வேலையில்லா பட்டதாரி: இரண்டு கோணங்கள் …

இன்றைய இளைஞர்களின் முக்கியப் பிரச்சனையான வேலையின்மையையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. தான் படித்த துறையில், தனக்கான
வேலையைத் தேடி அலையும் இளைஞனின் கதையாக முதல் பாதியும், கிடைத்த வேலையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் போராட்டமாக பிற்பாதியும் கதை நகர்கிறது. உண்மைப் பிரச்சனைகளை தொட்டுக் காட்டினாலே போதும், படத்துக்கு எத்தனை வரவேற்பிருக்கும் என்பதை அரங்கம் நிரூபித்தது. படித்து, வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கூட்டம் – ஆர்ப்பரித்தபடியேதான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற இந்தபடம் ஹிட் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !…

தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் வேஷத்திற்கு பின்னணி பாடகனாக அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.

வல்லினம் ஆக்சுவலி இடையினம்

கல்லூரி படிக்கும் போதே வல்லினம் டிரெய்லர் வந்துவிட்டது. டிரெய்லரைப் பார்த்ததும் அப்படியே  மண்டை முடி எல்லாம் நட்டுக்கொண்டு. படம் பாக்குறோம்டா என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் நான் படித்து முடித்து வேலைக்குப் போய் அடுத்து வேறொரு கம்பெனி மாறிய பிறகு தான் வந்திருக்கிறது. இருந்தாலும் போய் பார்த்துவிடுவோம் என்று போய் பார்த்தேன்.  தியேட்டரில் மொத்தமே இருபது பேர்தான் இருந்திருப்போம். படம் ஆரம்பத்திலேயே கழுகு நாயகன் கிருஷ்ணா வந்தார்… என்னடா கிருஷ்ணா இருக்கார்னு சொல்லவே இல்ல ஒரு வேளை […]

எதுவுமே இல்லாதவனின் அடையாளத் தேடல் – கோலி சோடா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளத்தை அடைவதற்கும், தக்க வைப்பதற்குமான போராட்டமே வாழ்க்கை என்பதுதான் கோலி சோடாவின் ஒற்றை வரி கதை. கோயம்பேடு மார்க்கெட்டில் சொன்ன வேலையை செய்து, கிடைத்த இடத்தில் தூங்கி, ஒரு பெண்ணை காதலிப்பது என்பதை தவிர்த்து எந்த லட்சியமுமின்றி சுற்றித் திரியும் 4 அநாதை சிறுவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்க உத்வேகமளித்து, உதவியும் செய்கிறார் காய்கறி கடை நடத்தும் ஆச்சி. ஆச்சியின் வழிகாட்டுதலின் படி ஒரு மெஸ் ஆரம்பிக்க […]

மதயானைக்கூட்டம் – குரோதத்திற்கு எதிரான மனசாட்சியின் போராட்டம் !

மதயானைக்கூட்டம் – தலைப்புக்குத் தகுந்தார்ப்போலத்தான் படமும். மதம் பிடித்த யானைபோல, உயிர்ப்பலிக்கு அலையும் மனிதர்களின் கதை. சாதிச் சமூகம் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு இந்தப் படத்திலிருந்து விடை காணலாம். சடங்குகளின் ஊடாகவும், ஒரு ஆணை மையப்படுத்தியும் அமைந்திருக்கும் சமூகத்தில் சாமானியர்கள் எப்படி பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். பொருளற்ற ‘அகம்’ எவ்வாறு அவர்களை வழி நடத்துகிறது என்பதை மதயானைக் கூட்டம் பதிவு செய்கிறது. போடிநாயக்கனூரில் வசிக்கும் தேவர் சாதியின் ஒரு பிரிவான கள்ளர் குடும்பங்கள்தான் கதைக் களம். […]

பிரியமுள்ள பத்ம பூஷண் ரஜினிகாந்த் அவர்களுக்கு!

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் நமக்குள்ளான உறவு 30 ஆண்டுகாலம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதாவது எனது 10 வயதில் போக்கிரி ராஜா ரிலீஸ் […]

இரண்டாம் உலகமும் பெண்களுக்கு எதிரானதே…!

எல்லாவற்றையும் வார்த்தைகளால் சொன்னால் புரிந்து கொள்வதும், மனதில் பதிய வைப்பதும் கடினம் என்பதால், காட்சிப்படுத்தி எளிமையாக புரிய வைப்பது, கல்வி முறையில் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்பம் திரைப்படமும் – அதிரவைத்த சில உண்மைகளும் !

“இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல” என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.

நய்யாண்டி – கொஞ்சம் யோசிக்க வேண்டிய நேரம் இது!

‘இடுப்பில்’ காமிரா வைப்பதுதான் முதலில் ‘நய்யாண்டி’ குறித்த விவாதத்தை உருவாக்கியது. அது ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்று சந்தேகங்களும் எழுந்தன. படம் முழுவதும் நடிகை நஸ்ரியா இடுப்பு தெரியும்படி ஒரே காட்சியில் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் சற்று தூரத்திலிருந்து காட்சிப்படுத்தியுள்ளனர். எனவே, நடிகை நஸ்ரியா தன்னை இப்படித்தான் காட்சிப்படுத்த வேண்டும்  என்ற ஒப்பந்தத்துடனே நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆனாலும், இந்த விதத்தில் நஸ்ரியாவைச் சீண்டினால், அது படத்துக்கு விளம்பரமாக அமையும் என வணிகக் குழு […]

ராஜா ராணி … மூன்று கோணங்கள்!

படத்தின் மொத்த கதைக்கும் இரண்டுவிதமான விளக்கங்கள் தரலாம்.
1) காதலர்கள் தொலைந்துபோகலாம், காதலைத் தொலைத்துவிடாதீர்கள். – ஒவ்வொரு நாளையும் காதலோடு வாழ்ந்தால்தான் வாழ்க்கை அழகாகும். இதனை மிகத் தாமதமாக புரிந்துகொள்ளும் திருமணமான இருவரைப் பற்றிய கதை.
2) இளமையின் ஈர்ப்பும் ரசனையும் ததும்பும் காதலை இழப்பது நியதி. அமைக்க விரும்பும் வாழ்க்கை கைவசமாவது கடினம்