காலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை?

கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் பா.இரஞ்சித் எதிர்ப்பென்பது அவரின் அரசியல் அணுகுமுறை மீதான முரண்பாடுக்கப்பால் ஏதோ ஒரு வெறுப்பரசியலாக மாறி வருகிறது. தவறானவர்கள் சினிமாவில் வளர்ந்து அல்லது சினிமாவைப் பயன்படுத்தி […]

நடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . !

நடிகையர் திலகம் திரைப்படம் பல் வேறு திறமைகள் கொண்ட ஒரு பெண் கலைஞர் உச்சத்திற்குப் போனதும், பின்பு அந்த வாழ்வு கெட்டு வீழ்ந்ததுமான கதை. இந்தப் படம் பெண் தயாரிப்பாளர்கள் தயாரித்த படம். என் தலைமுறைக்கே அவர் வீழ்ந்ததும், அவர் மரணத்தின்போது உழைக்கும் பெண்கள் விழுந்து கதறி அழுததும் குழந்தைப் பருவ நினைவாக நினைவில் இருக்கும்.., பத்திரிகைகள் அவர் குடியால் மட்டும் இறந்தார் என மாய்ந்து மாய்ந்து எழுதியது அந்த வயதிலேயே எனக்குப் பிரச்சினையாகத் தோன்றியது. சாவித்திரி […]

அன்பின் கொடி போதாது அருவிப் பொன்மகளே!

‘பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே’ என்கிறாள் அருவி. ஆனால் அருவிக்கு இருக்கும் பரந்த மனப்பான்மை இவ்வுலகில் எல்லா குற்றங்களையும் சமூக அவலங்களையும் கையாளப் போதுமானதா? இந்த உலகே அன்பால் கட்டப்பட்டது என்பதும், மனிதர்கள் எல்லோரும் தமது சமூக நிலையைத் தாண்டி அடியாழத்திலே அன்பால் கட்டுண்டவர்கள் என்பதும் சரியா? ஒரு பெண் அவளறியாமல் அடைந்த நோய்க்கு நிபந்தனையின்றி வெளியே துரத்தும் தாய் தகப்பன், அடைக்கலமாக வந்த இடத்தில் மகள் வயதிருப்பவளை வல்லுறவுக்கு உட்படுத்தும் ஒரு கிழப் பன்றி, உபன்யாசம் எனும் […]

தீரன் அதிகாரம் ஒன்று – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . !

தீரன் திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. வடிவ ரீதியாகவும் -அரசியல் ரீதியாகவும் தீரன்..  எனது பார்வையில். வடிவம் கொடூர கொள்ளையர்களை பிடிக்கும் போலீஸ் படை என்கிற இந்த உண்மைச் சம்பவ ஒன் – லைனருக்கு சுவாரஸ்யமாக சம்பவங்கள்  அமைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். கொள்ளை கூட்டட்தை மோப்பம் பிடிப்பது – கொள்ளை கூட்டத்தை தேடிப் பிடிப்பது என படத்தில் 2 பவர் ப்ளேக்கள் .இந்த 2 பவர் ப்ளேக்களில் தலா 2 சீக்வென்ஸ்கள் […]

“அறம்” பேசும் அரசியல் . . . . . . .

சினிமா கலைகளின் உச்ச வடிவம். அதன் மொழி, சாகசங்களை நிகழ்த்தவல்லது. ஒளிநிழல் ஊடகமான சினிமா, இருட்டின் மீது பேரொளியைப் பாய்ச்சவல்லது. எந்தக் கலை வடிவமும் மக்களுக்கானது. மக்களின் குரலை, புறநிலை எதார்த்தத்தை, அழகியலோடு காட்சிப்படுத்தும் இந்த சினிமா மக்களுக்கான மீடியம். புராணக்கதைகள் தொடங்கி, சரித்திரம், சாகசம், அடையாளம், பிரச்சாரம், அரசியல் என தமிழ்சினிமாவை  வகைப்படுத்தலாம். “அறம்” அந்த வகையில் அரசியல் சினிமா படைப்பு முன்வைக்கும் அரசியலைவிட, படைப்பாளியின் அரசியலோ, படைப்புக்குப் பின்னுள்ள அரசியலோ பேசுபொருள் இல்லை. படைப்பின் […]

அறம் காண விரும்பு . . .

திருவள்ளுவர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தையும் , புல்லேந்திரனின் மகளுமான தனிஷக்காவின் வாழ்வில் நேர்கோட்டில் வந்துபோனது என்பதையும் அன்றாட வாழ்வியலில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் (BPL ) வர்கத்தினர் அனுபவித்து வருகிறார்கள் என்பதே “அறம்” திரைப்படம் வழியாக இயக்குனர் கோபி நயினார் உருவாக்கிய திரைக்கதை

மகளிர் மட்டும் – ஆண்களின் மனசாட்சியை உறுத்தும் படம் . . . . . !

பெண்களுக்கான படம் என்பதை அறித்து கொளத்தூர் பகுதியிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாதர்சங்க பெண் தோழர்களுடன்  சேர்ந்து இப்படத்தை பார்த்தேன். என் வாழ்நாளில் படத்திற்காக இவ்வளவு பெண்கள் ஒன்றுகூடி பார்த்த முதல் படம் இதுதான். காலம் காலமாக நம் சமூகத்தில் எந்த சூழலும் பெண்களுக்கு தொடர்ந்து கொடுமைகள் நடந்துக் கொண்டுதான் வருகிறது. இதில் குடும்பங்களில் நடக்கும் கொடுமைகளை ஆணுக்கு உணர்த்த எடுக்கப்பட்ட படமாக மகளிர் மட்டும் உள்ளது. அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் சொல்லி இருந்தாலும் இந்த […]

மகளிர் மட்டும் – சாமானியர் பார்வையில் …

குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மகளிர் மட்டும். திரையில் பெண்ணியம் பேசும் படம். பிரபாவதியாக வரும் ஜோதிகா ஒரு ஆவணப்பட இயக்குநர். வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மாவா இருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் ஆவணப்படம் எடுக்கும்போது தனது வருங்கால மாமியாரான ஊர்வசியின் நிலைமை பற்றியும் ஜோதிகாவுக்கு நினைவு வருகிறது. கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார். ஊர்வசி பள்ளிப் பருவத்தில் அவரது தோழிகளான சரண்யா மற்றும் பானுப்ரியாவைப் பிரிந்ததைச் சொல்ல, அந்த மூவரையும் இணைத்து வைக்கவும் […]

துப்பறிவாளன் – விமர்சனம் . . . . . . . !

­மச்சான் மிஷ்கின் ஷாட்டு மாதிரி இருக்குடா என்று குறும்பட இளசுகள் சிலாகிக்கும் அளவு தழிழில் தனக்கென பிரத்யேக திரைமொழியை உருவாக்கி காட்டியவர் மிஷ்கின். கேமராவில் பதிவு செய்வதல்ல சினிமா , கேமரா பேசுவதே சினிமா என்பதை வெகுஜன பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தவர். துப்பறிவாளனில் கேமரா பேசியிருக்கிறதா ? அபாரமாக பேசியிருக்கிறது. காட்சிகளை ஆழ்ந்த  அனுபங்களாக்குவதில் பிற மிஷ்கின் படங்களைப் போலவே துப்பறிவாளனும் ஜெயித்திருக்கிறது. ஆனால் , ஷெர்லாக் ஹோம்ஸ் பிரியர்களுக்கு சோளப்பொரியை மட்டுமே விருந்தாக படைத்திருக்கிறது துப்பறிவாளன். […]