சகாவு – திரை விமர்சனம்.

  மலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ அதிகம் எடுபடுவதில்லை. ஆனாலும் வருடம் முழுவதும் தரமான படங்களை அசாதாரணமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சேட்டன்மார்கள். கம்மட்டிப்பாடம், பத்தேமாரி, அனுராக கரிக்கான் வெள்ளம், கிஸ்மத், அங்கமலி டைரீஸ் இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் வெளியாகி, விமர்சகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்த திரைப்படங்கள். இந்த படங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம், […]

தர்ம் சங்கட் மெய்ன் – திரை விமர்சனம் . . . . . .

தோழர் ஞாட்பன் சிவாவின் பரிந்துரையின் பேரில் சமீபத்தில் ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தேன். ஃபவாத் கானின் இயக்கத்தில் 2015-ல் வெளிவந்த ’தர்ம் சங்கட் மே’ என்கிற ஒரு ஹிந்தி திரைப்படம். காது ஜவ்வுகளைக் கிழிக்கும்படியான கதாநாயகனின் இரைச்சல் சத்தங்களோ, லாஜிக்கே இல்லாத பஞ்ச் வசனங்களோ, சண்டைகளோ இல்லாமல் ஒரு சினிமா எப்படி இயல்பானதாக, நமக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது இந்தப் படம். ஒரு குழந்தையின் பெற்றோரின் மதமே வலுக்கட்டாயமாக அந்தக் குழந்தையின் மீது திணிக்கப்படுகிறது. […]

பைரவா விமர்சனம் . . . . . . !

ஐசி(ஐ)சிஐ (ஹை… நடுவுல ஐ கிடையாது.) வங்கியின் கலெக்சன் பாய் பைரவா, காதலில் விழுந்த பின், காதலுக்காக, காதலிக்காக… காதலியின் தோழிக்காக… கல்வித்தாய் அவதாரம் எடுத்து, கல்வித் தந்தைகளில் ஒருவரை பந்தாடும் கதம்ப மசாலா, பைரவா. அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார், இயக்குநர் பரதன். கடைசியில் பாயாசம் இருக்கு… அதனால சாம்பார் சுமாராத்தான் இருக்கும் என்று சொல்வது போலவே இருக்கிறது முதல் பாதி பைரவா. அதிலும் படத்தின் முதல் காட்சியே நமது […]

தங்கல் — பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் !

இந்தி திரையுலகில்  (பாலிவுட் என்ற சொல்லை அறிந்தே தவிர்க்கிறோம்) தலையில் அடித்துக்கொள்ளும்படியான படங்களுக்கு குறைவில்லை ஆனாலும் அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் , நல்ல கலைஞர்களின் படைப்புகள் என வந்து சற்றே ஆறுதல்படுத்தும். அவ்வாறான ஒரு நல்ல திரைப்படம்தான் தங்கல் . தங்கல் என்றால் யுத்தம் எனப்பொருள். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிங்க் திரைப்படம் எப்படி பெண் குறித்த பல கற்பிதங்களை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பி, கட்டுடைத்ததோ, அதே வரிசையில் சேர்ந்திருக்கிறது தங்கல். […]

பெண்மை எனும் கற்பிதங்களை உடைக்கும் “பிங்க்” . . . . . . . !

“குணக்கேடு” எது குணக்கேடு ? மது அருந்துவதால் , புகை ப்பிடிப்பதால்  ஒருவர் குணக்கேடு உள்ளவராக கூற முடியுமா? விருப்பப்பட்டு ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு உறவு கொள்வதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக ஆகி விடுவாரா? மேற்கேட்ட கேள்விகளுக்கு அவ்வாறெல்லாம் இல்லை . இதுவெல்லாம் குணத்தை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை என நீங்கள் கூறினால் , சபாஷ்!! மிக விசாலமான இதயம் படைத்தவர் நீங்கள் , முற்ப்போக்கானவர்  பகுத்தறிவுவாதி . நிற்க , மேலே ஒவ்வொரு முறையும் “ஒருவர்” […]

Parched – நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை!

நாம் கடந்து வந்த கலாசாரத்தின் சிறு துகள்கள் இன்னமும் இந்த கிராமங்களில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது உணரலாம்!

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் தொ(ல்)லை பேசியின் வாயிலாகவும்,நேரிலும் இறைவி திரைப்படத்தை பார்த்துவிட்டாயா..? அப்படம் மீதான உமது கருத்து என்ன..? என்றெல்லாம் இந்நாட்டின் தேசியத்திற்க்கு ஏதோ பங்கம் வந்துவிட்டது போல் கேள்வி கேட்டு துளைத்ததால் சரி இறைவி என்ற திரைப்படத்தை […]

கபாலி ஆண்டை சிந்தனை கொன்டவர்களை ஆடையாளம் காண வைக்கும் சொல் . . . . . . !

  இரும்பு மனுஷி என்று உலகில் பெயா் வாங்கிய மாா்க் ரெட் தாட்சருக்கு கூட ஒரு ஈரக்குலை தானே?? தமிழகத்தில் பொதுவாகவே பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஆதிக்கசாதிகள்பேசலாம் சினிமாவில் வசனங்கள்கூட எழுதலாம் ஆதிக்கசாதிகள் சேரிக்காரனாக கூட நடிக்கலாம் எவரும்எதையும் சொல்ல மாட்டா்கள் திராவிட கழகத்தினரில் சிலா் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசுவாா்கள் சாதி ஒழிப்பை பற்றியும் பட்டியலின மக்கள் அனுபவிக்கும் ஒடுக்கு முறைகளையும் விலா வாரியாக விளாசுவாா்கள். அனைவரும் கைதட்டி பாராட்டுவா்கள் அந்த பாராட்டு மழையில்இவா்கள்ஆனந்தமாக நனைவாா்கள். […]

‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…

சோகமான கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ கொண்ட எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவை தரும் சோகத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீள்வதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். ஆனால் ஒரு சில திரைப்படங்களின் சோகக் காட்சிகள் மட்டுமே அந்தக் காட்சியையும் தாண்டி பலநாட்கள் நம்மை சோகத்திற்குள்ளாக்கும். அக்காட்சிகளைப் போன்ற கொடுமைகள் நமக்கு அருகிலேயே சிலருக்கு நடந்துகொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிதான் அதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கும். சமீபத்தில் அப்படியாக அதிகமாக பாதித்த திரைப்படங்கள் – தமிழில் விசாரணை, மராத்தியில் ஃபான்றி. “உனக்கு அருகிலேயே […]

“கலாபவன்” மணி எனும் கேரள மண்ணின் மகத்தான கலைஞன் . . . . . . . . !

கேரளாவின் சேனத்துநாடு குன்னிசேரி வீட்டில் ராமன் மணி சாலக்குடியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையின் கசப்பான சுவையை மட்டும் அறிந்து  வளர்ந்த குழந்தை பருவத்துக்கு சொந்தக்காரர். இளமையில் தனக்கிருந்த வாய்ப்பு வசதிக்கு ஒரு ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையைத் துவங்கவே முடிந்தது. பின்னாளில் பன்முகத் திறமை வாய்ந்த திரைக்கலைஞராக பரிணமித்த “கலாபவன் மணி” என்ற புகழ்பெற்ற திரைக்கலைஞர் தான் அவர். மிமிக்ரி செய்வதிலும் நாடகங்களில் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் இளவயதில்  சிறுசிறு மிமிக்ரி நிகழ்ச்சிகளை […]