பிரமாண்ட போர்க்களம்: ருத்ரமாதேவி ஒரு பார்வை…

என் மகன் வருவான் என்னை காப்பாற்ற என்று கூறி 25ஆண்டு காலம் சிறையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டு தள்ளாடி தள்ளாடி சுள்ளி பொருக்கும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ள அனுஷ்கா தான். ருத்ரமா தேவியில் மதம்பிடித்த யானையை அடக்கும் பெண்ணாக, வாள் முனையில் ஒரு தேசத்தையே கட்டி ஆளும் ராணியாக, பல ராஜ்யங்களை வீழ்த்தும் ஆளுமையாக, ஒரு நாட்டின் வீரத்தாயாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

கோர்ட் (2015) மராத்தி: இந்திய நீதித்துறையின் அவலக் குரல் …

அரசாங்க ஊழியர்கள் ‘as per papers’ என்று சொல்லி எவ்வளவு மடத்தனமாக நடந்துகொள்வார்கள், மக்களின் அவசரத்துக்கு தகுந்த மாதிரி இல்லாமல் எவ்வளவு மெதுவாக ஒவ்வொரு காரியமும் நடக்கும், அரசாங்கம் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனைக்கூட குற்றவாளி ஆக்கமுடியும் என்பதை நிதர்சனமாக எடுத்து வைத்து வாதாடி இருக்கிறார் இயக்குனர்.

பாகுபலி படம் பார்த்தவர்களுக்காக …

பாகுபலி திரைப்படம் சொல்லும் ஒரு நல்ல கருத்து – ஆட்சி நடத்துபவனுக்கு வெற்றி மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது மக்களின் நல் வாழ்க்கையும் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். மக்களின் நல் வாழ்வு, ஏற்ற தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்காத ஒரு சமூகத்தில் இருந்துதான் பிறக்க முடியும் என்பதைச் சொல்லும் தெளிவு கதை ஆசிரியரிடம் இல்லை.

பாபநாசம் – கதையின் கருத்து சரியா?

பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்

‘ஐ’ – ய்யே -2 : தணிக்கை அதிகாரி பக்கிரிசாமிக்கு சில கேள்விகள் …

‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் அதன் மூலம் இனி வரும் படங்களில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

‘ஐ’ய்யே – ஷங்கருக்கு ஒரு அரங்கக் கலைஞரின் கடிதம் …

உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே (எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜப் பெயரான ஓஜாஸ் என்பதையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

பீகே : நிர்வாணத்தின் கேள்வி

மனித நாகரிகத்தின் வளர்ச்சியை ஒரே வார்த்தையில் வார்த்தையில் விளக்குவது எப்படி ? அவ்வாறு விளக்கம் கூற தகுதியுடையவர் யார் ? மெத்த படித்த மேதாவியால் மடுமே இவ்விளக்கத்தை தர இயலுமா? இந்த கேள்வியை சற்றே நாம் யோசித்தபொழுது ஒரு விஷயம்தான் மனதிற்க்குள் வந்தது. மனித நாகரீகம் எனும் மகத்தான தொட்டிலை கடியெழுப்புவதற்க்கு அஸ்திவாரம் அமைத்தவர்கள் , இன்று நாம் அடிப்படை நாகரீகமாக கருதும் ஆடையை கூட அணிய தெரியாதவர்கள்தான் , என்ற உன்மையை முதலில் நாம் உணர […]

காவியத்தலைவன் – நாடகக்கலையின் வேர்களை நோக்கிய பயணம் !

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை முன்னிலைப் படுத்தி காட்சியமைப்புகள், நாடகத்தின் பரிணாம வளர்ச்சி, காலத்திற்கேற்ப கலைகளை மாற்ற வேண்டிய தேவை, நாடகக் கலையின் வீழ்ச்சி, அதன் குறியீடாக மனிதர்களின் வீழ்ச்சி என நுட்பமான பல விஷயங்கள் படத்தின் திரைக்கதையில் பலம் சேர்க்கிறது. பாரம்பரியத்தில் புதுமையை சேர்க்கலாமா ? வேண்டாமா ? என்கிற வாதத்தை கோமதி மற்றும் காளி மூலம் அவிழ்த்து விட்டு அதற்கான முடிவை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார் இயக்குனர்.

ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !…

தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் வேஷத்திற்கு பின்னணி பாடகனாக அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.

தூம் 3 – கதை சொல்லாமல் ஒரு விமர்சனம் !

அமீர்கான் வில்லனாக நடிக்கிறார். இதுபோதாதா? தூம் 3 படம் பார்ப்பதற்கு! ஏற்கனவே வெற்றிபெற்ற கதைக் களத்தில், காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் திருடன் – போலீஸ் கண்ணாமூச்சியை வைத்து கட்டமைக்கப்பட்ட சுவாரசியமான திரைக்கதைதான் இதுவும். முதல் காட்சியில் ஒரு வங்கிக் கொள்ளை: அமெரிக்காவில் ஒரு வங்கியின் முன், வீடற்ற நபர் ஒருத்தர் பிச்சையேந்திக் கொண்டிருப்பார். அவரது கையில் சில நூறு டாலர்கள் வந்து விழும், சில நொடிகளில் அது பண மழையாகப் பொழியும். அமீர்கான் மேலிருந்து விழுந்துகொண்டிருப்பார். […]