கள். எல்லோரும் பாராட்டுவதைப் போலவே ‘செல்லம்மாவின்’ நடிப்பும், அவள் அப்பாவாக கல்யாணியின் உணர்வுகளும், தாத்தாவின் இறுக்கமும் – இன்னும் பூரி நித்யஸ்ரீ வரை […]

மறக்கப்பட்டவன் விட்ட குத்து … (நாக் அவுட் முதல் தொடர் 2)

பரபரப்பான நகரத்தின் சாலையொன்று. மனிதர்களும் வாகனங்களும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சாலையோரத்தில் ஒரு மூதாட்டி பயறு, கிழங்கு, மீன் போன்ற உணவுப்பொருட்களை விற்பனைக்காக கடைவிரிக்கிறாள். அவற்றின் மீது நாட்டம்கொண்டு ஈக்கள் அவற்றின்மீது மொய்த்துக்கிடக்கின்றன. அந்த கடைக்கு சற்று தள்ளி ஒரு மரத்தின் அருகே கிடத்தப்பட்டிருக்கிறது அந்த மனிதனின் சடலம். அதன் உடலெங்கும் ஈக்கள் மொய்த்துக்கிடக்கின்றன. அய்யா… தர்மம் பண்ணுங்கய்யா… அனாதை பொணம்…தர்மம் பண்ணுங்கய்யா.. என ஒருவன் அந்த பிணத்தைக்காட்டி போவோர் வருவோரிடம் பணம் வசூலித்துக் […]

அமெரிக்காவின் ‘அங்காடி தெரு’

‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் […]

ஆதலால் காதல் செய்வீர் – 106 நிமிட ஆணுறை விளம்பரம் !

ஒரு படைப்பின் தேவை என்ன? என்ன மாதிரியான சமூகத்தில் அது எழுகிறது. அந்த படைப்பின்  நோக்கம் என்ன?  அதன் விளைவென்ன? என்பதை வைத்துதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை நாம் கணிக்க வேண்டும். உடன் பணி புரியும் தோழர்  அழைத்தாரென்று “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பை நம்பி, மழையில் நனைந்து கொண்டே உதயம் தியேட்டருக்கு சென்றோம். பெரும்பாலும் ஆண்-இளைஞர் கூட்டமே மேலோங்கியிருந்தது. ஆங்காங்கே இணையர்களும் அமர்ந்திருந்தனர். கல்லூரியில் படிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பதின் பருவத்திலிருக்கும் இளைஞர்கள் […]

அவன் பெயர் சாப்ளின் …

 காட்சி 1 ஸ்டார்ட் கேமரா இங்கிலாந்தின் பிரபலமான இரவு விடுதி அது. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அன்று மேடையில் பாடுவதற்காக ஹென்னா என்கிற பெண்மணி மிகவும் சிரமப்பட்டு வாய்ப்பு வாங்கியிருந்தாள்.ஒரு காலத்தில் வசீகரப்பாடகியாகத் திகழ்ந்தவளின் வாழ்க்கை திருமணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு திருமணங்கள் நடந்து இரண்டுமே தோல்வியில் முடிந்திருந்தன. விளைவாய் இரண்டு குழந்தைகள். கிழிந்த துணிகளை தைத்துக் கொடுப்பது, சர்ச்சில் பாடுவது என்று பணம் ஈட்ட முயன்றாள் ஆனால் வாழ்க்கை நடத்த அப்பணம் போதுமாயில்லை. பழைய முதாலாளியிடம் கெஞ்சி […]

பெண்களுக்கும் ஆசைகளுண்டு… அதன்படி வாழ உரிமையுமுண்டு…

1994 இல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தினர் சிறுபான்மை டூட்சி மக்களை இனப்படுகொலை செய்த நிகழ்வினை சொல்லும் திரைப்படமான “Shaking hands with the Devil” இல் ஒரு காட்சியில் ஹூட்டு இனத்தை சார்ந்த பெண் பிரதமரிடம் ஐ.நா. தூதுவர் கேட்பார், “நீங்க ஹூட்டுவா? டூட்சியா?” “நான் ஹூட்டு தான்” – அப்பெண் “நெனைச்சேன்” – தூதுவர் “ஹூட்டுவாக இருந்தா என்ன? டூட்சியாக இருந்தா என்ன? பெண்ணாக இருக்கிறேனே! அதைவிடவா பெரிய கொடுமை இருந்துவிடப்போகிறது? […]